ஆன்டிபயாடிக்கின் ஆபத்தான சைட் எஃபக்ட்ஸ்!
ஆன்டிபயாடிக் பயன்பாடு!
Azithromycin
பாக்டீரியா தொற்றுகள்,
நிமோனியா, நுரையீரல் தொற்று, காதில் ஏற்படும் தொற்றுநோய்களுக்கு மருந்து.
பக்கவிளைவாக அஜீரணம், வாந்தி, வயிற்றுப்போக்கு, அலர்ஜி ஏற்படுகிறது.
Ciprofloxacin
டைபாய்டு, நுரையீரல், சிறுநீரக தொற்றுநோய்கள், பாக்டீரியா தொற்றுகளுக்கு தீர்வுதருகிறது. அதிகளவு சாப்பிட்டால் மூட்டுப்பிடிப்பு, மூட்டுவலி, ரத்தஅழுத்தக்குறைவு ஏற்படுகிறது.
Augmentin
நிமோனியா, சிறுநீரகத்தொற்று, தோல் தொற்றுநோய்கள் ஆகியவற்றை குணமாக்குகிறது. இதன் பக்கவிளைவாக, அரிப்பு, தோல் சிவப்பாக மாறுதல்,
காய்ச்சல் ஆகியவை ஏற்படுகிறது.
Ornidazole
வயிறு
மற்றும் சிறுநீரக தொற்றை தீர்க்கிறது. பக்கவிளைவாக, தலைச்சுற்றல், வாந்தி, மூச்சுத்திணறல், உடல் பலவீனம்,
தலைவலி ஏற்படுகிறது.
தேவையென்றால் மருத்துவரின் உதவியோடு ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்வதோடு இதற்கான மாற்று மருந்துகளைப் பற்றிய அறிவு தேவை.
தடைசெய்யப்பட்ட ஆபத்தான ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர் ஆலோசனையின்றி சாப்பிடக்கூடாது. ஒரு நோய்க்கு ஒரு மருந்து என
சாப்பிடுங்கள்.
மருந்துகளின் நேரடி மற்றும் பக்கவிளைவுகள் பற்றி மருத்துவரிடம் கேட்டு அறிவது உங்கள் உரிமை.
2
அரிய புற்றுநோய்
என்ன செய்யும்?
இந்தி திரைப்பட
நடிகர் இர்ஃபான்கான் NeuroEndocrine
Tumour (NETs)எனும் அரிய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பிற புற்றுநோய்களை போல அறிகுறிகளைக் காட்டாத இந்த புற்றுநோய் வயிறு,
கணையம், நுரையீரல் ஆகிய பகுதிகளில் வயிற்றுவலி,
குமட்டல், நெஞ்செரிச்சல், ரத்தசோகை, குடல்புண், மலம் கழிக்கும்போது
வலி ஆகியவை ஏற்படும். நரம்பு செல்களின் அதீதவளர்ச்சி இந்நோயை(NET) ஏற்படுத்துகிறது.
இதில் நியூரோஎண்டோகிரைன்
புற்றுநோய் கட்டிகள் செரடோனினை அதிகளவு வெளியிட்டு அவை ரத்தத்தில் கலந்தால் கார்சினோய்டு
சிண்ட்ரோம் என்றுபெயர்.
இதயச்சிதைவு, தாறுமாறு இதயத்துடிப்பு, மூச்சுத்திணறல், முகம்,கழுத்தில்
தோல் சிவந்துபோவது போன்ற பிரச்னைகள் உருவாகும். இதைக் கட்டுப்படுத்த
octreotide என்ற மருந்து உதவுகிறது.
"புற்றுநோயின்
வளர்ச்சி, வளர்ந்துள்ள இடம் ஆகியவற்றை பொறுத்து அதனை அறுவை சிகிச்சை
செய்து அகற்றமுடியும்" என்கிறார் கல்லீரல் மாற்று மருத்துவர்
சௌமித்ரா ராவத். தற்போது வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுவருகிறார்
நடிகர் இர்ஃபான்கான்.
3
பிட்ஸ்!
நெதர்லாந்தைச்
சேர்ந்த வீட்டு உபயோகப்பொருள் நிறுவனமான Ikea, தன் நிறுவனத்தில் வழங்கி வந்த
ஒரு யூரோ பிரேக்ஃபாஸ்ட் உணவு வழங்கும்முறையை நிறுத்திவிட்டது. ஏன்? பிரேக்ஃபாஸ்டிற்காக கூடிய மக்கள் கூட்டம் ஏற்படுத்தி
போக்குவரத்து நெரிசலால்.
பிறக்கும்போது
குழந்தையின் உடலில் 75
சதவிகிதம் நீர் உள்ளது. இது வாழைப்பழம்,
உருளைக்கிழங்கிலுள்ள நீரை விட அதிகம்.
சீனாவின் க்வான்ஸி
பகுதியைச் சேர்ந்த
Red yao பழங்குடியைச் சேர்ந்த பெண்கள், தங்கள்
வாழ்நாளில் திருமணத்தின்போது மட்டுமே முடியை வெட்டுகிறார்கள்.
ஃபோர்டு கார்தொழிற்சாலையில்
வேலை செய்த ராபின் வில்லியம்ஸ் என்ற தொழிலாளி ரோபோவினால் இறந்த முதல் நபர். அசெம்பிளி
ரோபோவினால் நேர்ந்த விபத்து இது.
கென்யாவில் யானையின்
கழிவிலிருந்து காகித தாள்களை தயாரிக்கிறார்கள். 50 கிலோ கழிவிலிருந்து
150 காகித தாள்கள் தயாரிக்கப்படுகிறது.
தொகுப்பு: வின்சென்ட் காபோ
நன்றி: முத்தாரம்