பல முக மன்னர்கள்!
வரலாற்று சுவாரசியங்கள்
பல முக மன்னர்கள்!
ரா.வேங்கடசாமி
1815 ஆம் ஆண்டு பிறந்த ஃபிளின்ட் ஜாக், இங்கிலாந்தின் யார்க்ஷையர் வாரிசு.
இயற்பெயர் எட்வர்டு சிம்சன் தன் பதினான்கு வயதில் வரலாற்று பேராசிரியர் ஜார்ஜ் யங்கிடம் வேலைக்குச் சேர்ந்த ஜாக், அவருடன் சேர்ந்து பல்வேறு அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபட்டான்.
திடீரென பயணம் சென்று காட்டுக்குள் கூடாரம் போட்டு தேடுதல் வேட்டை நடத்திவிட்டு வருவது ஜார்ஜ் யங்கின் வழக்கம்.
டாக்டர் இறந்தபின் அவரின் தொழிலுக்கு வாரிசாக மாறினான் ஜாக். பல கலைப்பொருட்களை கண்டுபிடித்து வியாபாரம் செய்யத்தொடங்கினார் ஜாக். அப்போது உடைந்த அம்பு முனையைக் கொண்டுவந்த வியாபாரி ஒருவர்.
அதைப்போலவே மற்றொன்று செய்து தரமுடியுமா என்று கேட்டார்.
அதை
சவாலாக ஏற்ற சிம்சன் செய்த போலி அம்பு கச்சிதமாகவும் ஒரிஜினலைப்போலவும் இருந்தது.
பின் பழங்கால மண்ஜாடிகளை போலி செய்யத்தொடங்கினார் ஜாக். புதிய ஜாடிகளை செதுக்கி மண்ணில் புதைத்து வைத்து அரியது பழையது என
வியாபாரம் செய்து வந்தார் ஜாக். பானைகள், எழுத்துக்களைக் கொண்ட கற்கள்,
எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள்,
போர்க்கருவிகள் என டஜன் கணக்கில் தயாரித்து விற்றார்.
ஜாக். திடீரென தொற்றிய குடிப்பழக்கம் பிச்சைக்காரனைப் போல ஜாக்கை தெருவில் திரியவைத்தது. 1861 ஆம் ஆண்டு லண்டனில் அருங்காட்சி குறித்த மேடையில் அலங்கோலமான உடையில் தோன்றி,
எப்படி தொன்மையான பொருட்களை செய்வது ஆன் தி
ஸ்பாட் லெக்சர் கொடுக்க
, முன்பு அவரை கீழிறங்க சொல்லி அலறிய கூட்டமும் வாய்பொத்து அவர் சொன்னதைக் கேட்ட மேஜிக் நடந்தது.
பின் திருட்டு குற்றத்திற்காக சிறை சென்று இறந்துபோனார்.
வால்டோ
டெமாரோ
போலி
டாக்டராக நடித்து கனடா தேசிய நாயகனானவர்தான் வால்டோ.
1921 ஆம் ஆண்டு மசாசூசெட்சில் பிறந்த வால்டோ,
பால்யத்திலேயே கத்தோலிக்க மடத்தில் சேர்ந்தார். அங்கே கட்டுப்பாடுகளால் தடுமாறிய வால்டோ,
பாஸ்டனில் இருந்த மடத்திற்கு சென்றார்.
பின் ராணுவத்தில் சேர்ந்தவர், அங்கிருந்த பிற வீரர்களின் பொருட்களை சுட்டு ஜூட் விட்டார்.
1941 ஆம் ஆண்டு கடற்படையில் சேர்ந்த அங்கு வேலை செய்யாமல் டிமிக்கி கொடுத்து,
மருத்துவக் கல்லூரியில் சேர விண்ணப்பம் அனுப்பினார். அடிப்படைக் கல்வி இல்லாமல் மருத்துவர் எப்படி ஆவது? மருத்துவரின் முகவரி லிஸ்ட்டை எடுத்து சா
பூ த்ரீ போட்டு டாக்டரை செலக்ட் செய்து யுனிவர்சிட்டியிலிருந்து டாகுமென்ட்ஸைப் பெற்று அதில் டகால்டி செய்து தன் பெயரை புகுத்தினார்.
அப்புறமென்ன, நேவி கமிஷனுக்கு வேலைக்கு அப்ளை செய்தார்.
பின் அங்கே சந்தேகம் கிளம்ப,
லெட்டர் எழுதி வைத்துவிட்டு எஸ்கேப்பானார். பின் கென்டக்கியிலிருந்த லேடீஸ் கான்வென்டில் டாக்டர் ராபர்ட் பிரெஞ்ச் என்ற பெயரில் உள்ளே நுழைந்தார் வால்டோ.
ஆசிரியர் பணியோடு சுபியாக் தேவாலய பணியிலும் ஈடுபட அழைப்பு வந்தது வால்டோவுக்கு நெருக்கடியானது. கொடுத்த டூப் சர்டிஃபிகேட் உண்மை தெரியவர நடுத்தெருதான் கதி. பின் ஜெகஜ்ஜால வேலை காட்டி கேனன் கல்லூரியில் தத்துவப்படிப்பில் டீன் ஆனார். கடற்படையில் அனுப்பிய ரெக்கார்டுகள் சிக்கலாக, ஆறு ஆண்டு சிறைதண்டனை வால்டோவுக்கு விதிக்கப்பட்டது. விடுதலையான வால்டோ ஜோசப் சைபர் என்ற சர்ஜனாக வேலை செய்து மூன்று வீரர்களையும் காப்பாற்ற,
ஒரிஜினல் டாக்டர் மூலம் உண்மை வெளியாக,
வேலை போனது. பின்னர் ஆசிரியராகி மதபோதகராகி
61 வயதில் இறந்துபோனார் வால்டோ.