இடுகைகள்

பாரனாய்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாரனாய்ட்டும், ஸிஸோபெரெனியாவும் ஒரே குறைபாடா?

படம்
  ஆளுமை பிறழ்வு குறைபாட்டில் பாரனாய்ட் மற்றும் ஸிஸோய்ட் மற்றும் ஸிஸோடைபல் ஆகிய இரண்டுக்கும் சில ஒத்த அறிகுறிக்ள் உண்டு. அதாவது, நிகழ்காலம் மெல்ல மறந்துவிடும். புதிய பாத்திரங்கள், உலகத்தை உருவாக்கியபடி வாழ்வார்கள்.    ஸிஸோய்ட் குறைபாடு உள்ளவர்களுக்கு சமூக உறவுகள் குறைவாகவே இருக்கும். இவர்கள் தங்களது உணர்ச்சிகளையும் குறைவாகவே வெளிப்படுத்துவார்கள். தங்களுக்கே இப்படியென்றால் பிறரைப் பற்றி நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். கவலையே பட மாட்டார்கள்.  ஸிஸோடைபல் குறைபாடு உள்ளவர்களுக்கு, நெருங்கிய உறவுகளைக் கையாள்வது கடினமாக இருக்கும். இவர்களை எதிர்கொண்டு புரிந்துகொள்வது நெருங்கிப் பழகுபவர்களுக்கு சவால். அப்படியெனில் புதிதான ஆட்களுக்கு எப்படி இருக்கும்?பீதியூட்டும் குணம் கொண்ட மனிதர்களாக தெரிவார்கள் என்று அர்த்தம்.  ஆளுமை பிறழ்வு விவகாரத்தில் ஒருவருக்குள் பல்வேறு மனிதர்கள் எந்த வித ஒற்றுமையும் இல்லாமல் இருப்பது சாத்தியம். மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் என  இதைக் கூறலாம். மனம் குறிப்பிட்ட வாழ்க்கை சம்பவத்தில் காயமுற்று அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கும்போது உயிரை, உடலைக் காக்கும் நோக்கத்த

உறவும் கிடையாது, நம்பிக்கையும் கிடையாது! பாரனாய்ட் பர்சனாலிட்டி டிஸார்டர்

படம்
பாரனாய்ட் என்பதை,  மனதை விட்டு வெளியே என சுருக்கமாக சொல்லலாம். ஆங்கிலத்தில் பேசுபவர்கள் பாரனாய்ட் என்பதை் எளிதாக இயல்பாக பயன்படுத்துவார்கள். பாரனாய்ட் எனும் ஆளுமை பிறழ்வு கொண்டவர்கள் பிறரை எளிதாக நம்ப மாட்டார்கள். இவர்களது தினசரி நடவடிக்கையில் பிறரை நம்பாமல் நடந்துகொள்வது தெரியும்.  அலுவலகமோ, வீடோ, பிற இடங்களோ அங்குள்ள அனைவருமே பாரனாய்ட் பிறழ்வு உள்ளவர்களுக்கு எதிரிகள்தான். அவர்கள் தன்னை தாக்க முயல்கிறார்கள் என்றே நோயாளி நினைப்பார். இதனால், அந்த தாக்குதலுக்கு எப்படி பதில் தருவது என யோசித்தபடி, மனதில் பயந்துகொண்டிருப்பார். இவர்களை சொற்கள், உடல் என யாராவது தாக்கினால் அவர்கள் பாடு கஷ்டம்தான். பழிவாங்க நேரம் பார்த்துக்கொண்டிருப்பார்கள், திருப்பி பதிலடி தருவதிலும் சளைக்காத மனிதர்கள். வார்த்தைக்கு வார்த்தை கண்களுக்கு கண் என எதையும் மறக்காத மன்னிக்காத ஆட்கள்.  பாரனாய்ட் ஆளுமை பிறழ்வு கொண்டவர்களுக்கு ஸீசோபெரெனியா குறைபாடும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வன்முறை எண்ணங்களும், உணர்ச்சிக் கொந்தளிப்பும் பாரனாய்ட் நோயாளிகளுக்கு அதிகம் உண்டு. நடக்காத விஷயங்களை நடப்பதாக, சந்திக்காத மனிதர்களை சந்திப்பதாக