ஜாதிக்காயை சாப்பிட்டால் மாயக்காட்சிகளைப் பார்க்கலாம்! - உண்மையா? உடான்ஸா?
உண்மை. மேற்கு நாடுகளில் 13 என்பதை துரதிர்ஷ்டம் தரும் எண்ணாக கருதுகிறார்கள். சீனா, கொரியா, தைவான், ஜப்பான் ஆகிய ஆசிய நாடுகளில் நான்கு என்ற எண்ணை துரதிர்ஷ்டமான எண்ணாக பார்க்கிறார்கள். லிப்டில் நான்கு என்ற எண் மருத்துவமனை அல்லது பிளாட்களில் இருக்காது. சீனாவின் பெய்ஜிங்கில் நான்கு என்ற எண்ணை வண்டியின் நம்பர் பிளேட்டில் பார்க்க முடியாது. நான்கு என்ற எண்ணின் மீதான பயத்தை டெட்ரோபோபியா (Tetraphobia ) என்று அழைக்கின்றனர். நான்கு என்பதை உச்சரிக்கும்போது வலி, மரணம் என்ற அர்த்தம் வருவதே இதனை மக்கள் தவிர்ப்பதற்கு முக்கியக் காரணம்.
பற்களில் ஏற்படும் குறைபாட்டை அதனால் தானாகவே சரிசெய்துகொள்ள முடியாது!
உண்மை. காரணம், அது எனாமல் கோட்டிங்கை கொண்டுள்ள பொருள். உயிர்வாழும் திசு அல்ல. நாம் கண்ணுக்கு தெரியும் பற்களின் வடிவத்தை க்ரௌன் (Crown) எனலாம், இதன் மேலுள்ள பூச்சுதான் எனாமல். இதனை அமலோபிளாஸ்ட்ஸ் என்ற செல்கள் உருவாக்குகின்றன. பற்கள் பழுதாகி அமலோபிளாஸ்ட்ஸ் (ameloblasts)செல்களை இழந்துவிட்டால், அதனை திரும்ப உருவாக்க முடியாது. இதனால் பற்களில் ஏற்படும் பழுதை தானாகவே சரிசெய்வது கடினம். எனவே மருத்துவர் பரிந்துரைப்படி ஃப்ளூரைட் உள்ள பற்பசைகளைப் பயன்படுத்தி பல்துலக்குவது நல்லது.
ஷவரில் குளித்தால் புதுமைத்திறன் வளரும்
உண்மையல்ல. செல்போன், ஸ்மார்ட்வாட்ச், வலைத்தொடர்கள், சமூக வலைத்தளம் என இணைந்துள்ளோம். இதனால் தொற்றும் பரபரப்பு சிறப்பான முறையில் யோசிக்க விடாமல் செய்கிறது. இவற்றிலிருந்து விலகி உங்களை நெகிழ்வான உணரும் இடம்தான் குளியலறை. நீர் உடலை நெகிழ்த்தும் அந்த நேரத்தில் புதிய ஐடியாக்கள் பிறக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு இப்படி உடலையும், மனதையும் நெகிழ்த்தும் இடமாக பைக் பயணம், மலையேற்றம் என எதுவாகவும் இருக்கலாம். சூழல் முக்கியம்தான். அதேநேரம் தீர்வைத் தேடுவதில் விடாமுயற்சியும் உழைப்பும் இருந்தால் மட்டுமே அது கிடைக்கும் என்பதை மறக்காதீர்கள்.
ஜாதிக்காயை உணவில் சேர்த்தால் மாயக்காட்சிகளை உருவாக்கும்!
உண்மை. ஜாதிக்காயை அதிகளவு சேர்த்துக்கொண்டால் இப்படி நேரிட வாய்ப்புள்ளது. இதில், மைரிஸ்டிசின் (myristicin)எனும் வேதிப்பொருள் உள்ளது. அதிகளவு இதனை சாப்பிடும்போது, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும். கூடுதலாக, மாயக்காட்சிகளை காணும் பாதிப்பும் உருவாகும்.
ஒருவர் குறிப்பிட்ட விவகாரம் பற்றி கருத்து தெரிவிப்பதைக் குறிக்க அல்ட்ராகிரிபிடாரியன் ('ultracrepidarian') என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம்!
பாதி உண்மை. அல்ட்ராகிரிபிடாரியன் என்பதற்கு, விஷயத்தின் அடிப்படை தெரியாமல் கருத்து தெரிவிப்பது என்று பொருள். டிவி விவாதங்களில், புத்தக விமர்சனங்களில் விஷயமே தெரியாத சிலர் இப்படி பேசி நேரத்தை வீணடிப்பார்கள். பசுவைப் பற்றிய கேள்விக்கு, தென்னையைப் பற்றி மட்டுமே பேசி, மகத்தான இந்த தென்னை மரத்தில்தான் பசு கட்டப்பட்டிருந்தது என எழுதினால் எப்படியிருக்கும்? அதைத்தான் இப்படி குறிப்பிடுகிறார்கள்.
https://people.howstuffworks.com/number-4-unlucky.htm?utm_source=HowStuffWorks+Newsletter&utm_medium=email&utm_campaign=themed-numbers-drip
https://www.cosmopolitan.com/uk/worklife/a33367076/fun-facts-random/
https://www.scienceabc.com/humans/why-dont-teeth-heal-like-skin-and-other-body-parts.html
https://www.businessinsider.in/strategy/72-of-people-get-their-best-ideas-in-the-shower-heres-why/articleshow/50583541.cms
https://abcnews.go.com/Health/large-doses-nutmeg-hallucinogenic-high/story?id=12347815#:~:text=Nutmeg%20contains%20myristicin%2C%20a%20natural,be%20hallucinogenic%2C%20much%20like%20LSD.
கருத்துகள்
கருத்துரையிடுக