இடுகைகள்

தீவிரவாதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மார்பிங் செய்து உருவாக்கிய மாடல் பெண் உண்மையில் வந்தால்.... தக்கராக தூரங்கா.. - தெலுங்கு

படம்
  தக்கராக தூரங்கா சுமந்த், வேதிகா இயக்குநர் ரவி சாவலி இசை  ரகு குஞ்சே தூரமாக இருக்கும்போது இருக்கும் காதல், அருகே இருக்கும்போது பெருகியதா, வற்றியதா என்பதே ஒருவரிக் கதை.  கௌதம், விளம்பர ஏஜென்சியில் வேலை செய்கிறார். அவருக்கு மாடலாக ஒரு பெண் தேவைப்படுகிறார். ஆனால் அவருக்குத் தேவைப்படும் பெண் கிடைக்கவில்லை. இதனால், பல பெண்களின் முகத்தில் உள்ள உருப்படியான பாகங்களை எடுத்து மார்பிங் செய்து பெண் ஒருவரை உருவாக்கி காமாட்சி என பெயர் வைக்கிறார். அவரை இப்படித்தான் இந்த மாடலை உருவாக்கினேன்  என்று சொல்லி விளம்பர ஏஜெனசி ஓனரை கன்வின்ஸ் செய்கிறார்.  மார்பிங் செய்த பெண்ணின் உருவத்தில் நிஜமாகவே ஒரு பெண் விசாகப்பட்டினத்தில் வாழ்கிறார். இந்த விளம்பரங்களால் அந்த பெண்ணின் கல்யாணம் நின்றுபோகிறது. அதற்கு காரணம் கௌதம் என தெரிந்து அவனைத் தேடி வருகிறார். இதில் ஏற்படும் பிரச்னைகளால் இருவரின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. உச்சபட்சமாக தீவிரவாத குழு வேறு இருவரையும் தேடுகிறது. கௌதம், மீனாட்சி என இருவரும் காதல் கொண்டார்களா, இல்லையா என்பதே கதை.  முக்கியமான கதை என்பது கௌதம் கிராபிக்ஸில் உருவாக்கும் பெண் காமாட்சியை அப்பட

தீவிரவாதிகளை சீரியல் கொலைகாரர்கள் என வகைப்படுத்தலாமா? - சைக்கோ டைரி

படம்
            சைக்கோ டயரி தீவிரவாதிகளை தொடர் கொலைகாரர்கள் என வகைப்படுத்தலாமா ? அறிவியல் முறையில் இல்லை என்று தான் கூறவேண்டும் . ஆனால் சிந்தனை முறையில் ஆம் என்று கூறலாம் . குடும்ப வாழ்க்கை , சமூக வாழ்க்கை என இரண்டிலும் வேறுபாடு கொண்ட தனியாக வாழ்க்கையை தொடர் கொலைகாரர்கள் கொண்டுள்ளனர் . தீவிரவாதிகளில் தற்கொலை செய்துகொள்பவராக மாறி தன்னை வெடிக்க வைத்து பெரும் திரளான மக்களை கொல்வது என்ற சிந்தனை தொடர்கொலைகாரர்களுடன் ஒத்துப்போவதுதான் . அதில் மாற்றமில்லை . இவர்கள் கொலை செய்வதில் குறிப்பிட்ட ஐடியா , முறை , சில முன்னோடிகள் என இருக்கும் . இப்படி கொலை செய்வதன் வழியாக இவர்கள் தங்களை முக்கியமானவர்களாக நினைக்கிறார்கள் . பிறருக்கும் இதே தகவல்களை தெரிவிக்கிறார்கள் . தற்கொலைப்படை தாக்குதல்கள் , அரசியல் காரணங்களுக்காக நடைபெறுகின்றன . இதில் கொல்லப்படும் மக்கள் பலியாவதற்கு தகுதியானவர்கள் என்றே தீவிரவாதிகள் நினைக்கின்றனர் . ஆவேசமும் , கோபமும் கொண்ட இளைஞர்களை எளிதாக மூளைச்சலவை செய்து அவர்களை மாற்றி விட முடியும் . தீவிரவாத இயக்கங்கள் பல்லாண்டு காலமாக இதனை செய்துவருகின்றன . உலக நாடுகளில்

சதுரங்க கட்டத்திற்குள் வைத்து வஞ்சக மனிதர்களை வீழ்த்தும் கில்லாடி! - செக் - சந்திரசேகர் யெலட்டி

