இடுகைகள்

மே 2019 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புத்தகம் புதுசு! - மே 2019

படம்
புத்தகம் புதுசு! Tell Me Who You Are: Sharing Our Stories of Race, Culture, & Identity by   Winona Guo ,   Priya Vulchi அமெரிக்காவில் நிலவும் இனவேறுபாட்டை பல்வேறு களப்பணி சார்ந்து விளக்கி கூறுகிறார் வினோனா குவோ, பிரியா வல்சி. இன்றைய அமெரிக்கா குறித்து அறிந்துகொள்ள உதவும் முக்கியமான நூல் இது.  You Are Never Alone by   Elin Kelsey ,   Soyeon Kim   (Illustrations) உலகில் நாம் மட்டும் வாழவில்லை. தாவரங்கள் முதல் நுண்ணுயிரிகள் வரை வாழ்வதைக் கூறுகிற நூல் இது. புவியீர்ப்பு முதல் காஸ்மோ கதிர்கள் வரை பேசி, நாம் எப்படி தாவரங்கள் தரும் பிராணவாயுவை சுவாசித்தபடி இயற்கையோடு இணைந்து வாழ்கிறோம் என்பதையும் இந்த நூல் நினைவுபடுத்துகிறது.  Eat to Beat Disease: The New Science of How Your Body Can Heal Itself by   William W. Li புத்தகம் முழுக்க 200 க்கும் மேற்பட்ட உணவுவகைகளைச் சொல்லிக்கொடுத்து நோய்களை விரட்டும் ஐடியாக்களை கூறுகிறார் ஆசிரியர் வில்லியம் டபிள்யூ லீ.  உணவுகளை எப்படி மருந்தாக்குவது என்று விளக்குகிறார் ஆசிரியரும் மரு

வாட்சுகள் புதுசு! - மே 2019 எடிஷன்

படம்
வாட்சுகள் புதுசு! மாண்டலின் எசன்ஸ் மாண்டலின் என்பது ஸ்விஸ்ஸில் ரெயில்வே கடிகாரங்களை தயாரிக்கும் கம்பெனி. மினிமலிச வடிவில் சூழலுக்கு பாதுகாப்பான கடிகாரங்களை தயாரித்து வியக்க வைத்துள்ளனர். மணிக்கட்டில் கட்டும் இதன் ஸ்ட்ராப் கூட மறுசுழற்சி செய்ததுதான். கானுயிர் ஆர்வலர்கள் இந்த வாட்சை கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம். Dressinn.com கேசியோ ஜிஎம்டபிள்யூ பி5000வி இதில் சிறப்பாக சொல்ல ஏதுமில்லை. கேசியோவின் வின்டேஜ் மாடல் வாட்ச். பாதுகாப்பு, அதிர்வு பிரச்னைகள் இல்லாமை இதன் சிறப்பு. பழசு என மனம் தளராதீர்கள். ஓல்டு ஈஸ் பிளாட்டினம் என ச்ந்தோஷப்படுங்கள். Casio - watches.com பெல் அண்ட் ரோஸ் பிஆர் 03  எம்ஏ 1 மிலிட்டரிக்காரர்கள் அணியும் வெடிகுண்டு ஜாக்கெட் வடிவில் இருக்கும் வாட்ச் இது. மற்றபடி புதிய விஷயங்கள் என்று ஏதுமில்லை. bellross.com

கட்டுரை நூல்கள் 3! மே மாத வாசிப்பு

படம்
புத்தக விமர்சனம் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா? நீங்கள் இன்று உங்கள் தந்தையை விட அதிகம் சம்பாதிக்கிறீர்கள். அதிக வசதிகளை அனுபவிக்கிறீர்கள். ரெட்பாக்ஸ் ரெஸ்டாரண்ட் உணவை ஸோமாட்டோவில் ஆர்டர் செய்து சாப்பிடுகிறீர்கள். ஆனால் நீங்கள் வாழும் உலகம் நம்பிக்கையானதா? அதேசமயத்தில் வெனிசுலாவில் ஆட்சியாளருக்கு எதிராக கடும் கலவரம் நடைபெறுகிறது. சோமாலியாவில் சாப்பிட உணவின்றி குழந்தைகள் சாகின்றன. என்ன உலகம் இது? என்று வருத்தப்படவும் வைக்கிறது பூமி. எங்கிருந்து நம்பிக்கை பெற என வருந்தாதீர்கள். அதற்குத்தான் மார்க் மேன்சன் எவ்ரிதிங் இஸ் பக்டு என்ற நூலை எழுதியிருக்கிறார். நீங்கள் நம்பிக்கை கொள்வதற்கான அனைத்து விஷயங்களும் இதில் உண்டு. 2. இந்தியா கிரிப்டோ கரன்சியை நம்பாவிட்டாலும் விங்கிலோவ்ஸ் சகோதரர்கள் அதனை நம்புகிறார்கள். இவர்கள் மார்க் ஸூக்கர்பெர்க்கோடு இணைந்து ஃபேஸ்புக்கை உருவாக்கியவர்கள். பின்னர் மார்க் இவர்களுக்கு டாட்டா சொல்லிவிட இன்று கிரிப்டோ கரன்சி மூலம் மெகா பணக்காரர்கள் ஆகிவிட்டனர். இவர்கள் எப்படி ஜெயித்தார்கள் என்பதை இந்த நூல் விளக்குகிறது. 3. வா