தற்கொலையைக் குறைக்க லைட்டை போடுவோம்!


Related image

பிட்ஸ்!

பூமியின் வெப்பநிலை உயர உயர பூக்களின் நறுமணம் குறையும்.

கொடூரக்கனவு எனும் பொருள் தரும் Nightmare என்ற வார்த்தை, mare என்ற புராணவிலங்கு இரவில் மனிதர்களின் மீது அமர்ந்து கனவுகளை ஏற்படுத்துகிறது என்பதைக்குறிக்க உருவானது.
ஹாலிவுட் நடிகரான பிராட் பிட், தன் நண்பர்கள், பழகியவர்கள் ஏன் தன் முகத்தையே நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார். இதற்கு Prosopagnosia என்று பெயர்.

ஜப்பானின் டோக்கியோ நகரிலுள்ள ரயில்நிலையங்களில் நீலநிற விளக்குகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஏன்? தற்கொலைகளை குறைப்பதற்குத்தான்.

வைகிங் தங்களை சுத்தமாக வைத்துக்கொள்வதில் சூரர்கள். இடையறாத கடமையுணர்ச்சியால் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குளிப்பார்கள்.

  2

அறிவோம் தெளிவோம்!

உடனடி உணவுவகை பொருட்களில் பயன்படும் உணவு காகிதங்கள், கறை அகற்றும் திரவங்களில் Polyfluoroalkyl(PFA) பயன்படும் வேதிப்பொருள், நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து புற்றுநோயைத் தூண்டுகிறது.

வினைல் திரைத்துணிகள், நகப்பூச்சு, வாசனை திரவியங்கள் ஆகியவற்றில் பயன்படும் தாலேட்டுகளால் மலட்டுத்தன்மை ஏற்படும்.

ஷாம்பூ, ஹேர் ஜெல், லோஷன்கள், டின் உணவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், சன்ஸ்க்ரீன் லோஷன், லிப்பாம், பற்பசை ஆகியவற்றில்பயன்படுத்தப்படும் பாரபீன், பிஸ்பெனால், பென்ஸோபெனான்ஸ் ஆகிய வேதிப்பொருட்களால் தைராய்டு பிரச்னை ஏற்படுவதோடு ஈஸ்ட்ரோஜன் உள்ளிட்ட ஹார்மோன்கள் பாதிப்பு ஏற்படும்.

கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்களில் உள்ள டைகுளோரோபென்ஸேன், நாளடைவில் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.



பிரபலமான இடுகைகள்