மூளைக்கு ஸ்டெதாஸ்கோப்!

மூளைக்கு ஸ்டெதாஸ்கோப்!

மிகச்சிக்கலான நரம்புகளைக் கொண்ட மூளை இன்றுமே ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிர். அதனைத் தீர்க்கவே ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சியாளர்கள் மூளையின் அலைகளை ஒலியாக மாற்றும் கருவியான ஸ்டெதாஸ்கோப் ஒன்றையும், நாட்டிங்காம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆகியோர் மூளையின் அலைகளை கண்டறிய உதவும் magnetoencephalography (MEG) ஹெல்மெட்டையும் கண்டுபிடித்துள்ளனர்.

வலிப்புநோயை உடலில் ஏற்படும் மாற்றங்களை கொண்டுதான் அறிகிறோம் என்பதால் அது ஏற்படுத்தும் சில குறைபாடுகளை சரிசெய்ய முடியாமல் போய் மூளையும் பாதிக்கப்படுகிறது.

"அனைத்து வலிப்புகளும் உடலை பாதிக்கின்றவைதான். அவசரப்பிரிவில் உயிருக்கு போராடிவருகின்ற 90 சதவிகிதமானோர் அமைதியான வலிப்புநோயால் பாதிக்கப்பட்டவர்கள்தான்" என்கிறார் மருத்துவர் ஜோசப் பர்விஷி. ஆனால் வலிப்பு பிரச்னை மூளையில் மெல்லியதாக ஏற்பட்டாலும் EEG ஸ்கேனில் எளிதாக கண்டறியலாம். மூளையில் ஏற்படும் அலைகள் ஒலிகளாக்கி அதனை அறிந்து வலிப்பிலிருந்து விடுபட வாய்ப்புள்ளது. இயல்பான மூளை செயல்பாடு ஹம் என்ற ஒலியையும், இதில் மாறுபாடு ஏற்படும்போது அலறல் ஒலியும் ஏற்படுகிறது. மொத்தம் 84 EEG ஆய்வில் 32 பேர்களுக்கு வலிப்பு பிரச்னை மெலிதாக இருந்தது இதில் கண்டறியப்பட்டது.

நன்றி: முத்தாரம்