இடுகைகள்

கார்டெல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கார்டெல்கள் ஆளும் மெக்சிகோ தேசம்! - தினசரி கொல்லப்படும் அப்பாவி மக்கள்!

படம்
  மெக்சிகோ அதிபர் ஆம்லோ கார்டெல்கள் ஆட்சி செய்யும் மெக்சிகோ தேசம் மெக்சிகோ நாட்டை இடதுசாரி பாப்புலிச தலைவர் ஆண்ட்ரேஸ் மானுவேல் லோபஸ் ஆப்ரடார் ஆள்கிறார். இப்படி கூறுவது பெயரளவில்தான். உண்மையில் மெக்சிகோவை   ஆள்வது போதைப்பொருட்களை விற்கும் கார்டெல் குழுக்கள்தான். அதிபரான ஆம்லோ ஆட்சிக்கு வரும்போது தினசரி 89 கொலைகள் நடந்துவந்தன. இப்போது அந்த எண்ணிக்கை கூடி 96 ஆக மாறியிருக்கிறது. ஆட்சி மாற காட்சியும் மாறியிருக்கிறது. என்னதான் நடக்கிறது? இடதுசாரி தலைவரின் ஒற்றைத்திட்டம் கூட நடைமுறைக்கு வரவில்லை. அணுவளவு பயனும் தரவில்லை என்பதே உண்மை. கார்டெல்களில் வேலை செய்யும் நெருக்கடி சூழலில் தள்ளப்பட்ட 2.3 மில்லியன் இளைஞர்களுக்கு   வேலைவாய்ப்பு திறன்களை அளிப்பதாக அதிபர் ஆம்லோ கூறினார். கொலைக்குற்றங்களைக் குறைக்க அறுபதாயிரம் பேர் கொண்ட தேசிய காவல்படையை உருவாக்குவதாக வாக்களித்தார். ஆனால், தேசிய காவல்படை மத்திய அமெரிக்க அகதிகளை தேடி வேட்டையாடி வருவதால், கொலைக்குற்றங்களை தடுக்கமுடியவில்லை. அதேசமயம் நாட்டில் நடைபெறும் கொலைக்குற்றங்களும் கூடி வருகின்றன. அரசு அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இயலாமையில் த

போதைப்பொருட்களுக்கு தடை நீக்கமா?

படம்
மெக்சிகோவில் அதிபராகியுள்ள இடதுசாரி தலைவர் லோபஸ், விரைவில் போதைப்பொருட்களுக்கான தடையை நீக்கவுள்ளார். கஞ்சாவிற்கான தடையை நீக்கியதற்கும் இதற்குமான வேறுபாட்டை லோபஸ் புரிந்துகொள்ளவில்லை என பலரும் இந்த முடிவை விமர்சித்து வருகின்றனர். மெக்சிகோவின் குவாரெரோ பகுதியில் ஹெராயின் கள்ளத்தனமாக ஏராளமாக உற்பத்தியாகி கண்டம் விட்டு கண்டம் ஏற்றுமதியாகிறது. திருட்டுத்தனமாகத்தான். அரசுக்கு, போதைப்பொருட்களை விற்கும் கார்டெல் சண்டைகளைத் தடுப்பதே பெரும் வேலையாக உள்ளது. எனவேதான் இந்த முடிவு. மெக்சிகோவில் போதைப்பொருட்கள் உற்பத்தி நடந்தாலும், இதற்கான வாடிக்கையாளர்கள் அமெரிக்கர்களே. ஆனால் இத்தொழில் காரணமாக ஏற்படும் வன்முறை, மெக்சிகோ கார ர்களின் உயிரைப் பறிப்பதோடு நாட்டிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசின் முடிவைத் தொடர்ந்து ஹெராயின், பெனடாயில் ஆகிய பொருட்களை அதிகம் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். லோபஸ், போலீஸ் மீது நிறைய புகார்கள் வருவதால் அவர்களிடம் போதைப்பொருட்கள் சார்ந்த விசாரணையை தருவதில்லை என முடிவெடுத்துள்ளார். இதுதொடர்பான விசாரணையை தேசிய கார்டு படையை இதற்கென உருவாக்கியுள்ளார். இனி