ஜப்பானை உலுக்கியவர்கள்!
ஜப்பான் நாடு, சீனா, கொரியா என பலநாடுகளை காலனியாக்கி சீரழித்த வரலாற்றுக்கு இன்றுவரை பகையும், வன்மமும் அந்நாட்டு உறவுகளில் ஏதோவொரு சமயம் வெளிப்பட்டு வருகிறது.
அந்நாட்டைச் சேர்ந்த பரபரப்பு ஏற்படுத்தியை சைக்கோ கொலைகாரர்கள் குறித்த பார்வை நமக்குத் தேவை. இதோ....
1889 ஆம் ஆண்டு பிறந்த சட்டாரோ ஃபுகியாஜே பெண்களைக் கற்பழித்துக்கொன்றதற்காக 1926 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.
எரடோமேனியா என்று வரலாற்றில் குறிக்கப்படும் கொலைகாரர் சடாரோ, ஓர் கற்பழிப்பு வெறியர். 1906 தொடங்கி 1924 ஆம் ஆண்டு வரை வல்லுறவு வெறியாட்டம் செய்தார். வழக்கு ஆதாரங்களுடன் நின்றது பதினொரு சிறுமிகளைக் கற்பழித்து கொன்றார் என்ற குற்றச்சாட்டுகளில்தான்.
ஆனால் சட்டாரோவைக் கேட்டால் எண்ணிக்கை தெரியாது. சுமாராக 93 பெண்களை கற்பழித்திருப்பேன் என கேசுவலாகச் சொன்னார்.
தடம் மாற்றிய பாலுறவு
ஜப்பானின் கியோட்டோவில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார் சட்டாரோ. வேலைக்குச் சென்றால்தான் ஒருவாய் சோறும் மீனும் கிடைக்கும் நிலை. வேலைக்கும் மறுக்காமல் போனார். அங்கு பதினேழு வயதுப் பெண் அழகாய் இருக்கிறாய், ஆசையாய் இருக்கிறது என ஜொள்ளு வழிய அழைக்க, கூடவே போய்விட்டார். பாலுறவு ஆசை பாய் விரித்தது அங்குதான்.
பாலுறவு வேட்கை வந்துவிட்டால், பெண்ணுக்கு கையடக்கமாக ஆளும் கிடைத்துவிட்டால் ஆசை கரையைக் கடக்கத்தானே செய்யும். வேலை செய்யும் இடத்தில் பாலுறவு செய்யும் நிலையில் பிடிபட்டபோது சட்டாரோவின் வயது பதினொன்றுதான். சிறை சென்று வந்தால் நம் சமூகத்தில் கிடைக்கும் அதே மரியாதைதான் ஜப்பானிலும் .அடுத்த வழக்கு திருடியதாக.... மீண்டும் சிறை.
வெளியே வந்ததும் ஆண் விபச்சாரகராக மாறினார். 54 வயது ஆன்டியிடம் முதல் போணி செய்தார். அதனால் ஏற்பட்ட கசப்போ என்னமோ, பதினொரு வயதுப்பெண்ணை வல்லுறவு செய்து அதன் அடுத்தடுத்த அத்தியாயங்களாக அப்பெண்ணுக்கு அக்கப் பக்கம் தோழிகள் இருப்பார்கள் இல்லையா? அத்தனை பேரின் பிறப்புறுப்புகளையும் சிதைத்தார்.
1906 ஆம் ஆண்டு கின்காகு எனுமிடத்தில் பெண் குழந்தை ஒன்றை வல்லுறவு செய்து கொன்றதுதான் பிரச்னையை பெரிதாக்கியது. உடனே அவரை சிறையில் அடைத்தது போலீஸ். சிறையில் கன்பூசியஸ், சாக்ரடிஸ், அரிஸ்டாட்டில் என நூலகத்தில் தூசு கூட தட்டத்தயங்கும் நூல்களை படித்தார். என்ன பிரயோஜனம் எதுவும் வாழ்க்கைக்கு உதவ வில்லை. 1922 ஆம் ஆண்டு போலீஸ் சட்டாரோவை விடுதலை செய்தது. ஆனால் அவர் மாறவேயில்லை. படித்த விஷயங்களை புட்டத்தில் போட்டு தேய்த்துவிட்டு மூளையில் ஊறல் கொடுத்த சாத்தானை உசுப்பிவிட்டு இரவுக்காரியங்களை தொடர்ந்தார்.
நான்கு வயது சிறுமியின் உடலைக் கசக்கி பாடாய்படுத்தினார் என வழக்கு போடப்பட மீண்டும் சிறை. விடுதலை.
ஜூன் 1923 - ஏப்ரல் 1924 வரையிலான காலகட்டத்தில் ஆறு சிறுமிகளை கற்பழித்து கொன்றதை இணக்கமாக போலீசில் ஏற்றதால், கைது செய்யப்பட்டார். உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. அதையும் இன்முகத்துடன் ஏற்றார்.
இதற்கடுத்த நடந்த ட்விஸ்டை யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. தி ஸ்ட்ரீட் என்ற பெயரில் பெற்றோர் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டியதன் அவசியம் என நூல் வேறு எழுதியிருந்தார் சட்டாரோ. இது பிளாக் காமெடி என அரசு எடுத்துக்கொண்டதால் அது குறித்து ஏதும் சொல்லவில்லை.
ஆக்கம்: பொன்னையன சேகர்
நன்றி: மர்டர் பீடியா, விக்கிப்பீடியா, ரேங்கர் வலைத்தளங்கள்