இடுகைகள்

விதிமீறல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தவறுகளை தட்டிக்கேட்போம்! -ரான்பாக்சி முதல் இன்போசிஸ் வரை

படம்
இன்போசிஸ் நிறுவனம் அண்மையில் தவறான வணிக நடவடிக்கைகளுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதன் விளைவாக நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன. இக்குற்றச்சாட்டை முனவைத்தவர் பற்றி பலரும் மறந்திருப்பார்கள். இவர்கள் மீதும் இவர்களின் குடும்பத்தினர் மீதும் கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து மீண்டிருப்பதோடு பல்வேறு நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகளை இவர்கள் வெளிக்கொண்டு வந்துகொண்டே இருக்கிறார்கள். தற்போது பங்குச்சந்தையை முறைப்படுத்தும் செபி, நிறுவனங்களின் தவறான நடவடிக்கையைத் தெரியப்படுத்தினால் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அளிலான பரிசை வழங்குகிறது. தவறுகளை வெளிப்படுத்துவர்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. அவர்களின் புகைப்படம், முகவரி ஆகியற்றை ரகசியமாக பாதுகாக்கின்றனர். 2014ஆம் ஆண்டு இதுபோல தவறுகளை கண்டுபிடித்து கூறுகிறவர்களை பாதுகாக்க அரசு சட்டம் இயற்றியுள்ளது. நிறுவனங்களின் விதிமீறல்களை அரசுக்கு சொல்வது, அமெரிக்காவில் பராக் ஒபாமாவின் ஆட்சியில் 2008ஆம்ஆண்டுதான் தொடங்கியது.அப்போது பொருளாதார சிக்கல்கள் தொடங்கியிருந்தன. எனவே பங்குச்சந்தையைக் காப்பாற்றவே அரசு, வ

மருந்துகளும் தடைகளும்! - நோய் மருந்துகளுக்கு தடை!

படம்
விளையாட்டு உலகில் ஒருவர் தங்கம் வெல்வது முக்கியமானது. அதற்குப் பிறகு அவரின் உடலின் ரத்தம், சிறுநீர் சோதனை நடைபெறும். இதில்தான் வெற்றி பெறும் பல்வேறு வீர ர்களும் மாட்டிக்கொள்கின்றனர். இதில் தடை செய்யப்பட்ட மருந்துகளை அவர்கள் பயன்படுத்தினால் பதக்கம் பறிக்கப்படும். இரண்டாம் நிலையிலுள்ள வீரருக்கு அப்பதக்கம் வழங்கப்படும். இது பெரிய அவமானம். தடை செய்யப்பட்ட மருந்துகளை சாப்பிடுகிறோம் என்பதே வீர ர்களுக்கு தெரிவதில்லை. காரணம் இதிலுள்ள நிறைய குழப்பங்கள்தான். டெஸ்டோஸ்ட்ரோன் நமது உடலில் இயல்பாக சுரக்கும் செக்ஸ் ஹார்மோன்தான் இது. ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்ட்ரோன் அதிகமாக சுரந்தால்தான் அவர்களின் உடல் எலும்புகள் வளர்ச்சி பெறும். தசைகள் வளர்ச்சி சீர் பெறும். இதனை விளையாட்டு வீர ர்கள் தம் எடையைக் கூட்ட தசைகளை வலிமைப்படுத்த பயன்படுத்துகின்றனர். எப்ஹெட்ரின் ஆஸ்துமா பாதிப்பைக் குறைக்க பயன்படுத்தும் மருந்து. இதுவும் எடையை அதிகரிக்கவும், உடல் உறுப்புகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் இந்த மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். டையூரெட்டிக்ஸ் சிறுநீரக கற்களைக் கரைக்கவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்