சம்பள தீண்டாமை இல்லாத நாடு எது தெரியுமா?

Image result for belgium equal pay


பெல்ஜியத்தின் பெருமை!

ஐரோப்பிய நாடுகளிலேயே ஆண்,பெண் சம்பளவிகித வேறுபாடு குறைவாக உள்ள நாடு பெல்ஜியம்தான். வித்தியாசம் 1.1%தான். ப்ரூசெல்ஸை தலைநகரமாக கொண்ட பெல்ஜியம் நாட்டின் மக்கள்தொகை 11,429,336. ப்ரெஞ்சு, டச்சு மொழி பேசும் இங்கு தனிநபர் வருமானம்(ஜிடிபி) 46,301 டாலர்கள்.

 இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் ஆண்களைவிட பெண்களுக்கு சம்பளம் குறைவு. ஸ்வீடனில் 10.5%, அமெரிக்காவில் 19.5% என்று அமைந்துள்ளது. இங்கு குறிப்பிட்ட சம்பள விகிதம் என்பது முழுநேர வேலைகளுக்கானது. பகுதிநேர வேலைகளுக்கான சம்பளவிகிதத்தில் பெல்ஜியம் இன்னும் இறங்கி வரவேண்டியிருக்கிறது. "இந்த மாற்றம் ஒரேநாளில் ஏற்படவில்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே வேலையைச் செய்தாலும் சமமான சம்பளம் தராதது தவறு என்று இன்றுதான் பலரும் உணரத்தொடங்கியுள்ளனர்" என்கிறார் பெல்ஜியத்தில் பெண்களுக்கு சம ஊதியம் கேட்டு போராடும் அமைப்பின் தலைவரான இன்கா வெர்ஹர்ட்.   


பிரபலமான இடுகைகள்