இடுகைகள்

காமிக்ஸ் - ஜான்சில்வர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜான்சில்வர் உதயம்!

படம்
இங்கிலாந்து ராணுவத்தின் விமான பைலட்டான ஜான் சில்வர், விமானி என்பதையும் தாண்டிய உளவுத்திறமை கொண்டவர். உளவுத்துறை க்யூ அமைப்பால் ஒரு சர்ச்சைக்குள்ளான விமானத்தை ஓட்ட பணிக்கப்படுகிறார். தன் மனம் முதலிலேயே எச்சரித்தாலும் அமைப்பு மீது கொண்ட நம்பிக்கையால் விமானம் ஓட்ட ஒப்புக்கொள்கிறார். ஆனால் இங்கிலாந்து மற்றும் ஜெர்மன் நாட்டு கூட்டுத்தயாரிப்பான விமானத்தை கடத்த முயற்சி நடைபெறுகிறது என வதந்தி தகவல் வருவதால், முன்னதாகவே இங்கிலாந்து தன் உளவாளியை பயணியாக விமானத்தில் அமர்த்துகிறது. அதுபோலவே ஜெர்மனியும் செய்கிறது. ஆனால் இந்த உண்மை வெளியே தெரியும்போது நிலைமை சிக்கலாகிறது. இருவரின் சண்டையால் விமானம் கீழே விழுந்து நொறுங்குகிறது. பழி சில்வர் மீது வந்து விழ, அவரைக் கொல்லவும் அரசு முயற்சிக்கிறது. சில்வர் தன் மீதான பழியை எப்படி துடைத்து நாட்டைக் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. ஜான் சில்வரின் அப்பாவித்தனத்தை வைத்து உளவுத்துறை க்யூ எப்படி சுயநலமாக செயல்படுகிறது, தனது பதவியைக் காப்பாற்ற அவர் என்ன செய்கிறார் என்பதை அட்டகாச ஆக்சனில் கூறிச்செல்கிறது. புதிய கதையில் போலீஸ் இன்பார்மர் சுடப்பட, அவர