பெண்களுக்கு சம்பளத்தில் பாகுபாடு ஏன்?

Image result for pay gap


சம்பளத்தில் தீண்டாமை!

இங்கிலாந்திலுள்ள நிறுவனங்கள் தம் நிறுவனங்களில் வழங்கப்படும் சம்பளம் பற்றி அரசுக்கு தெரிவிக்கும் உத்தரவு அமுலாகியுள்ளது. மூன்றில் இருபங்கு நிறுவனங்கள்(6,240) சம்பள விவரத்தை அரசிடம் தெரிவித்துள்ளன. பாக்கி, 2,760 நிறுவனங்களிடமிருந்து எத்தகவலுமில்லை. தகவல் அளிக்காத நிறுவனங்கள் மீது அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவிருக்கிறது.


தற்போது இங்கிலாந்தில் 78% ஆண்களுக்கு பெண்களைவிட அதிக ஊதியம் வழங்கப்பட்டு வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்களுக்கும் பெண்களுக்குமான சம்பள வேறுபாடு 18.4% என்கிறது தேசிய புள்ளியியல் ஆய்வு(ONS). குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை, வீட்டுவேலைகள், சுரங்கவேலைகள் ஆகியவற்றைத் தவிர பிற வேலைகள் அனைத்திலும் ஆண்களின் ஆதிக்கமும் சம்பளமும் அதிகம். நிதித்துறைச் சார்ந்த சேவைகளில் பெண்களுக்கு பெரும் ஊதிய இடைவெளி(35.6%) காணப்படுகிறது. வர்ஜின்மணி நிறுவனத்தில் 38.5% சதவிகிதம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம்பளவேறுபாடு நிலவுகிறது.
2

சீஸ் முக்கியம் பாஸ்!

போலந்தின் புகழ்பெற்ற சீஸ் வகைகளில் ஒன்று ஆஸிபெக்(Osypek). தாத்ராஸ் மலைத்தொடரின் கீழேயுள்ள நகரமான ஸகோபேனின் தெருக்களில் விற்கப்படும் பொருட்களில் முக்கியமானது ஆஸிபெக் சீஸ். இதயவடிவிலான பர்ஸெனிகா டிசைனில் இந்த சீஸ் அலங்காரம் செய்யப்பட்டு விற்கப்பட்டாலும் இதில் போலிகளும் நிறைய உண்டு.

17-23 செ.மீ. நீளத்தில் 800 கிராம் எடையில் ஆஸிபெக் சீஸ் தயாரிக்கப்படுகிறது. செம்மறி ஆட்டின் பாலில் இருந்து உருவாகும் இந்த சீஸ், ஏப்ரல் - அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் ரெடியாகிறது. ஏழு லிட்டர் பாலில் ஒரு கிலோ சீஸ் தயாரிக்கலாம். குறிப்பிட்ட காலகட்டத்தில் தயாரிக்கப்பட காரணம், மலையில் விளையும் பசும்புற்களை ஆடு மேய்வதால் கிடைக்கும் பால் ஃப்ரெஷ்ஷாக இருக்கும் என்பதுதான். "நாங்கள் சீஸை கைகளால் தயாரிக்கிறோம்" என்கிறார் சீஸ் தயாரிப்பாளரான ஜனினா ஸெப்கா. பெரும்பாலும் சீஸ் தயாரிப்புக்கான பொருட்கள் அனைத்தும் மரப்பொருட்களில் நடைபெறுகிறது. scypac என்ற  வார்த்தையிலிருந்து உருவான ஆஸிபெக் சீஸில் 60% ஆட்டின் பால் உள்ளது. போலந்தில் பனிரெண்டாம் நூற்றாண்டிலிருந்து சீஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது.

 3
தனிமை பிரச்னையா?

தனிமை என்பது வேறு தனியாக இருப்பது என்பது வேறு. கூட்டத்தில் இருக்கும்போதும் தனியாக இருப்பது போல இருந்தால் சிறிது தனிமையாக நேரத்தை செலவிடுவது மனதை சுதந்திரமாக்கும். எனவே உங்களை ஓரளவேனும் புரிந்துகொண்டவர்களிடம் பேசலாம்."சமூகத்தோடு எவ்வளவு தூரம் தொடர்பு வைத்திருப்பது என்பது நபருக்கு நபர் மாறுபடும்" என்கிறார் உளவியல் மருத்துவர் மார்க் இ.ஷார்ப்.

தனிமை குறித்து ப்ரூனெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறிஸ்டினா விக்டர் என்பவர் செய்த ஆய்வில், வயதான நபர்கள் 13% தங்கள் வாழ்வின் தனிமையை உணர்வதாக கூறியுள்ளனர். ஆனால் இது எலக்ட்ரானிக் பொருட்களுக்கு இடையே வாழும்போது தனிமை என்பது பலருக்கும் நினைவுக்கு வந்து வருத்துவதில்லை என்பதே உண்மை. திருமணமும் ஒருவரின் உணர்வுரீதியிலான தனிமையை போக்கிவிடும் என்பதற்கு எந்த உறுதியும் கிடையாது.  

தனியாக வாழ்வது என்பது மோசமான விஷயமல்ல. புதுப்புது சிந்தனைகள், ஐடியாக்கள் தோன்றுவது தனிமையில்தான். உங்கள் அலைவரிசைக்கேற்ற நண்பர்களை தேடி பேசி பழகுங்கள். பொருளாதார தேவையினால் பெற்றோர்கள் இருவரும் அலுவலகம் வந்துவிட, வயதானவர்களோடு குழந்தைகளும் தனியாகவே இருக்கிறார்கள். இந்த நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் நமக்கு லாபம்தானே! 

பிரபலமான இடுகைகள்