இடுகைகள்

ரவி தேஜா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அல வைகுந்தபுரத்தின் தொடர்ச்சியாக கதையை உருவாக்கினால்... தமாக்கா - ரவிதேஜா, ஶ்ரீலீலா

படம்
  தமாக்கா ரவிதேஜா, ஶ்ரீலீலா, தணிகெலா பரணி பின்னணி இசை, பாடல்கள் – பீம்ஸ் சிசிரிரோலியோ பீப்பிள்ஸ் மார்ட் எனும் நிறுவனத்தின் தலைவர் இயக்குநர், புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். அப்போது, அவர் கலந்துகொள்ளும் நிறுவன சந்திப்பில் தான் இரண்டு மாதங்கள்தான் உயிருடன் இருப்பேன் என கூறிவிடுகிறார். இதனால் அவரது நிறுவனத்தை வாங்க ரௌடி தொழிலதிபர் முயல்கிறார். அவரது முயற்சியை பீப்பிள்ஸ் மார்ட் நிறுவனத்தின் தலைவரின் மகன், ஆனந்த் சக்ரவர்த்தி தடுக்க நினைக்கிறார்.   இவரைப் போலவே உருவத்தில் உள்ளவர் ஸ்வாமி. இவர் டயப்பர் நிறுவனத்தில் வேலையிலிருந்து நீக்கப்பட்டு வேலை தேடி வருகிறார். ஸ்வாமிக்கும், ஆனந்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதே கதை. அல வைகுந்தபுரம்லோ படத்தில் வரும் பண்டு எனும் அல்லு அர்ஜூன் பாத்திரத்தை யோசித்துக் கொள்ளுங்கள். அவர் பிறந்த இடம் வேறு. ஆனால் வாழும் இடம் வேறு. இரண்டு இடங்களிலும் அவருக்கு பாசம் வேண்டும். அவர் யாரையும் விட்டுக்கொடுக்க முடியாது. அதே பாத்திரத்தைத்தான் ரவிதேஜா எடுத்துக்கொண்டு நடித்திருக்கிறார். அதிலும் அல வைகுந்தபுரத்தில் வரும் நடிகர்களையே திரும்ப நடிக்க வைத்து அதே அதிர்வை ம

10 ஆயிரம் கோடி ரூபாயை டிராமா ஆடி கொள்ளையடிக்கும் டுபாக்கூர் கில்லாடி - கில்லாடி - ரவிதேஜா, டிம்பிள், மீனாட்சி

படம்
  கில்லாடி  ரவி தேஜா, டிம்பிள் ஹயாதி, மீனாட்சி சௌத்ரி, முரளி சர்மா, வெண்ணிலா கிஷோர், அனுசுயா பணம் மட்டுமே முக்கியம் என நம்பும் கில்லாடி ஒருவன், இந்தியாவில் பத்தாயிரம் கோடியை கொள்ளையடிக்கும் கதை.  இந்திய அரசியல்வாதி ஒருவர், எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்து மாநில முதல் அமைச்சர் ஆக நினைக்கிறார். இதற்காக அவர் பத்தாயிரம் கோடியை வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வருகிறார். அதை கார்ப்பரேட் நிறுவனம் மூலம் அரசியல்வாதிகளுக்கு விநியோகிக்க நினைக்கிறார். இதை தடுக்கும் வரிவருவாய்துறை, பிற அரசியல்வாதிகளின் குழு, கில்லாடி திருடன் மோகன் காந்தி. இவர்களில் யார் பணத்தை கொள்ளையடித்தார்கள், வெற்றி பெற்றார்கள் என்பதுதான் இறுதிப்பகுதி.  படத்தில் மோகன் காந்தியாக எந்த உணர்ச்சிகளும் இல்லாமல் பணம் அதை எப்படியாவது திறமை காட்டி கொள்ளையடிக்கவேண்டும் என ஆர்வத்தோடு திரியும் பாத்திரத்தில் ரவி தேஜா அசத்தியிருக்கிறார். இவருக்கு அடுத்து உடல் வளைத்து உழைத்திருக்கிறவர் வேறு யார் டிம்பிள் ஹயாத்திதான்.  பணத்தை கொள்ளையடிப்பது பற்றி கில்லாடி பாடலில் நெடுக சொல்லிவிடுகிறார்கள். இதில் மோகன் காந்தியின் குழுவில் உள்ளவர்கள் தனியா

