வருண் சிவராம்! சாதித்தது எப்படி?
தலைவன் இவன் ஒருவன்
வருண் சிவராம்
பகதூர் ராம்ஸி
2015 ஆம்
ஆண்டு வெளியுறத்துறை கவுன்சிலில் இணையும் முன் சூழல் குறித்த எந்த நிகழ்விலும் பங்கேற்றிருக்காத
மனிதர் வருண். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையில் இயற்பியல் கற்ற வருண்,
புதுப்பிக்கும் ஆற்றல் துறையில் நம்பிக்கை கொண்டு செயல்பட்டு வருகிறார்.
"முடிந்தளவு கரிம எரிபொருட்களால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதே லட்சியம்.
சூரிய மின்னாற்றல் துறை என் தந்தை ஈடுபட்டிருக்கும் துறை என்பதோடு எனக்கு
மிகப்பிடித்தமானது" என்று புன்னகைக்கிறார் வருண்.
நியூயார்க் நகரத்திற்கான
நிர்வாக கவுன்சிலில் ஆற்றல்துறையில் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார் வருண். மெக்கின்ஸி
அண்ட் கோ நிறுவனத்தில் ஆலோசகராக பணிபுரிந்த வருண் தற்போது நியூயார்க் மற்றும் வாஷிங்டன்
மேயர்களுக்கு ஆற்றல்துறை சார்ந்த ஆலோசகரான பணிபுரிகிறார். அதோடு
ஜார்ஜ்டவுன் பல்கலையில் பசுமை ஆற்றல் கண்டுபிடிப்புகளைப் பற்றி மாணவர்களுக்கு கற்றுத்தருகிறார்.
"இந்தியாவில்
சோலார் பேனல்கள் என்பவை எதிர்காலத்திற்கான ஆற்றல் மூலாதாரங்கள். மலிவான விலையில் சோலார் பேனல்கள் கிடைத்தாலும் இங்கே நிலங்களை விலைக்குப் பெறுவது
சிக்கலாக இருக்கிறது" என எதார்த்தம் அறிந்து பேசுகிறார்
வருண். 2011 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு மலிவான
விலைக்கு சோலார் பேனல்கள் குவிந்தன. அப்போது வருங்காலம் புதுப்பிக்கும்
ஆற்றல்தான் என்பதை உணர்ந்தார் வருண்.
"சோலார் துறையில் மூர் கொள்கை
செயல்படாது" என்னும் வருண், சோலார்
பேனல்களுக்கு மாற்றாக சிலிக்கான் வேபர் தகடுகளை ஆற்றல் சேமிக்க பயன்படுத்த பரிந்துரைக்கிறார்.
2013 ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு படிப்புக்கு பிறகு இவர் பரிந்துரைத்த வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை
பொருத்தும் திட்டம் நியூயார்க நகரில் செயல்படுத்தப்பட்டு மக்களின் பாராட்டுக்களைப்
பெற்றது. The Geopolitics of
Renewables என்ற நூலை சாகதம் சாகாவுடன் இணைந்து எழுதியுள்ளார்.
புதுப்பிக்கும் ஆற்றல்துறையில் அலெக்ஸாண்டர் ஹாமில்டன் எனவும் புகழாரம்
பெற்ற நவீன இளைஞர் இவர்.
"நான்
முதலில் நானோசோலார் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தேன். எதிர்காலத்தில்
சிலிக்கானில் பேனல்கள் உருவாவது உறுதி. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையில்
எனக்கு ஸ்டார்ட்அப் அனுபவம் கிடைத்தது. கொள்கை மற்றும் களப்பணி
அளவிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் நம்பிக்கை தற்போது என்னிடம் உள்ளது "
என்கிறார் வருண் சிவராம்.