தற்கொலைக்கு தூண்டிய சைக்கோ மனிதர்!








அசுரகுலம்

ஹிரோஷி மெயுவெ

1968 ஆம் ஆண்டு ஆகஸ்ட் எட்டு அன்று பிறந்தவர் ஹிரோஷி. இவரைப்பற்றி ஏன் எழுதுகிறோம் என்றால் பணத்திற்காக கொலை செய்வது தாண்டி மனநிலையின் அழுத்தம் தாங்காதவர்கள்தான் சமூகத்திற்கு பெரும் சோதனையாக அமைகிறார்கள். இவர்கள், அந்தந்த காலகட்டத்தை நம் மனதுக்கு உணர்த்துகிற சாட்சிகள் கூடத்தான்.


ஹிரோஷி மூன்று பேர்களைக் கொன்றதற்காக தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். மூன்றுபேரையும் நேரடியாக கொல்லவில்லை என்பதுதான் இவரைப் பற்றி நாம் எழுதக்காரணம்.

இவரது ஆளுமை மாற்றத்திற்கு மர்ம நாவல்கள்தான் காரணம் என்றால் நம்புவீர்களா? ஆம் கொலை, கொள்ளை நாவல்களை படித்தவர். அதனை பரீட்சித்து பார்க்க முயற்சித்துதான் பெரும் தீவினையில் அவரைக் கொண்டு வந்து சேர்த்தது. கான்சாவா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜியில் மாணவராக சேர்ந்து படித்தார். அங்கு ஒரு மாணவரை அடித்து கொலை செய்ய முயற்சித்து தோற்றுப்போனார்.  பின், 1988 ஆம் ஆண்டு படிப்பை விட்டு நின்றார். பின் ஏனோதானோவென்று வேலைக்கு சென்று வந்தார்.


மீண்டும் மனதில் அசுரன் தலைதூக்க, யோசிக்கவேயில்லை. கூட வேலை செய்தவரை தூக்கிப் போட்டு மிதித்தார். போலீசாருக்கு புகார் போக எச்சரித்து விட்டுவிட்டனர். ஆனால் மூர்க்கமான ஹிரோஷிக்கு வேலை காலி. குற்றக்கண்கள் திறந்துவிட்டதால், 2001 ஆம் ஆண்டு மீண்டும் ஓராண்டு சிறை. காரணம், பெண்கள்தான். கொலையாக ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டனர். என்ன செய்வது?
அப்போது ஜப்பானில் தற்கொலைகள் நிறைய நிகழ்ந்து வந்தன. சரி கொலைதான் செய்யமுடியவில்லை.

காலம் ஒத்துழைக்கவில்லை எனக்கருதிய ஹிரோஷி இணையத்தில் நுழைந்தார். பலரையும் பேசி தற்கொலை செய்துகொள்ள வைத்தார் . இப்படி 63 பேர்களை பரலோகம் அனுப்பினார். எப்படி கொலை செய்தார் தெரியுமா?

தற்கொலை செய்துகொள்வதற்கான நபர்களை முதலில் அடையாளம் காண்பார். பின்னர், அவர்கள் இமெயிலுக்கு தற்கொலை செய்துகொள்வதற்கான வாய்ப்புகளை அனுப்புவார். அப்படி போன வாழ்க்கையில் திடீர் திருப்பம் அவரின் வாழ்வை மாற்றியது.

ஒசாகாவில் ஒரு பெண் தற்கொலை செய்துகொள்ள விரும்பினார். உடனே அவருக்கு ஜஸ்ட் 23 இமெயில்களை அனுப்பினார். எல்லாமே எப்படி இருந்தன தெரியுமா, காதல் மன்னன் படத்தில் காரைப் பூட்டி செக்யூரிட்டி ஆபீசர் தற்கொலை முயற்சி செய்வாரே அதே முறையில்தான்.

மிச்சிகோ நகமோட்டோ என்ற அப்பெண் இந்த ஐடியாக்களைப் பார்த்து உடனே சாகவில்லை. உடனே அப்பெண்ணை சந்திக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தினார் ஹிரோஷி. சந்தித்த அடுத்தநொடி அப்பெண்ணின் கழுத்தை நெரித்து எமன் வாகனத்தில் பயணிக்க அடுத்த பயணியாக நகமோட்டோவை ரெடியாக்கினார். ஆனால் உடலை மலைத்தொடரில் எறிந்துவிட்டு சென்றது சிக்கலாகிப் போனது. இவரின் கைரேகை அடையாளங்களை கச்சிதமாக சேகரித்து விட்டது போலீஸ்.


ஹிரோஷி ஃபார்முலாவை மாற்றாத ஆள். இதே முறையில் பள்ளி மாணவி கோபேவைக் கொன்றார். போலீஸ் இவரின் இமெயில், கார் வாடகைக்கு எடுப்பது என அனைத்தையும் கண்காணித்தது கொலை வேட்கையில் இவருக்கு தெரியவில்லை. குற்றங்களை மறுத்தாலும் ஆதாரங்கள் கான்க்ரீட்டாக கழுத்தை இறுக்க மரணதண்டனை பரிசு. இவருடன் கூடவே இறந்தவர் மற்றொரு கொலையாளி யுகியோ யமாஜி. இவர் சாதாரண ஆள் கிடையாது. தன் அம்மாவைக் கொன்று, பின் இரு பெண்களைக் கொன்று அவர்களை கற்பழித்த ஆளுமை. இத்தனையும் இருபத்தைந்து வயதில் சாதித்தார் என்பதுதான் முக்கியமான விஷயம்.


கொலை பாணி


ஹிரோஷி பல்வேறு தற்கொலை இணையதளங்களில் உறுப்பினராக இருந்தார். தற்கொலைக்கான வழிகள், உந்துதல்களை தருவது இவருக்கு ஆனந்தமான வேலை. இவரே செய்த கொலைகளில் காரில் நிலக்கரி அல்லது கார்பன் டை ஆக்சடை கிடைக்குமாறு ஏற்பாடு செய்து தற்கொலை செய்துகொள்பவருடன் பேசுவார். அதேநேரம் தன் கைகளால் தற்கொலை செய்யும் நிலையிலுள்ளவரை நெரித்துக் கொல்வதை வீடியோவாக பதிவு செய்யும் பழக்கமுமிருந்தது. அதனை அடிக்கடி பார்ப்பது ஹிரோஷிக்கு மிகவும் பிடிக்கும்.

இதனை பாராபில்லிக் சைக்கோசெக்ஸ் டிஸ்ஆர்டர் என உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். கொலை செய்வதை பாலியல் விடுதலை உணர்வாக கருதி வந்தார் ஹிரோஷி. சிறையிலிருந்து விடுதலை ஆனதும் அடுத்த எபிசோட் கொலையை அரங்கேற்றுவது இவரின் வழக்கம்.

2009 ஜூலை 28 அன்று ஹிரோஷிக்கு மரணதண்டனை வழங்கப்பட கொலைகார ரின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.


ஆக்கம் - பொன்னையன் சேகர்

நன்றி: க்ரைம்பீடியா, ரேங்கர்ஃபாண்டம்





பிரபலமான இடுகைகள்