இடுகைகள்

இந்தியா- ஸ்மார்ட்சிட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்மார்ட்சிட்டி பிளான்!

படம்
ஸ்மார்ட் நகரங்கள் ! 2015 ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று நரேந்திரமோடி அறிவித்த ஸ்மார்ட்சிட்டி திட்டம் (Smart Cities Mission (SCM ) நூறு நகரங்களை மேம்படுத்த உருவாக்கப்பட்டது . ஐந்தாண்டில் ஆண்டுதோறும் நகரங்களுக்கு நூறுகோடி ரூபாய் நிதியளிப்பது இந்திய அரசின் திட்டம் . வீடு , போக்குவரத்து , திறந்தவெளிபரப்புகள் , கழிவு மற்றும் போக்குவரத்து மேலாண்மை ஆகியவை ஸ்மார்ட் நகரங்களில் மேம்படுத்தப்படும் . மெட்ரோரயில் பணி (35.9%), பிஎம்ஆவாஸ் யோஜனா (15.6%), ஸ்மார்ட் சிட்டி (14.8%), ஸ்வட்ச் பாரத் (6%), அடல்நகரமேம்பாடு (14.4%) என 2018-2019 ஆண்டு அரசின் நிதி ஒதுக்கீடு அமைந்துள்ளது . தேர்ந்தெடுக்கப்பட நூறு நகரங்களில் நடைபெறவுள்ள திட்டங்கள் 4,500. திட்ட மதிப்பு 2 லட்சத்து 3 ஆயிரத்து 979 கோடி ரூபாய் . நூறு கோடிக்கு மேற்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை 329. வீடு கட்டுமான திட்டங்களின் மதிப்பு - 17,036 கோடி . 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக திட்டமதிப்பு கொண்ட 98 திட்டங்கள் அரசு - தனியார் கூட்டில் நடைபெறவிருக்கின்றன .   ஜனவரி 2016