நூ்ல்விமர்சனம்: யூதர்கள் - வரலாறும் வாழ்க்கையும்


Image result for israel



யூதர்கள் - வரலாறும் வாழ்க்கையும்

முகில்

கிழக்கு

ரூ.100




இஸ்‌ரேல்- பாலஸ்தீன பிரச்னையை வாசித்து வருத்தப்படுபவர்களுக்கும் கூட அம்மண்ணின் வரலாறு தெரியுமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் யூதர்கள் அப்படிப்பட்ட விநோத ஆன்மாக்கள்.

தோரா என்ற புனிதநூலை வழிபடும் யூதர்களின் கூட்டத்தில் பிறரை இதன் ரபி சேர்த்துக்கொள்வது கடினம். எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தனியாக தங்களுக்கென கோவில், வழிபாடு, கல்வி வாழ்வதே இவர்களின் வழக்கம். அதனாலே கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இவர்களை தாக்கி அழிப்பது, அடித்து விரட்டுவது வரலாறு முழுக்க நடந்து வரும் நிகழ்வு. உண்மையில் யூதர்களின் தேவையென்ன? அவர்கள் வரலாறு முழுக்க ஓட ஓட விரட்டப்பட்டதன் காரணம் பற்றி முகில் எழுதியுள்ள நூல்தான் யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்.

தங்களுக்கென ஜெருசலேம் புனித மண்ணில் வசிக்க இடம் வேண்டும் என்ற ஆசையில் யூதர்கள் செய்த முயற்சிகள்தான் அனைத்து அரசியல் பிரச்னைகளுக்கும் காரணம். ஆபிரஹாமின் பிள்ளைகளான இஸ்மயில், ஈஸாக் ஆகியோரின் பிள்ளைகள்தான் அரேபியர்களும், யூதர்களும் . ஆனால் இன்று இஸ்‌ரேலில் யூதர்களும் , பாலஸ்தீனில் அரேபியர்களும் தங்களுக்குள் அடித்துக்கொள்ள ஆயிலுக்காக அதில் குளிர்காய்கின்றன மேற்கத்திய வல்லரசுகள்.

சாலமன் கட்டிய யூதர்களின் கோயில், அல்-அக்ஸா மசூதி என பிரச்னை கொளுந்துவிட்டு எரிவதற்கான அத்தனை காரணங்களும் இஸ்‌ரேலில் உண்டு. வரலாறு முழுக்க யூதர்கள் எப்படி வாழ்ந்தார்கள், வளர்ந்தார்கள், அரசியல் பழிவாங்கல், சொத்துக்களை பறிகொடுத்து நாடோடிகளாக திரிவது என யூதர்கள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. இதனால் வசிக்க சிறிய இடம் கிடைத்தாலும் அங்கு தம் குடியிருப்பை அமைக்க முயற்சித்து தன் இனத்தை வாழ வைப்பது யூதர்களின் ஸ்பெஷல் குணம். வங்கி மூலம் எப்படி இஸ்‌ரேல் மண்ணை வளைத்து பிரிட்டனின் பால்ஃபர் அறிக்கை மூலம் அங்கு குடியிருப்புகளை அமைத்து அரேபியர்களை அகதியாக்குகிறார்கள் என்பது படிக்கவே தலைசுற்றும் தந்திர திட்டம்.

இந்நூலில் யூதர்களில் வாழ்க்கை, வரலாறு என்பதோடு அவர்களின் சடங்குகள், இந்தியாவிலுள்ள யூத மக்கள் என விரிவாகவே பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் முகில். அந்த வகையில் இஸ்‌ரேல்- பாலஸ்தீன பிரச்னை பற்றி அறிவதற்கான நல்ல நூலாகவும் இந்த நூலை கொள்ளலாம். மற்றொரு நூல் பா.ராகவனின் நிலமெல்லாம் ரத்தம்.

நன்றி: புகழ் திலீபன்
- கோமாளிமேடை டீம்


 


பிரபலமான இடுகைகள்