இடுகைகள்

உலகம்- இளவரசர் திருமணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இளவரசருக்கு கெட்டிமேளம்!

படம்
ராயல் திருமணம் ! மேகன் அணிந்த திருமண உடையில் கலிஃபோர்னியா மாநில மலரான பாப்பி (Poppy) மற்றும் வின்டர்ஸ்வீட் ( Chimonanthus praecox , ) உள்ளிட்ட மலர்களின் டிசைன் இடம்பெற்றுள்ளது . இளவரசர் ஹாரியின் உடையை தயாரிக்க ஒருவாரம் பிடித்திருக்கிறது . ராணுவத்தில் ஹாரிபெற்ற மெடல்கள் உடையில் இடம்பெற்றுள்ளன . ஹாரி - மேகன் திருமணச்செய்தி ட்விட்டரில் 3.4 மில்லியன் ட்விட்டுகள் எனும் எண்ணிக்கையில் பகிரப்பட்டு சாதனை படைத்துள்ளது . நாம் புகைப்படங்களில் பார்க்கும் ஹாரி - மேகன் முத்தக்காட்சி , மேகன் " நாம் முத்தமிடலாமா ?" என்று கேட்டு ஹாரி ஓகே செய்ததுதான் . அரசகுடும்பத்தின் திருமணவிழாவை டெக்காட ரெக்கார்ட்ஸ் நிறுவனம் இணையத்தில் ஒளிபரப்பியது . விரைவில் டிவிடி வடிவில் தயாராகி விற்பனையாகும் . ஹாரி ஓட்டிவந்த கார் , ஜாகுவார் இ ரக காரின் நம்பர்பிளேட் E190518. ஆம் . திருமண தேதிதான் கார் எண்ணும் கூட . சமையல்கலைஞர் மார்க் ஃபிளானகனால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் மொத்தம் 7,500 வெரைட்டிகள் . சமையல் குழ