இடுகைகள்

# ஏன்? எதற்கு? எப்படி?உடற்பயிற்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறுநீர், மலத்தின் மூலம் உடல்நிலையை கணிக்க முடியும்! அமெரிக்க ஆய்வில் தகவல்

படம்
ஜிபி உடல்நிலையைக் கணிக்கும் ஸ்மார்ட் டாய்லெட்! அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கழிவறையில் ஸ்மார்ட் பொருட்களை பொருத்தி அதன் மூலம் மனிதர்களுக்கு சிறுநீரகம் மற்றும் ஆசனவாயில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முயன்றுள்ளனர். இந்த கழிவறையின் பெயர் ஐபிலாப் ஆகும். நாம் காந்தியைப் போல சிறுநீர் அல்லது மலம் கழிப்பதை அவ்வளவு கவனமாக பார்ப்பதில்லை. இந்த ஸ்மார்ட் கழிவறையில் பொருத்தப்பட்டுள்ள கேட்ஜெட்ஸ் மூலம் சிறுநீரின் அளவு, அதிலுள்ள கழிவுப்பொருட்களின் தன்மை ஆகியவற்றை அளவிட்டு புற்றுநோய் வாய்ப்பு, சிறுநீரக செயலிழப்பு, தொற்றுநோய்கள் வரையில் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மருத்துவர் சஞ்சீவ் காம்பீர் குழுவினரின் முயற்சியில் இந்த கழிப்பறை தயாரிக்கப்பட்டு 21 தன்னார்வலர்களைக் கொண்டு சோதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை தொடர்பான அறிக்கை நேச்சர் பயோமெடிக்கல் எஞ்சினியரிங் இதழில் வெளியாகியுள்ளது. இந்த சோதனைகள் உங்களுக்கு வினோதமாக தோன்றலாம். ஆனால் இம்முறையில் மனிதர்களின் நோய்களை குறிப்பாக சர்க்கரை நோய், புற்றுநோய் ஆகியவற்றை எளிமையாக கண்டுபிடிக்க முடி

ஐபிஎல் விளையாட்டு மக்களின் மனநிலையை மாற்றும் - சஞ்சு சாம்சன்

படம்
manorama சஞ்சு சாம்சன் , விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பொது முடக்க காலத்தில் எப்படி பயிற்சி செய்கிறீர்கள் ? உடல்நலத்தை பராமரிக்கிறீர்களா ? பொதுமுடக்க காலத்திற்கு முன்னே பயிற்சிக்கான சாதனங்களை நான் வாங்கி வைத்துவிட்டேன் . தற்போது எனது பயிற்சியாளரின் உதவியுடன் எளிமையான உடற்பயிற்சிகளை செய்துவருகிறேன் . வீட்டின் மொட்டை மாடியில் மாலை நேரம் பயிற்சி செய்கிறேன் . கிரிக்கெட்டிற்கான தனிப்பட்ட பயிற்சிகள் எப்படி செல்கின்றன ? என் தம்பியின் வீட்டு மாடியில் அதற்கான இடத்தை அமைத்துள்ளேன் . அங்கு டென்னிஸ் பந்து மூலம் பயிற்சி செய்கிறேன் . விக்கெட் கீப்பருக்கான பயிற்சியாக சுவரில் பந்தை எறிந்து அதை ஒற்றைக் கையில் பிடித்து பயிற்சி நடைபெறுகிறது . இது ஐபிஎல் விளையாடும் நேரம் அல்லவா ? எப்படி உங்களை உற்சாகப்படுத்திக்கொள்கிறீர்கள் ? கடந்த எட்டு ஆண்டுகளாக ஐபிஎல் விளையாடி வருகிறேன் . இடைவிடாத பயிற்சிகள் செய்துகொண்டு வருகிறேன் . இப்போது , பெருந்தொற்று காரணமாக விளையாட முடியவில்லை . பொதுமுடக்க காலத்தை எதிர்கொள்வது கடினமாகவே இருக்கிறது . அதிலும் முதல் இ

நிறுவனங்களை வளர்ப்பதை விட விற்பதற்கே முயல்கிறார்கள்! - ஒரு துளி மணலில் ஓர் உலகு!

படம்
அன்புத்தோழர் ராமமூர்த்திக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? கடந்த வாரமே நான் இந்த கடிதத்தை எழுதியிருக்கவேண்டும் . ஆனால் இடையில் வந்த கல்யாணம் ஒன்று சிக்கலை ஏற்படுத்திவிட்டது . இஸ்லாமிய நண்பரின் வீட்டுக்கு கல்யாணச் சாப்பாடு வெறியில் போய்விட்டேன் . பிரியாணியை அள்ளி திணித்த வேகத்தில் செரிமானத்தின்போது வயிறு விண்டோஸ் போல ஷட்டவுண் ஆகிவிட்டது . வயிறைக் காலி செய்ய நேரமாகிவிட்டது . அலுவலகத்தில் கடிதம் எழுதிவிடலாம்தான் . ஆனால் வாட்ஸ்அப் காலத்தில் கடிதமா என அதிசயப் பிறவி போல பார்க்கிறார்கள் . என்னடா பிரச்னை உங்களுக்கு என வாய்க்கு வந்த விஷயங்களைப் பேசினால் சண்டை வந்துவிடும் . இரவில் மட்டும்தான் சொந்த வேலைகளை , எழுத்து வேலைகளைப் பார்க்கிறேன் . இந்த ஆண்டு தீபாவளி மலரில் எங்கள் ஆசிரியர் கே . என் . சிவராமன் எதுவுமே எழுதவில்லை . எனக்கு இதில் பெரும் வருத்தம் . அவருக்கு எழுதுவதில் இப்போதெல்லாம் விருப்பமில்லை . அனேகமாக வேலைகள் அழுத்தம் காரணமாக இருக்கலாம் . தினசரி ஆறு மணிக்கு மேல் அவரை இருக்கையில் பார்ப்பது கடினம் . நாம் உட்கார்ந்திருந்தால் கோபம் வந்துவிடும் . மெல்ல அதட்டுவ

வாக்கிங் செல்லும்போது வாயில் எச்சில் சுரப்பது ஏன்?

படம்
மிஸ்டர் ரோனி ஓடும்போது அதிக எச்சில் சுரப்பது ஏன்? குளிர்ந்த சூழலில் ரீபோக் ஷூ மாட்டிக்கொண்டு ஓடினால் உங்களுக்கு வாயில் எச்சில் அதிகம் சுரக்கும். ஆனால் அதுவே வெயில் நேரத்தில் மாராத்தான் ஓடினால் எச்சில் சுரக்காது. மூக்கு வழியாக மூச்சு விடாமல் வாய் வழியாக மூச்சு விட்டால் எச்சில் சுரப்பு அதிகரிக்கும். உடல் தன் தேவைக்கான நீரை பெற தாமதம் ஆனால் எச்சில் சுரப்புக்கு நீரை செலவழிப்பதை நிறுத்திவிடும், ஏனெனில் உடலின் பிற உறுப்புகளுக்கு நீர் வேண்டுமே? உடற்பயிற்சிகள் தீவிரமாகச்செய்யும்போது எம்யுசி5பி (MUC5B ) புரதம் சுரக்கிறது. இது இயல்பாகவே உடலின் எச்சில் சுரப்பை அதிகரிக்கிறது. மேலும் எச்சிலின் அடர்த்தியை அதிகரிக்கப்பதும் இதுதான். நன்றி - சயின்ஸ் ஃபோகஸ்