மாட்டிக்கொண்ட சர்கோசி!
ஊழல் சுழலில் அதிபர்!
பிரான்சின் முன்னாள்
அதிபர் சர்கோசி,
மறைந்த லிபியா அதிபர் கடாபியிடம் பணம் பெற்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.
2007-2012 ஆம் ஆண்டுவரை பிரான்ஸை ஆண்ட
சர்கோசி, இத்தேர்தலுக்காக கடாபியிடம் 50 மில்லியன் யூரோ(தோராயமாக 400 கோடி)
வாங்கினார் என்பதே புகார். 2011 ஆம் ஆண்டு கடாபியின் மகன் சயீப் அல்இஸ்லாம் அப்பாவிடம் பெற்ற பணத்தை திரும்ப
கொடுங்கள் என்று கூறி சர்கோசியின்மீது குற்றம்சாட்டினார்.
முன்னாள்
லிபியா உளவாளி அப்துல்லா அல்செனுசி, அதிபரின் முன்னாள் வழக்குரைஞர்
என பலரும் வாக்குமூலம் கொடுக்க சர்கோசியின் குற்றம் விரைவில் சட்டரீதியிலான சிக்கலை
எதிர்கொள்ளவிருக்கிறார். எதிர்க்கட்சி அலுவலகங்களை உளவு பார்த்தது
உள்ளிட்ட செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட அதிபர் நிக்சனின் வாட்டர்கேட் ஊழல்,
இத்தாலி அதிபர் சில்வியா பெர்லுஸ்கோனி 2010 ஆம்
ஆண்டு பதினேழு வயது மொராக்கோ பெண்ணை வன்புணர்வு செய்த விவகாரம், அதிபர் பில் கிளிண்டன், மோனிகா லெவின்ஸ்கி என்ற பெண்ணுடன்
1995-97 காலகட்டத்தில் கொண்ட முறையற்ற உறவு ஆகியவை உலகளவில் பரபரப்பாக
சர்கோசி விவகாரத்திற்கு முன்பு பேசப்பட்டவைகளாகும்.