இடுகைகள்

முத்தாரம் தொடர்- நம்பிக்கை தரும் இளைஞர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வருண் சிவராம்! சாதித்தது எப்படி?

படம்
தலைவன் இவன் ஒருவன் வருண் சிவராம் பகதூர் ராம்ஸி 2015 ஆம் ஆண்டு வெளியுறத்துறை கவுன்சிலில் இணையும் முன் சூழல் குறித்த எந்த நிகழ்விலும் பங்கேற்றிருக்காத மனிதர் வருண் . ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையில் இயற்பியல் கற்ற வருண் , புதுப்பிக்கும் ஆற்றல் துறையில் நம்பிக்கை கொண்டு செயல்பட்டு வருகிறார் . " முடிந்தளவு கரிம எரிபொருட்களால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதே லட்சியம் . சூரிய மின்னாற்றல் துறை என் தந்தை ஈடுபட்டிருக்கும் துறை என்பதோடு எனக்கு மிகப்பிடித்தமானது " என்று புன்னகைக்கிறார் வருண் . நியூயார்க் நகரத்திற்கான நிர்வாக கவுன்சிலில் ஆற்றல்துறையில் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார் வருண் . மெக்கின்ஸி அண்ட் கோ நிறுவனத்தில் ஆலோசகராக பணிபுரிந்த வருண் தற்போது நியூயார்க் மற்றும் வாஷிங்டன் மேயர்களுக்கு ஆற்றல்துறை சார்ந்த ஆலோசகரான பணிபுரிகிறார் . அதோடு ஜார்ஜ்டவுன் பல்கலையில் பசுமை ஆற்றல் கண்டுபிடிப்புகளைப் பற்றி மாணவர்களுக்கு கற்றுத்தருகிறார் . " இந்தியாவில் சோலார் பேனல்கள் என்பவை எதிர்காலத்திற்கான ஆற்றல் மூலாதாரங்கள் . மலிவான விலையில் சோலார் பேனல்கள் கிடைத்தாலும் இங்கே நில

தலைவன் இவன் ஒருவன்!

படம்
தலைவன் இவன் ஒருவன் கேத்தரின் மில்லர் பகதூர் ராம்ஸி லோகோ: கார்ட்டூன் கதிர் குறிப்பு: 11.5.2018 இதழோடு நான் எழுதிவந்த தலைவன் இவன் ஒருவன் எனும் சமூகநலம் சார்ந்த தொழிலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இளைஞர்கள் பற்றிய தொடர்(42 வாரம்) நிறைவடைகிறது. இத்தொடருக்கு லோகோக்களை செய்து தந்த Aum Designs மெய்யருள், மற்றும் கார்ட்டூன் கதிர் ஆகியோருக்கு என் நன்றிகள் கோடி. இத்தொடரை அனுமதித்த குங்குமத்தின் முதன்மை ஆசிரியர் கே.என்.சிவராமன், முத்தாரம் உதவி ஆசிரியர் ச.அன்பரசு ஆகியோருக்கும் என் பேரன்பு. -பகதூர் ராம்ஸி   அமெரிக்காவிலுள்ள ஜேம்ஸ் பியர்ட் பவுண்டேஷனில் பணிபுரியும் கேத்தரின் மில்லர் , செஃப்களை இணைத்து ஆரோக்கிய உணவுகளை தயாரிக்க வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகிறார் . " சமையல் குறித்த கருத்துகளை மக்களிடம் பேச விரும்பினால் , உங்களுக்கு சமையல் டெக்னிக்குகள் நன்றாக தெரிந்திருப்பது அவசியம் " என்கிறார் கேத்தரின் . உள்ளூர் உணவுவகைகளை பிரபலப்படுத்த செஃப்களுடன் இணைந்து செயல்படுவது , நாஷ்வில்லே மேயர் மேகன் பேரியுடன் இணைந்து உணவு வீணாவதை தடுக்கும் உணவு சேமிப்பு சவ