நாஜி படைகளிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றியவர்!
ஒரு படம் ஒரு ஆளுமை! - லிஜி
தி ஹன்ட்
மனைவியைப் பிரிந்து வாழும்
நர்சரி ஆசிரியரான லூகாஸூக்கு ஒரு மகன் உண்டு. லூகாஸின்
நெருங்கிய நண்பரான தியோவின் மகள் கிளாரா படிப்பதும் லூகாஸின் பள்ளியில்தான். ஆசிரியர், மாணவி என்பதைக்
கடந்த நட்பு கிளாராவுக்கும் லூயிஸூக்கும் உருவாகிறது. ஒரு நாள்
கிளாரா வீட்டில் இருக்கும்போது அவளுடைய அண்ணனும், அவனின் நண்பனும்
விளையாட்டாக ஐபேடிலுள்ள ஆபாசப் படத்தை கிளாராவுக்கு காட்டுகிறார்கள்.
அடுத்த நாள் கிளாரா, பள்ளி முடிந்தும்
வீட்டுக்குப் போகாமல் வகுப்பிலேயே அமர்ந்திருக்கிறாள். ஆசிரியர்
லூகாஸ் தன்னிடம் தவறாக நடந்துவிட்டதாக பள்ளி முதல்வரிடம் பொய்க்குற்றம் சாட்டுகிறாள். கிளாராவைத்
துருவி விசாரிக்கும் பள்ளி நிர்வாகம், அவள் சொல்வது
உண்மை என நம்பி, லூகாஸை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். லூகாஸ் தன்
மீது விழுந்த பழிச்சொல்லை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே ‘தி ஹன்ட்.’ திரைப்படம்.
சர் நிக்கோலஸ் வின்டன்
சில முன் டி.வி சேனலில் சிறப்பு விருந்தினராக
முதியவர் அழைக்கப்பட்டிருந்தார். அவர் மேடைக்கு வந்ததும், பார்வையாளர்களின்
எழுந்து நின்று எழுப்பிய கரகோஷத்தில் அரங்கமே அதிர்ந்துபோனது. யார் அவர்?
1938ம் ஆண்டு ஹிட்லரின் வதை முகாமில் அடைக்கப்பட்டிருந்த 669 யூதக் குழந்தைகளைப்
பத்திரமாக மீட்டெடுத்து இங்கிலாந்துக்குக் கொண்டு வந்தார் இளைஞரான நிக்கோலஸ் வின்டன். போரினால்
பெற்றோரை இழந்த இக்குழந்தைகள் அனைவரும் செக் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆதரவற்றை
குழந்தைகளை காப்பாற்றிய இளைஞர் இதுபற்றி யாரிடமும் கூறவில்லை. 50 ஆண்டுகளுக்குப்
பின் 1988 ஆம் ஆண்டில் நிக்கோலஸின் மனைவி தன் கணவரின் சாகசப்பணியைப் பற்றி ஒரு நிருபரிடம் தெரிவிக்க, உலகெங்கும்
நிக்கோலஸ் வின்டனின் பெயர் பிரபலமாகிறது. டிவியின் சிறப்பு விருந்தினர் சாட்சாத்
சர் நிக்கோலஸ் வின்டன்தான். அவரைச்சுற்றி அமர்ந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் குழந்தைப்பருவத்தில்
நிக்கோலஸின் கைகளால் உயிர்த்தவர்கள் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?