இந்தியர்களின் சைஸ் சர்வே!
அதிகரிக்கும் உடல் வெப்பம்!
வெப்பம் அதிகரித்துவரும் சூழலில் நம் உடல் எவ்வளவு
வெப்பத்தைத்தான் தாங்கும்? நம் உடலின் வெப்பநிலை
37 டிகிரி செல்சியஸ். இயற்கை பாரபட்சமின்றி அனைத்து
வயதினரையும் பாதிக்கும் விஷயம் இது. முப்பத்து ஏழு டிகிரி செல்சியசிற்கு
மேல் 3.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்தாலும் உடல் சோர்விற்கான அறிகுறிகளை
காட்டத்தொடங்கிவிடும்.
குளிர்சூழலில் தன் உடல் வெப்பநிலையை தக்கவைத்துக்கொள்ள
போராடும் உடல், அதிவெப்ப சூழலில் தன் சுயவெப்பத்தை மெல்ல இழக்கும்.
ரத்தம் வெப்பத்தினால் விரிவாகி நரம்புகளில் வேகமாக பாயும். இதன்விளைவாக சிலரின் தோல் சிவப்பாக மாறும்.அடுத்து உடலைக்
குளிர்விக்க சுரக்கும் வியர்வை. சூழலில் ஈரப்பதமும், காற்றும் குறையும்போது வியர்வை அதிகமாகும். ஓய்வில் குறைந்திருக்கும்
உடல்வெப்பநிலை, உடல்தசைகள் இயங்கும்போது அதிகரிக்கும்.
எனவே வெப்பம் விளையாட்டு வீரர்களுக்கும், தொழிலாளர்களுக்கும்
எமனாகும் வாய்ப்பு அதிகம். வெயிலால் தலைவலி, குமட்டல், கிறுகிறுப்பு தட்டும்போது நிழலில் ஓய்வெடுத்து
நீர்அருந்துவது நல்லது.
2
சூயிங்கம்மில்
என்ன இருக்கிறது?
விளையாட்டில் ஆட்டக்காரரோ
பொதுமேடைப்பேச்சுக்கு பார்வையாளரோ எந்த பாத்திரம் வகித்தாலும் நம்மில் பலருக்கும் வாய்
நமநம என்றிருக்கும் வேளையில் உதவுவதுதான் சூயிங்கம். பூமர், டபுள்மின்ட், சென்டர்ப்ரெஷ் வரை வாங்கிப்போட்டு சாப்பிடுவதுதான்
நமது பழக்கம். ஆனால் அதில் என்னென்ன இருக்கிறது?
பிளாஸ்டிக்கை கொண்டுள்ள
சூயிங்கம்மை விழுங்கினால் ஜீரணமாகாது என்பதோடு
எளிதில் மட்கும் தன்மை அறவே கிடையாது. இதன் டெக்சருக்கு கால்சியம் கார்பனேட்
அல்லது மெக்னீசியம் சிலிகேட் பயன்படுகிறது.
இரண்டாம் உலகப்போரின்போது இதில் பயன்படுத்தப்பட எலாஸ்டோமர்ஸ்(பாலிவினைல் அசிடேட்) சபோடில்லா மரத்திலிருந்து பெறப்பட்டது.
சூயிங்கம்மின் மின்ட், ஸ்டாபெர்ரி வாசனையையும்
நிறத்தையும் தக்க வைக்கவும் வாயில் ஒட்டிக்கொள்ளாமல் மெல்லவும் எமுல்சிஃபையர்ஸ் உதவுகிறது. கல் போன்றிருந்தால் எப்படி மெல்லுவது அதற்காகத்தான் வெஜிடபிள் எண்ணெய் மற்று்ம
லெசிதின் ஆகியவை சேர்க்கப்பட்டு சூயிங்கத்தின் ரேப்பர் சுற்றப்படுகிறது.
3
இந்தியர்களுக்கான சைஸ்!
மேக்ஸிலும், ரெக்ஸிலும் தற்போது நாம் வாங்கி அணியும் ஆடைகள்
அனைத்தும் இந்தியர்களுக்கான ஆடை அளவைக் கொண்டதல்ல. விரைவில் இந்திய
அரசின் நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி(NIFT) சர்வே
ஒன்றை நடத்தி 25 ஆயிரம் இந்தியர்களை ஆய்வுக்குள்ளாக்கி 3டி வடிவில் அவர்களின் உடல் அளவை கணக்கிட்டு இந்தியர்களின் சைசிற்கான
சார்ட் ஒன்றை அமைக்கவிருக்கிறது. 2006 ஆம் ஆண்டு நிஃப்ட்
செய்ய நினைத்த ஐடியா இது.
"இந்த ஆய்வின் திட்ட மதிப்பு 30 கோடி. 15-65 வயதுவரையிலான நபர்களின் அளவுகளை
சேகரிக்கவிருக்கிறோம். இதில் ஆண்கள் மற்றும் பெண்களின் அளவு
சமமாக இருக்கும்" என்கிறார் நிஃப்ட் இயக்குநர் சாரதா
முரளிதரன். ஆய்வுக்காலம் 3 ஆண்டுகள்.
உயரம், எடை, இடுப்பு
அளவு ஆகியவை பெறப்பட்டு தகவல்தளமாக சேமிக்கப்படவிருக்கிறது. கொல்கத்தா,
மும்பை, புது டெல்லி, பெங்களூரு,
ஷில்லாங் ஆகிய நகரங்களில் விரைவில் சர்வே 3டி
ஸ்கேனருடன் தொடங்கும். இதில் ஜவுளித்துறை அமைச்சகம் 21
கோடியும் நிஃப்ட் 9 கோடியும் செலவழித்து இந்த
ஆய்வை செயல்படுத்துகின்றன.