தகவல்களைப் பாதுகாப்பது எப்படி?

Image result for facebook


தகவல்களை பாதுகாப்போம்!

ஃபேஸ்புக், ஐந்து கோடிக்கும் மேற்பட்ட பல்வேறு பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்துகிறது என நியூயார்க் டைம்ஸ், கார்டியன் உள்ளிட்ட பத்திரிகைகளில் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் நம்முடைய தகவல்களை எப்படி பாதுகாப்பது?

போனில் சில ஆப்களை நிறுவும்போது அவை நாமிருக்கும் லொகேஷன்களை கேட்கும். இவற்றை நாம் டிக் அடித்தால், நம் தினசரி நடவடிக்கைகளை கவனித்து விளம்பரதாரர்களுக்கு கொடுத்து காசு பார்ப்பார்கள். அக்கவுண்ட் செட்டிங்க்ஸில் சென்று லொகேஷன் செட்டிங்க்ஸை ஆஃப் செய்யலாம்.

பல்வேறு தொடர்புகளை பார்க்க, கட்டுப்படுத்த அனுமதி கோரும் சந்தேகப்படும்படியான ஆப்ஸ்களை போனில் நிறுவவேண்டாம்.

ஃபேஸ்புக்கில் உங்கள் பதிவுகளை பலரும் பார்க்கும்படியான செட்டிங்க்ஸை மாற்றி நண்பர்கள் என்று மட்டும் மாற்றலாம். உங்கள் முகத்தை கண்டறியும்படி பதிவுகளை உருவாக்கியிருந்தால் அதனையும் நீக்கலாம்.

ஃபேஸ்புக்கில் அசல் வெகுளியாக உங்களைப்பற்றிய நீங்கள் கொடுத்த வாக்குமூலமான உண்மைத் தகவல்களை நீக்குவது எதிர்காலத்திற்கு நல்லது.

இதுமட்டுமின்றி உங்கள் பிரவுசர் ஹிஸ்டரியையும் குக்கீஸ் இன்றி துடைத்தழித்து வைத்திருப்பது உங்களின் போனிலுள்ள கணினியிலுள்ள தகவல்களின் பாதுகாப்புக்கு கேரண்டி சொல்லும்.

-கோமாளிமேடை டீம்
நன்றி: முத்தாரம் 




  




பிரபலமான இடுகைகள்