சுற்றிலும் உறவுகள், நடுவில் நாம் இருக்கவேண்டும் என்று நினைப்பவனால் அப்படி வாழ முடிந்ததா? - நெலா டிக்கெட் - ரவி தேஜா

படம்
                      நெலா டிக்கெட் சுட்டு ஜனம் மத்தியில் மனம் என வாழத் தலைப்படும் நாயகன் . அவன் தந்தை போல மதித்து பாசம் காட்டிய ஆதரவற்றோர் இல்லப்புரவலர் திடீரென இறந்துபோகிறார் . அந்த இறப்பிற்கு காரணமானவர்களை அவர் எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் படம் . ரவிதேஜாவுக்காகத்தான் படம் பார்க்கவேண்டும் . வேறு ஆட்கள் யாரும் நடிக்க வாய்ப்பில்லை . கதையில் நடிக்கவும் ஏதுமில்லை . மாளவிகா சர்மாவுக்கு படத்தில் பாட்டுக்கு ஆட மட்டுமே வாய்ப்பு தந்திருக்கிறார்கள் . லூசுப் பெண் பாத்திரம்தான் . படத்தின் நோக்கம் , ஆதரவற்றோர் இல்லம் கட்ட நினைத்தவரை அவரது தத்துபிள்ளை வஞ்சித்து கொன்றுவிட அவரை எப்படி ரவிதேஜா பழிவாங்குகிறார் என்பதுதான் . ஆனால் இடையில் வரும் காதல் காட்சிகள் படத்தின் போக்கை திசைமாற்றுகிறது . எரிச்சலூட்டுகிறது . உள்துறை அமைச்சராக இருப்பவரை எந்த அதிகாரமும் இல்லாத ஒருவர் எப்படி எதிர்க்க முடியும் ? நீதிமன்றத்தில் பொய்சாட்சி சொல்லி வாழ்பவர் , மருத்துவர் என்று சொல்லி மருத்துவக் கல்லூரிக்கு சென்று காதல் செய்கிறார் . உள்துறை அமைச்சரின் பணத்தை கடத்துகிறார் என இயல்பாக வந்திருக

அறிவியலால் மீண்டு வரும் டிஸ்கோ ராஜா - டிஸ்கோ ராஜா அதிரடி

படம்
டிஸ்கோ ராஜா - தெலுங்கு இயக்கம் - வி ஆனந்த் வசனம் - அப்பூரி ரவி இசை - கார்த்திக் கட்டமனேனி இசை - தமன் சாய் டைட்டில் கார்டு ஓடும்போதே ஒருவரை லடாக் பனியில் அடித்து உதைத்து இழுத்துக்கொண்டு வீட்டில் கொண்டுபோய் அடைக்கிறார்கள். உடனே சிறிது நேரத்தி அங்குள்ள பனிக்கட்டிகள் உடைந்து பனிப்புயல் ஏற்படுகிறது. உடல் மெல்ல பனியில் விறைத்து போக முகம் ரவிதேஜா என காண்பிக்க டைட்டில் நிறைவடைகிறது. அதுதான் கதை. அவரை மருத்துவ நிறுவனம் மீட்டு சிகிச்சையளித்து உயிர் பிழைக்க வைக்கிறது. அவர் யார் என பல்வேறு நபர்கள் மூலம் கண்டறிகிறார். ஏறத்தாழ காமிக்ஸில் வெளியான பதிமூன்று என்ற நபரின் கதைதான். ரவிதேஜா உழைத்திருக்கிறார்தான். இரண்டு வேடங்கள் உண்டு. அதில் சில சுவாரசியங்கள் உண்டு. நாங்கள் அதை சொல்லப்போவதில்லை. ஆஹா ரவிதேஜா, சத்யா, வெண்ணிலா கிஷோர் காமெடி நன்றாக இருக்கிறது. கண்களுக்கு குளிர்ச்சியாக நாபா நடேஷ், தன்யாஹோப், பாயல் ராஜ்புத் வருகிறார்கள். ராம்கிக்கு பெரிய வேடமில்லை. பாபி சிம்ஹா பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார். கதையில் வரும் சுவாரசிய வில்லன்தான் படத்தின் முக்கியமான பகுதி. அவர், டிஸ்கோ ரா