இடுகைகள்

வினோத் அதானி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

10.வணிகமே செய்யாமல் பெரும்தொகையைக் கடன் கொடுக்க முடியும் - மோசடி மன்னன் அதானி

படம்
  சிங்கப்பூரில் வினோத் அதானிக்கு சொந்தமான நிதி நிறுவனம் உள்ளது. 2013-2015 காலகட்டங்களில், இந்த நிறுவனம் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு அதிக லாபம் காட்டும் விதமாக பயன்படுத்தப்பட்டது.   2013-2015ஆம் ஆண்டு கார்மிசல் அண்ட் போர்ட் சிங்கப்பூர் ஹோல்டிங்க்ஸ் லிட். நிறுவனத்தை வினோத் அதானி நிர்வாகம் செய்து வந்தார். (ப.2) இந்த நிறுவனத்தில் இருந்து மூன்றுநிதி   பரிவர்த்தனைகள் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மொத்த வருமானம் அதிகரித்தது. சொத்துகளுக்கு ஏற்படும் சேதம் அடிப்படையில் பெரிய நிறுவனம் என்ற அங்கீகாரத்தை இழக்கும் நிலையை அதானி குழுமம் நிதி பரிவர்த்தனை மூலம்தான் சமாளித்தது. ஆஸ்திரேலியாவில் உள்ள சுரங்கம், ரயில்வே, துறைமுகம் ஆகிய நிறுவனங்களுக்கு நிதி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன. ஆனால் இந்த நிதி பரிவர்த்தனை அதானி என்டர்பிரைசஸ் நிறுவனங்களின் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஹிண்டன்பர்க் அமைப்பு செய்த ஆய்வில் நிதி பரிவர்த்தனைகளைச் செய்த நிறுவனம் சிங்கப்பூரைச் சேர்

8. மோசடி செய்துவிட்டு நிறுவனத்தின் பெயரை மாற்றிய கேட்டன் பரேக் - மோசடி மன்னன் அதானி

படம்
  இந்தியாவில் இயங்கிய பங்குத் தரகர், கேட்டன் பரேக். முறைகேடுகள் பற்றிய தகவல்கள் இந்திய அரசுக்கு தெரிய வந்ததும் அவரும், அவரின் நெருங்கிய தொழில் கூட்டாளிகளும் தங்களது பங்கு வர்த்தக செயல்பாடுகளை லண்டனுக்கு இடம் மாற்றிக்கொண்டனர். பங்குச்சந்தையைச் சேர்ந்த பங்கு தரகர்கள், கேட்டன் பரேக் தற்போதும் கூட தனது தொழிலை கைவிடாமல் செய்து வருவதாக கூறினர். ‘’கேட்டன் பரேக்கிடம் முன்னர் பங்கு வர்த்தகம் செய்த தொழிலதிபர்கள், வாடிக்கையாளர்கள் இப்போதும் அவரிடம் தொடர்பிலுள்ளனர்’’ கேட்டன் பரேக்கிற்கு நெருங்கிய தொடர்பு கொண்ட பங்கு வர்த்தகர் தகவல் கூறினார். இந்திய ஒழுங்குமுறை அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் கேட்டன் பரேக் செய்த முறைகேடுகளைப் பற்றி விசாரித்து, இறுதியாக தடை, அபராதம் ஆகியவற்றை விதித்தனர். 2001ஆம் ஆண்டு இந்திய அரசு, கேட்டன் பரேக்கிற்கு தண்டனை விதித்தது. பிறகுதான், வேறுவழியில்லலாத கேட்டன் பரேக் தனது செயல்பாடுகளை இங்கிலாந்திலுள்ள லண்டன் நகருக்கு மாற்றிக் கொண்டார். இந்த தகவல் ஊடகங்கள் மற்றும் இங்கிலாந்து பெருநிறுவன ஆவணங்களின்படி தெரிய வந்தது. ஹிண்டன்பர்க் அமைப்பிற்கு பல்வேறு நபர்கள் மூலம் கிடைத்த தகவல

மோசடி மன்னன் அதானி - ராஜேஷ் அதானி, சமீர் வோரா, வினோத் அதானி செய்த குற்றங்கள்

படம்
  கௌதம் அதானி படம் - இந்தியா டுடே அதானி குழும நிறுவனங்கள், பொதுத்துறை   வங்கிகளில் பெருமளவு கடனைப் பெற்றுள்ளன. மொத்தமாக கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க முதலீட்டாளர்கள் தங்கள் ஈக்விட்டி பங்குகளை கொடுக்கலாம். ஆனால் இந்த பங்குகளை வைத்து கடனை எளிதாக தீர்க்க முடியாது. பங்குகளின் விலை குறைந்துபோனால், கடன் வழங்கியவர் உடனே கடனைத் திருப்பிக்கட்ட கோருவார். இச்சூழ்நிலையை சமாளிக்க நிறுவனம் ஈக்விட்டி பங்குகளை விற்று பணத்தை திரட்டும் நிலை உருவாகும். பங்குகளின் விலை குறைந்த நிலையில் அவற்றை தொடர்ந்து விற்கையில் அதன் விலை மேலும் குறையும். அதானி குழுமத்தில் வெளியே தெரிந்த கடன் அளவைத் தாண்டியும், அதிக கடனைப் பெற்றிருக்க வாய்ப்புள்ளது. ஒரு நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகளை வாங்குபவர், அதன்   பகுதி உரிமையாளர் போல என புரிந்துகொள்ளலாம். இந்த பங்குதாரர்கள், நிர்வாக குழுவினர் எடுக்கும் தொழில்ரீதியான முடிவுகளுக்கு ஆதரவாக அல்லது   எதிராக வாக்களிக்க முடியும். நிறுவனம் பெறும் வருமானத்தில் ஈக்விட்டி பங்குகளைப் பெறுபவர்களுக்கு பங்குண்டு. அதானி குழுமம், கௌதம் அதானியின் குடும்ப உறுப