இடுகைகள்

நயன்தாரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடமையில தவறாத தங்கமான பையன், காதலியின் தலைமறைவான அப்பாவுக்கு உதவுவாரா? - பாபு பங்காரம்

படம்
 பாபு பங்காரம் இயக்கம் மாருதி வருவாய்த்துறை அதிகாரி சாஸ்திரி தலைமறைவாக இருக்கிறார். அவர் மீது சக அதிகாரியை கொன்றதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. இதைபற்றி விசாரிக்க கிருஷ்ணா எனும் மனிதநேயமும் கருணையும் கொண்ட உதவி கமிஷனர் வருகிறார். ஆதரவற்ற சாஸ்திரி குடும்பத்திற்கு தனது அடையாளம் கூறாமல் உதவுகிறார். அந்த குடும்பத்தில் மூத்த பெண் ஷைலஜா மீதுகாதல் கூட கொள்கிறார். இந்த குடும்பத்து பெண்களை மல்லேஸ்வரன் என்ற ரவுடி, சாஸ்திரி எங்கே என கேட்டு மிரட்டுகிறார். இந்த நிலையில் கிருஷ்ணா யார் குற்றவாளி என கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் இறுதிப்பகுதி.  கர்ப்பிணிப்பெண், குழந்தையை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற தனக்கு சிகிச்சை வேண்டாம் என்று சொல்லி இறந்துபோன ஜமீன்தாரின் பேரன், கிருஷ்ணா. ரவுடிகளை அடித்து உதைத்தாலும் அவர்களை சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்த்து பிறகு லாக்கப்பில் தள்ளும் கருணை மனமுடையவன். இந்த குணம் தாத்தாவிடம் இருந்து வந்தது. இந்த குணங்களை அவன் கடமைக்காக சற்று தள்ளிவைத்து ரவுடி மல்லேஸ்வரன் ஆட்களை அடித்து உதைக்க வேண்டியதிருக்கிறது. முதலில் அதற்கு சற்று தயங்குகிறார்.  இனி கருணை க

குடும்ப பாசத்தால் வெட்டியாக சுற்றும் நாயகன் காட்டும் வீரம்! ஆறடி புல்லட் - கோபிசந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ்

படம்
  ஆறடி புல்லட்  இயக்கம் பி கோபால் இசை மணி சர்மா  கோபி சந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், அபிமன்யூசிங் கட்டுமானத் தொழிலை சொந்தமாக தொடங்க நினைக்கும் இளைஞன், கோபி சந்த். ஆனால் அப்பா அவன் மீது நம்பிக்கை கொள்வதில்லை. இதனால் அவன் கட்டுமான நிறுவனத்தில் வேலைக்குப் போகிறான். அதுவும் கூட அப்பாவின் சிபாரிசில்தான். அங்கு சென்றாலும் கூட தவறாக வேலை செய்பவர்களை வாயால் திட்டி கையால் அடித்து காலால் உதைக்கிறான். இதனால் வேலை போகிறது. என் குடும்பம்தான் எனக்கு முக்கியம் என வந்துவிடுகிறான். இப்படி இருக்கும் சூழலில் விஜயவாடாவில்  உள்ள காசி என்ற ரவுடியை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதனால் அவனுக்கும் அவன் நேசிக்கும் குடும்பத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதுதான் படத்தின் கதை.  படத்தில் காமெடி என்பது பிரம்மானந்தம் வரும்போதுதான். அதுவரை நாயகனே சிறியதாக காமெடி செய்ய முயல்கிறார். அதெல்லாம் பெரிதாக எடுபடவில்லை.  குடும்பத்தோடு இருக்கவேண்டும் என்பதுதான் நாயகனின் லட்சியம். அதற்காக சுய தொழில் செய்ய நினைக்கிறான். ஆனால் குடும்பத்திடம் அவனுக்கான பாசம் எப்படி உள்ளது என்பதைக் காட்ட ஆக்சன் காட்சிகள்தான் ஒரே சாட்சி. மற்றபடி வேற

அன்புக்காக ஏங்கும் ஆதரற்ற பெண்ணுக்கு காதல் கணவர் கிடைத்தாரா? பாஸ் 2006

படம்
                         பாஸ் - ஐ லவ் யூ பாஸ் - ஐ லவ் யூ இயக்கம், இசை, ஒளிப்பதிவு அனுராதா என்ற குழந்தையை பெண்ணாக பிறந்துவிட்ட காரணத்தால் தூக்கியெறிந்துவிட்டு அவரது அப்பா செல்கிறார். அக்குழந்தையை ஆதரவற்றோர் காப்பகத்தின்ர் எடுத்து வளர்க்கிறார்கள். அந்த குழந்தைக்கு உனக்கு கிடைக்கும் கணவனே தாயாகவும் தந்தையாகவும் இருப்பான் என்று கூறுகிறார் காப்பக தலைவர். அனுராதா வளர்ந்த பிறகு அவளுக்கு அப்படி ஒரு உறவு கிடைத்ததா? அவளது தந்தை அவளை பிறகு வந்து சந்தித்தாரா என்பதுதான் கதை. யுவ சாம்ராட் நாகார்ஜூனா படம் முழுக்க அசத்தியிருக்கிறார். காதல், நட்பு, அன்பை விட வணிகம் பற்றிய அவரது சிந்தனைகள் அசத்துகின்றன. அனுராதாவை ஏற்றுக்கொண்டாலும் அவளை வெளிப்படையாக காதலிக்கிறேன் என்று சொல்ல தாமதித்து தடுமாறும் இடங்களில் ஆசம். நயன்தாரா, கிடைத்த அன்பு காணாமல் போய்விடுவோ என தவித்து கஷ்டப்படும் இடங்களில் நடிக்க முயன்றிருக்கிறார். ஆபீசில் நடைபெறும் காமெடிகள் சிறப்பாக உள்ளன. பிரம்மானந்தம் குறைவான நேரமே வருகிறார். அவரின் காமெடி இல்லாதது, படத்திற்கு பலவீனம். காதல், நட்பு, சோகம் என உணர்ச்சிகளால் அதிகம் பாதிக்கப்படுவர்களுக்கு படம