ஹிட்லர், சதாம் உசேன், காஸ்ட்ரோ குணங்கள் எப்படி?
தலைவர்களின் குணங்கள்
குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்டவர்களைப் பற்றிய அறிக்கை பெரிய ஆச்சரியம் தராது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் குணங்களை ஆராய்ந்து அதனைப் பற்றிய முடிவுகளை கூறுவது நிச்சயம் பலருக்கும் ஆர்வமூட்டும்தானே?
ஹிட்லர், பிடல் காஸ்ட்ரோ, சதாம் உசேன் ஆகியோரைப் பற்றி உளவியலாளர்கள் ஆராய்ந்து என்ன கூறியுள்ளனர் தெரியுமா
ஹிட்லர்
வேதனை, வலிகளை ரசித்து அனுபவிப்பவர். தன்னைப் பற்றிய மிகையான எண்ணங்களைக் கொண்டவர் என்று 1943 ஆம்ஆண்டு ஹென்றி ஏ முர்ரே என்ற ஆய்வாளர் அறிக்கையை எழுதி வெளியிட்டார்.
பிடல் காஸ்ட்ரோ
1961 ஆம் ஆண்டு அமெரிக்க அரசின் உளவியல்துறை மருத்துவர் செய்த ஆய்வில், காஸ்ட்ரோ மக்களின் அங்கீகாரத்துக்கு ஏங்கிய மனச்சமநிலை இல்லாத தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் க்யூபாவுக்கு இடையிலான பிரச்னைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த அறிக்கை அடிபட்டு போகும் அபாயம் உள்ளது.
சதாம் உசேன்
அதிகாரத்தை நோக்கிச் சென்ற சதாம் உசேன் அமெரிக்க அரசால் தூக்கிலிடப்பட்டார். இவர் தனது லட்சியத்தை அடைய யாரையும் பணயம் வைக்குமளவு துணிந்தார். வன்முறை, ஆயுதம் என நினைத்த எதையும் அடைய துணிந்தவர் சதாம் என சிஐஏ குறிப்பிடுகிறது. இதில் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமானது, மனநிலை பிறழ்ந்தவராக சதாம் இல்லை என்பதையே.
குணப்படுத்த முடியுமா?
மனநிலை சார்ந்த பிரச்னைகளுக்கு துவரம் பருப்பை சமைத்தால் பொங்கினால் விளக்கெண்ணெய் ஊற்றி சாந்தப்படுத்துகிறார்கள் அல்லவா? அதுதான் சாத்தியம். குணம் என்பதை இதில் தீர்வாக கூறமுடியாது. அமைதிபடுத்தி வாழலாம்.
இவர்களை மெல்ல வழிக்கு கொண்டு வர தண்டனைகளை சிறை அதிகாரிகள் கொண்டுவரவில்லை. மூளை ரீதியாகவே தண்டனைகளுக்கு மனநிலை பிறழ்ந்தவர்கள் பயப்படுவதில்லை. எனவே அவர்களை சீரமைக்க உருவானதே டீகம்ப்ரசன் மாடல். இதனை மென்டோடா எனும் சிறையில் செயல்படுத்தினர். என்ன ஸ்பெஷல் இதில்? இதில் கைதிகள் செய்யும் சரியான செயல்களுக்கு சிறை அதிகாரிகள் ஏதேனும் ஒரு பரிசை அளிப்பார்கள். இது தொடர்ந்து அதுபோன்ற செயல்களைச் செய்ய தூண்டும்.
தவறுக்கு தண்டனை என்பதையெல்லாம் கைதிகள் பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்பதால் இப்படி ஒரு முறை. மக்களிடம் பழக வாய்ப்பு தராமல், அவர்களிடம் யாரும் பேசாமல் இருப்பதால் திரும்ப தவறான செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு வருவது இம்முறையால் குறையும் என்பது அரசின் நம்பிக்கை.
ஆம். அது உண்மைதான். 34 சதவீத குற்றங்கள் குறைந்தன. இப்பயிற்சி பெறாமல் வெளியே சென்றவர்கள் 50 சதவீதம் பேர் திரும்ப கொள்ளை, கொலை,கற்பழிப்பு செய்து மீண்டும் சிறையை அடைந்தனர்.
ஆக்கம்: பொன்னையன் சேகர்
நன்றி: சயின்ஸ் ஆஃப் பீப்பிள்
படம்: பின்டிரெஸ்ட்