இடுகைகள்

மாயக்காட்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இரண்டு இந்தியாக்களைப் பற்றி பேசும் தனிக்குரல் கலைஞன்!

படம்
  உண்மை ஏற்படுத்தும் உறுத்தல் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? அலர்ஜிக்கான மருந்துகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருகிறேன் . ஃபிரன்ட்லைன் சந்தா முடிந்துவிட்டது . இதுவரை வந்த இதழ்களை முழுமையாக படிக்க முடியவில்லை . நிதானமாகத்தான் படித்து வருகிறேன் . இரண்டு இந்தியா பற்றிய மீம்களைப் பார்த்து இருப்பீர்கள் . வீர்தாஸ் என்ற தனிக்குரல் கலைஞர் அமெரிக்காவில் பேசியது சர்ச்சையாகி இருக்கிறது . தீக்கதிர் நாளிதழிலும் அதை செய்தியாக்கியிருந்தார்கள் . சமகால உண்மையைத்தான் பேசியிருந்தார் . வீர்தாஸ் பெண்கள் , சிறுபான்மையினர் மீதான தாக்குதலைப் பற்றி பேசி இருந்தார் . உண்மையைச் சொன்னால் பலரின் மனதுக்கு உறுத்துமே ? சங்கிகள் உடனே வரிந்துகட்டி கிளம்பிவிட்டனர் . இவர்களால் தேவையில்லாமல் கோர்ட்டின் நேரம் வீணாகிறது . வெட்டியாக ஒரு குற்றச்சாட்டு சொல்லி வழக்குகளை போட்டு வருகிறார்கள் . கடந்த 16 ஆம் தேதி பணமதிப்பு நீக்கம் செயல்படுத்தப்பட்டதை நினைவுகூரும் விதமாக தீக்கதிர் நாளிதழில் கட்டுரைகள் வெளியாகியிருந்தது . அதைப் படித்தேன் . இந்த செய்தியில் கார்ட்டூன் கதிரவனின் பிரமாதமான கார்ட்டூனும் இடம்பெற்றிருந்தது .

ஜாதிக்காயை சாப்பிட்டால் மாயக்காட்சிகளைப் பார்க்கலாம்! - உண்மையா? உடான்ஸா?

படம்
  ஆசிய கலாச்சாரத்தில் 4 என்பது அதிர்ஷ்டமில்லாத எண்! உண்மை. மேற்கு நாடுகளில் 13 என்பதை துரதிர்ஷ்டம் தரும் எண்ணாக கருதுகிறார்கள்.  சீனா, கொரியா, தைவான், ஜப்பான் ஆகிய ஆசிய நாடுகளில் நான்கு என்ற எண்ணை துரதிர்ஷ்டமான எண்ணாக பார்க்கிறார்கள். லிப்டில் நான்கு என்ற எண்  மருத்துவமனை அல்லது பிளாட்களில் இருக்காது. சீனாவின் பெய்ஜிங்கில் நான்கு என்ற எண்ணை வண்டியின் நம்பர் பிளேட்டில் பார்க்க முடியாது. நான்கு என்ற எண்ணின் மீதான பயத்தை டெட்ரோபோபியா (Tetraphobia ) என்று அழைக்கின்றனர். நான்கு என்பதை உச்சரிக்கும்போது வலி, மரணம் என்ற அர்த்தம் வருவதே இதனை மக்கள் தவிர்ப்பதற்கு முக்கியக்  காரணம்.  பற்களில் ஏற்படும் குறைபாட்டை அதனால் தானாகவே சரிசெய்துகொள்ள முடியாது! உண்மை. காரணம், அது எனாமல் கோட்டிங்கை கொண்டுள்ள பொருள். உயிர்வாழும் திசு அல்ல. நாம் கண்ணுக்கு தெரியும் பற்களின் வடிவத்தை க்ரௌன் (Crown) எனலாம், இதன் மேலுள்ள பூச்சுதான் எனாமல். இதனை அமலோபிளாஸ்ட்ஸ் என்ற செல்கள் உருவாக்குகின்றன. பற்கள் பழுதாகி அமலோபிளாஸ்ட்ஸ் (ameloblasts)செல்களை இழந்துவிட்டால், அதனை திரும்ப உருவாக்க முடியாது. இதனால் பற்களில் ஏற்படும் பழ