படம்
                  செக் சந்திரசேகர் யெலட்டி தீவிரவாத தாக்குதலில் மாட்டிக்கொள்ளும் ஸ்மார்ட் திருடன் ஆதித்யா , எப்படி சிறையிலிருந்து ஆப்ரகா டாப்ரா சொல்லித் தப்பிக்கிறான் என்பதுதான் கதை . தெலுங்கு சினிமா என்றாலும் சந்திரசேகர் யெலட்டியைப் பொறுத்தவரை படத்தின் சுவாரசியம் எங்கேயும் ஒரு பிரேம் கூட குறையாது . இந்தப் படத்திலும் கூட அதையேதான் எதிர்பார்க்கிறோ்ம் . படத்தையும் அதேபோல நுணுக்கமாக எடுத்திருக்கிறார் . படத்தை முழுமையாக பார்த்தபிறகு ஷஷாங்க் ரிடெம்ஷன் பாதிப்பில் படம் எடுத்திருக்கிறாரோ என்று பலருக்கும் தோன்றும் . அந்த படத்தின் பாதிப்பு திரை ரசிகர்களுக்கே இருக்கும்போது இயக்குநருக்கு இருக்காதா ? ஆதித்யா , ஸ்மார்ட்டாக ஏடிஎம் கார்டு திருடுவது , நுட்பமாக பல்வேறு இடங்களில் புகுந்து பணத்தை அபேஸ் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறான் . ஆனால் அவன் சந்திக்கும் யாத்ரா ( எ ) இசபெல் என்ற பெண் அவனது வாழ்க்கையை தலைகீழாக மாற்றிப் போடுகிறாள் . ஆம் இரண்டே காட்சிகளில் காதல் பூக்கிறது . இப்படியெல்லாம் நடக்காதே என்பதற்குள் கல்யாணி மாலிக்கின் அழகான இசையில் கொண்டாட்டமா

சிறந்த கதை நூல்கள் 2020! டைம் இதழில் பரிந்துரைக்கப்பட்ட நாவல், சிறுகதை நூல்களின் பட்டியல்!

படம்
                சிறந்த கதை நூல்கள் ஐ ஹோல்ட் எ வோல்ஃப் பை தி இயர்ஸ் லாரா வான் டென் பெர்க் அனைத்தும் பெண்களை மையமாக கொண்ட சிறுகதைகள் . நிஜ வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப்படும் பெண்களின் கதைகளை நகைச்சுவையும் , வலியும் கலந்து படைப்புகளாக்கியுள்ளார் . பர்னிங் மேகா மஜூம்தார் ஒரு முஸ்லீம் பெண் தவறுதலாக தீவிரவாதி என குற்றம் சாட்டப்படுகிறாள் . அவளுக்கு எதிராக அனைத்து சாட்சிகளும் உருவாக்கப்படுகிற நிலையில் எப்படி அவளின் வாழ்க்கை பயணிக்கிறது என்பதை இந்தியாவின் அரசியல் நிலையை அப்படியே கண்ணாடி போல காட்டும் படைப்பு இது . வேர் த வைல்ட் லேடீஸ் ஆர் அயோகா மட்சுதா ஜப்பானிய பேய்கதைகளை பெண்ணிய பார்வையில் சொல்லியிருக்கிறார் ஆசிரியர் . இங்கு பேசப்படும் சூழல்கள் அனைத்தும் தினசரி வாழ்க்கையில் நாம் அனைவரும் சந்திப்பதுதான் . பிரெஸ்ட் அண்ட் எக்ஸ் மீகோ காவகாமி   ஜப்பானிய நாட்டில் வாழும் அக்கா , தங்கை , அவர்களுடைய உறவுப்பெண் ஆகியோரின் வாழ்க்கையைச் சொல்லும் படைப்பு . ஹோம்லேண்ட் எலிஜீஸ் அயத் அக்தர் அக்தர் , தனது பாகிஸ்தானிய பரம்பரை வழி அவரது பெயர

புத்தரை நிர்மாணிக்கும் ஆப்கன் அரசு- கலாசார மறுமலர்ச்சி!

படம்
மீண்டும் புத்தர்! 2001 இல் ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் சிதைக்கப்பட்ட புத்தரின் சிலைகள் ,தற்போது அமெரிக்க அரசின் உதவியுடன் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ”புத்தரின் சிலைகளைச் சீரமைப்பதன் மூலம் எங்கள் கலாசாரத்தை மீட்கிறோம்” என்கிறார் அருங்காட்சியக மியூசிய இயக்குநரான மொகமத் ரஹிமி. மாற்றுத்திறனாளி ஐ.ஏ.எஸ்! கேரளத்தின் திருவனந்தப்புரத்தில் துணை ஆட்சியராக பார்வைத்திறன் அற்ற பிரஞ்சல் பாடீல் பதவி ஏற்றிருக்கிறார். மகாராஷ்டிரத்தைச்சேர்ந்த இவர் 2016 இல் யுபிஎஸ்சி தேர்வு எழுதி வென்றவர். சமூகநீதித்துறையின் முதன்மைச் செயலராக பணியாற்றவுள்ள பிரஞ்சல், இந்தியாவின் முதல் பார்வைத்திறன் அற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார். நிலவில் இங்கிலாந்து! இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்பேஸ்பிட் எனும் நிறுவனம், 2021இல் நிலவிற்கு ரோவரை கொண்டு செல்ல உள்ளது.  விண்வெளிக்கு 1.3 கி.கி. எடைகொண்ட ரோவரை ஆஸ்ட்ரோபாடிக்  நிறுவன லேண்டர் கொண்டு செல்லும். அறிவியல் நிகழ்ச்சியில் இச்செய்தியைக் கூறியுள்ளார் ஸ்பேஸ்பிட் நிறுவனத் தலைவரான பாவ்லோ தனாஸ்யுக். மின் சிக்கனம்! பஞ்சாபில் மின்சார வாரியம் மின்சாரத்தையும், நீரையும் சிக