இடுகைகள்

அலுவலக அரசியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திமிர் பிடித்த பெண் அதிகாரி, வேலைக்காக பயந்து பம்மும் செகரட்டரி! மை பாஸ்

படம்
              மை பாஸ் இயக்கம் ஜீது ஜோசப் மும்பை, கேரளா என இரண்டு இடங்களில் நடைபெறும் கதை. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனத்தின் அதிகாரியாக உள்ள பெண்மணி, விரைவில் பதவி உயர்வு பெற உள்ளார். ஆனால் அதனை அலுவலகத்தில் உள்ளவரே தடுக்க நினைக்கிறார். இதற்கிடையில் இந்த அலுவலக அரசியலில் வந்து சிக்கிக்கொள்ளூம் பெண்மணியின் எக்சிகியூட்டிவ் அசிஸ்டெண்ட்  என்ன பாடுபடுகிறார் என்பதே கதை. ஜனப்ரியன் திலீப்பின் படம். படத்தில் காமெடி குறைவு. அலுவலக அரசியலைப் பற்றியே மும்பைப் பகுதி முழுக்க பேசுகிறார்கள். இதனால் அங்கு பெரியளவு காமெடி சமாச்சாரங்கள் ஏதும் இல்லை. கேரளத்திற்கு இளம்பெண் அதிகாரி வரும்போதுதான் காமெடி களைகட்டுகிறது. முதல் பகுதியில் அலுவலக அரசியல் என்பதைப் பார்க்கிறோம் என்றால், அதற்குப்பிறகு பெண் அதிகாரியான மம்தா மோகன்தாஸூக்கு குடும்பம் மீதுள்ள ஆர்வம், அன்பிற்காக ஏக்கம் ஆகியவற்றை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அடுத்து, இதேபோல திலீப்பிற்கு அவரது அப்பா அவரை புரிந்துகொள்ளவில்லை என்ற ஏக்கம் இருக்கிறது. இருவரும் அதைப் பேசிக்கொள்ளும் இடம் நெகிழ்ச்சியானது. இறுதிக்காட்சியும் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. திலீப்பி