இடுகைகள்

ஜீவா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூரமொக்கை செக்ஸ் காமெடி - வரலாறு முக்கியம் - சந்தோஷ் ராஜன்- ஜீவா, காஷ்மீரா, விடிவி கணேஷ்

படம்
  வரலாறு முக்கியம் இயக்கம், பாடல்கள்  சந்தோஷ் ராஜன்  இசை ஷான் ரஹ்மான்  மில்லினிய கால இளைஞனின் காதல் லட்சியப் பயணமும், அதற்கு ஏணியாக இருந்து உதவும் அரசியல்வாதியும்…. படத்தின் கதை என்பது இந்தளவுதான். சந்தோஷ் ராஜன் படத்தை செக்ஸ் காமெடியாக எடுக்க நினைத்திருக்கிறார். ஆனால் படம் அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் வந்திருக்கிறது. படத்தை ஒருவர் பார்க்க இரண்டு காரணங்கள இருக்கலாம். ஒன்று, ஜீவா. அடுத்து இசை அமைப்பாளர் ஷான் ரஹ்மான். பாடல்களை இயக்குநரே எழுதியிருக்கிறார். வேலை இல்லாம் சுற்றும் கார்த்திக், தங்கள் வீட்டுக்கு அருகில் குடிவரும் மலையாள குடும்பத்தின் இளைய பெண்ணை  - ஜமுனா (பிரக்யா நாக்ரா) காதலிக்கிறார். பிறகுதான் தெரிகிறது. எடுப்பான மார்புடன் ஒட்டி உரசி உசுப்பேற்றினாலும் கூட தங்கையை விட அக்கா அழகாக, இன்னும் அம்சமாக இருக்கிறார் என. உடனே தனது முதல் காதலை தூக்கிப்போட்டுவிட்டு, யமுனா என்ற அந்த பெண்ணைத் துரத்தி டார்ச்சர் செய்கிறார். அந்தப் பெண்ணின் உடல் அழகுதான் காதலுக்கு காரணம், அதுதான் தன்னை தாக்கி காயப்படுத்துகிறது என்கிறார். அந்த லூசுப் பெண்ணும் அதை ஏதோ மத்திய அரசு கொடுக்கும் வீரதீர  வ

மனிதனை மாற்றுவது கலையா,கலைஞனா? - கடிதங்கள்- கதிரவன்

படம்
  22.1.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? வீட்டில் உள்ளோரை கேட்டதாக சொல்லவும். எங்கள் நாளிதழை டிஜிட்டலாக ஐந்து பக்கங்களில் உருவாக்கி பள்ளிகளுக்கு அனுப்புகிறேன் என்று எடிட்டர் சொன்னார். அதாவது, தினசரி எங்களுக்கு வேலை உண்டு.  இன்று மருத்துவர் ஜீவா பசுமை விருது பெற்ற சமஸ், டி.எம்.கிருஷ்ணா ஆகியோரது வீடியோ பார்த்தேன். ஊக்கமூட்டும்படி இருந்தது. சமஸ் செயலூக்கம் பற்றியும், ஜீவா ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் பேசினார். வாய்ப்பாட்டு கலைஞர் கிருஷ்ணா தனது செயல்பாடு, நம்பிக்கை பற்றி உறுதியாக பேசினார். கலை எப்படி மனிதனை மாற்றுகிறது, அதை கலைஞன் எப்படி சாத்தியப்படுத்துகிறான் என்பதை பேசியது அருமை. இன்றைய நாள் இனிதானது இவர்களால்தான். காலையில் கவிதா அக்கா பேசினார். தற்போது ஓமனில் வாழ்கிறார். எப்போதும் உற்சாகமாக இருக்கும் நபர்களில் ஒருவர். தனக்குப் பிடித்த நூல்கள், வாசிப்பு என சிறிது நேரம் பேசினோம். விரைவில் ஈரோட்டுக்கு வருகிறேன் என்றார். இவர் எனக்கு நண்பரல்ல. அண்ணனின் தோழி.  தி ஆர்க் மிஷன் அமைப்பை நடத்தும் ஆட்டோ ராஜா என்பவரைப் பற்றி படித்தேன். 750க்கும் மேற்பட்ட ஆதரவற்றோரை கொடும்