இடுகைகள்

உடல்நலம் - சர்க்கரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சர்க்கரை டேட்டா!

படம்
சர்க்கரை ஆபத்து! 1990-2016 காலகட்டத்தில் இந்தியாவில் நீரிழிவு நோயின் அளவு 65 மில்லியன். இதேயளவில் இருபது வயதுக்கு மேலானவர்கள் பாதிக்கப்படும் அளவு 39%. இந்தியாவில் ஏற்படும் நீரிழிவு மரணங்களின் அளவு 131%(1990-2016). இறப்பதற்கான காரணங்களில் 13 ஆவது இடத்தில் நீரிழிவு உள்ளது(1990 இல் 35 ஆவது இடம்). நல்ல தூக்கம், 7.30 க்குள் இரவு உணவு, மாவுச்சத்துப்பொருட்களை குறைத்து உடல் பருமனை தவிர்ப்பது நீரிழிவு பிரச்னையை தவிர்க்க உதவும். இந்தியர்களில் நூற்றுக்கு 38 பேர்(உலகளவில் 19) நீரிழிவு பிரச்னையால் தடுமாறி வருகின்றனர். உடலின் குளுக்கோஸ் அளவை கண்காணிக்கும்(CGM) கருவிகளான பேட்ச், ஃபிளாஷ் சிஸ்டம் ஆகியவை சந்தையில் கிடைக்கின்றன. இவற்றின் மூலம் தினசரி ரத்த சர்க்கரையின் அளவை எளிதாக சரிபார்க்கலாம். குறிப்பிட்ட நேரத்தை செட் செய்தால் எளிதாக இன்சுலினை உடலில் செலுத்தும் இன்சுலின் பென், இன்சுலின் பம்ஸ் ஆகியவை சந்தையில் நீரிழிவு நோயாளிகளுக்கான புதுவரவு. தினசரி மூன்றுவகை பழங்களை அதன் தோல்களோடு சாப்பிடலாம்.நார்ச்சத்து உணவுகள், காய்கறி சாலட் ஆகியவை உண்ண ஏற்றவை.