இடுகைகள்

நேர்காணல் - ரேணுகடார்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உண்மையான கல்வி வாழ்க்கைக்கு இளைஞர்களை தயாரிப்பதுதான்!

படம்
நேர்காணல்! “இளைஞர்களை வாழ்வதற்கு தயார் செய்வதுதான் உண்மையான கல்வி” ரேணு கடோர், தமிழில்: ச.அன்பரசு உ.பியின் ஃபருகாபாத்தில் பிறந்தவரான ரேணு கடோர், தன் 19 வயதிலேயே அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். பர்டியூ பல்கலையில் முதுகலை பட்டம் வென்றவர் இன்று ஹூஸ்டன் பல்கலையின் தலைவராக உயர்ந்திருக்கிறார். ஃபரூக்காபாத் டு ஹூஸ்டன் வரையிலான பயணத்தில் முக்கியமான திருப்பங்களாக கருதுபவற்றை கூறுங்கள். பர்டியூ பல்கலையில் அட்மிஷன் கிடைத்தது முக்கியமான திருப்பம். இன்று நான் பெற்றுள்ள விஷயங்களுக்கு அதுவே ஆதாரம். பேராசிரியராக பணியாற்றியபோது, ஆராய்ச்சி செய்ய என் நண்பர் வற்புறுத்திய நிகழ்ச்சி என் வாழ்வை மாற்றிய இரண்டாவது நிகழ்வு. பல்கலைக்கழக தலைவருக்கு உதவியாளராக இருந்தபோது சமூகத்திற்கும் பல்கலைக்க்கழகத்திற்குமான உறவை புரிந்துகொண்டேன். தலைமைத்துவ வழிகளை எனது தந்தை வழியாக கண்டறிந்தேன். அமெரிக்காவில் ஆங்கிலம் தெரியாமல் எப்படி சமாளித்தீர்கள்? அமெரிக்காவுக்கு வந்து ஆறுமாதங்கள் கழித்து கீழே லாண்ட்ரிக்கு துணிகளை சலவை செய்ய சென்றேன். திடீரென மூடிக்கொண்ட கதவை எப்படி திறப்பது, ய