இடுகைகள்

மரபு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அபாகஸ் மூலம் கணிதம் வளருமா? - ஜப்பானில் புதிய முயற்சி!

படம்
கணிதத்தில் வெல்ல அபாகஸ் பயிற்சி! ஜப்பான் மாணவர்கள் தேசிய அளவிலான கணிதப்போட்டிகளில் வெற்றிபெற அபாகஸ் பயிற்சியை செய்து வருகின்றனர். உலகம் முழுக்கவே கணிதம் பற்றிய அறிவைப் பெறுவதில் ஆர்வமாக உள்ளனர். அதேசமயம் மரபான பல்வேறு கணிதப்பயிற்சிகளை கைவிட்டு வருகின்றனர். அதில் ஒன்றுதான் அபாகஸ். இதனை இன்னும் ஜப்பான் மாணவர்கள் கைவிடாமல் பயின்று வருகின்றனர். அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற கணிதப்போட்டியில் அபாகஸ் பயிற்சியின் திறன் உணரப்பட்டது. போட்டியில் கேட்கப்பட்ட கணிதக்கேள்வி ஒன்றுக்கு விடை ட்ரில்லியனில் வந்தது. இதனைக் கணினி, கால்குலேட்டர் எனத் தேடி எழுதுவதில்  தடுமாற்றம் இருந்தது. அப்போது அபாகஸ் பயிற்சி பெற்ற மாணவர்கள் எளிதாக விடை கண்டுபிடித்து எழுதினர்.  ஜப்பானில் 1970 ஆம்ஆண்டு கற்றுத்தரப்பட்ட அடிப்படை கணிதப் பயிற்சி அபாகஸ். பின்னர் அரசுப்பள்ளி பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. இன்று தனியார் பள்ளிகளில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இதனைக் கற்றுவருகின்றனர். கூடுதலாக, கணிதத் திறனுக்கான பயிற்சியாக அபாகஸ் மாறிவிட்டது. ஜப்பானில் அபாகஸை சோரபன் (Soroban) என்று குறிப்பிடுகின