கட்டுரை நூல்கள் 3! மே மாத வாசிப்பு
புத்தக விமர்சனம்
நம்பிக்கை இருக்கிறதா இல்லையா?
நீங்கள் இன்று உங்கள் தந்தையை விட அதிகம் சம்பாதிக்கிறீர்கள். அதிக வசதிகளை அனுபவிக்கிறீர்கள். ரெட்பாக்ஸ் ரெஸ்டாரண்ட் உணவை ஸோமாட்டோவில் ஆர்டர் செய்து சாப்பிடுகிறீர்கள். ஆனால் நீங்கள் வாழும் உலகம் நம்பிக்கையானதா?
அதேசமயத்தில் வெனிசுலாவில் ஆட்சியாளருக்கு எதிராக கடும் கலவரம் நடைபெறுகிறது. சோமாலியாவில் சாப்பிட உணவின்றி குழந்தைகள் சாகின்றன. என்ன உலகம் இது? என்று வருத்தப்படவும் வைக்கிறது பூமி. எங்கிருந்து நம்பிக்கை பெற என வருந்தாதீர்கள். அதற்குத்தான் மார்க் மேன்சன் எவ்ரிதிங் இஸ் பக்டு என்ற நூலை எழுதியிருக்கிறார். நீங்கள் நம்பிக்கை கொள்வதற்கான அனைத்து விஷயங்களும் இதில் உண்டு.
2.
இந்தியா கிரிப்டோ கரன்சியை நம்பாவிட்டாலும் விங்கிலோவ்ஸ் சகோதரர்கள் அதனை நம்புகிறார்கள். இவர்கள் மார்க் ஸூக்கர்பெர்க்கோடு இணைந்து ஃபேஸ்புக்கை உருவாக்கியவர்கள். பின்னர் மார்க் இவர்களுக்கு டாட்டா சொல்லிவிட இன்று கிரிப்டோ கரன்சி மூலம் மெகா பணக்காரர்கள் ஆகிவிட்டனர். இவர்கள் எப்படி ஜெயித்தார்கள் என்பதை இந்த நூல் விளக்குகிறது.
3.
வாழ்க்கையில் அனைவரும் குழந்தைகளாக இருந்து பெரியவர்களானவர்கள்தான். ஆனால் நீங்கள் உங்கள் குழந்தைக்கு கற்றுதரவேண்டியது என்ன என்று கேட்டால், நிச்சயம் அதற்கு ஒரு பதில் வைத்திருப்பீர்கள்தானே? அதேதான் இங்கும் ஆசிரியர் பிரடெரக் பேக்மனும் நகைச்சுவையான மொழியில் எழுதியிருக்கிறார். படியுங்கள். பொறுப்பை உணருங்கள்.