இடுகைகள்

முஸ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நவகாளி யாத்திரை! - கலவரத்தை நிறுத்திய காந்தியின் பயணம்

படம்
  நவகாளி யாத்திரை! - கலவரத்தை நிறுத்திய காந்தியின் பயணம் ஆங்கிலேயர் ஆட்சியின் பிடியிலிருந்து இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரமடைந்தது. அதற்கு முன்னதாகவே இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை, சமாளிக்க முடியாத ஒன்றாக மாறத் தொடங்கியிருந்தது. இதன்விளைவாக, இந்தியா சுதந்திரமடைந்த நாளின்போது கூட காந்தி கலவரங்களைத் தடுப்பதற்கான பணியில் இருந்தார்.   1946 ஆம் ஆண்டு முஸ்லீம் லீக் கட்சி, தனிநாடு கோரிக்கைக்காக தொடர்ச்சியாகப் போராடி வந்தது. இந்நோக்கத்தை அரசுக்கு வலியுறுத்த பேரணி நடத்த முடிவானது.  இறுதியாக, ஆகஸ்ட் 16 ஆம் தேதியை நேரடி நடவடிக்கை நாளாக அறிவித்தது முஸ்லீம் லீக் கட்சி.  முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த இடங்களில் நடந்த கட்சிப் பேரணி, திடீரென வன்முறைப் பாதைக்குத் திரும்பியது. இதன் விளைவாக, கோல்கட்டாவில் வாழ்ந்த இந்துக்களின் கடைகளும், வீடுகளும் கொள்ளையிடப்பட்டன. இதற்கடுத்த நாள் இந்து அமைப்புகள், முஸ்லீம்களின் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தினர். பல்லாயிரக்கணக்கான மக்கள், இக்கலவரத்தில் பலியானார்கள்.  கலவரத்தை முடிவுக்கு கொண்டுவருவது எப்படி என வழிதெரியாமல் ஆங்கில அரசும் திகைத்து நின