இடுகைகள்

நவாசுதீன் சித்திக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதுவும் செய்யாமல் இருக்க ஆசைப்பட்டேன். பெருந்தொற்று காலம் தற்செயலாக கிடைத்தது! நவாசுதீன் சித்திக்

படம்
      நவாசுதீன் சித்திக்   நேர்காணல் நவாசுதீன் சித்திக் படப்பிடிப்பு இல்லாத காலம் எப்படி இருந்தது ? எனக்கு படப்பிடிப்பு இல்லாத காலம் தேவைப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும் . பெருந்தொற்று காலகட்டம் நான் எதிர்பாராமல் எனக்கு கிடைத்தது . உத்தரப்பிரதேசத்தில் உள்ள எனது புதானா கிராமத்தில் விவசாய வேலைகள் செய்தேன் . இக்காலகட்டத்தில் 250 படங்களை பார்த்தேன் . டென்ஷில் வாஷிங்டன் , டேனியல் டே லூயிஸ் , ஆன்டனி ஹாப்கின்ஸ் ஆகிய எனக்குப் பிடித்த நடிகர்களின் படங்களைப் பார்த்தேன் . இது எனது சினிமாக்களை மேம்படுத்த உதவும் என நம்புகிறேன் . சினிமாவில் இருபது ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறீர்கள் . உங்கள் பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள் . நான் இப்போதும் வேலை செய்துகொண்டிருக்கிறேன் . இனியும் பணியாற்றுவேன் என்று நினைக்கிறேன் . சிலசமயங்களில் நான் நடிக்கும் படம் வெற்றிபெறும் . அல்லது தோல்வியுறும் . இது எனது கையில் கிடையாது . கதாப்பாத்திரங்கள் எனக்கு பிடித்திருந்தால் நடிக்கிறேன் . அதில் உள்ள சவால்கள் என்னை மெருகேற்றுகின்றன . நாயகனாக நடிக்கும் படங்களில் என்ன எதிர்பார்க்கிறீர்கள் .

தலித் அரசு பணியாளர் தனது மகனை ஜீனியஸ் ஆக்க நடத்தும் சீக்ரெட் திட்டம்! சீரியஸ்மேன் - சுதீர் மிஸ்ரா

படம்
            சீரியஸ்மேன் சுதீர் மிஸ்ரா Director: Sudhir Mishra Writers: Niren Bhatt (additional screenplay), Manu Joseph (Based on the book by படம் பொறுப்புள்ள மனிதர்கள் என்ற நாவலைத் தழுவியது. இதனை மனுஜோசப் எழுதியுள்ளார். அறிவியல் கழகங்களில் பிராமணர்கள் எப்படி தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு பதவிகளை அடைய முயல்கிறார்கள் என்பது நாவலில் ஒரு கதை. மற்றொன்று அய்யன் மணி என்ற உதவியாளர் தனது மகனை ஜீனியஸ் ஆக நிரூபிக்க என்னென்ன தகிடுதத்த வேலைகளை செய்கிறார் என்பது மற்றொரு கதை.  படத்தில் அய்யன் மணி, அவரது மகனை  எப்படி ஜீனியஸாக மாற்றுகிறார், அதற்கு அவர் செய்யும் வேலைகள் என்ன, அதன் பாதிப்பு, ஆகியவற்றை சிறப்பாக விவரித்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தியில் சீரியஸ்மென் டப் செய்யப்பட்டுள்ளது. தமிழில் படத்தைப் பார்க்கும்போது, அய்யன் மணி ஓஜாவை திருமணம் செய்துகொண்டுள்ளது கூறப்படுகிறது. சப்டைட்டிலில் அவர் தமிழ்ப்பெண் என வருகிறது. ஆனால் தமிழ் டப்பில் அவர் தெலுங்குப் பெண்ணாக காட்டப்படுகிறார். ஹோட்டலில் நீச்சல் குளத்தருகில் பிரசவக்காட்சி இதற்கு உதாரணம். தன்னைச்சுற்றி என்ன