இடுகைகள்

ஈரோடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெளியே வெயில், உள்ளே புழுக்கம்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
        இயற்கை நேசனின் அற்புத காட்சி அனுபவம் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? சில நாட்களுக்கு முன்னர் வெயில் குறைந்தது போல தெரிந்தது .. இப்போது வெயில் மீண்டும் தன் இயல்பான நிலையில் சுட்டெரித்தது . ஒருமுறை சட்டை போட்டு மதியம் சாப்பிட் அறைக்கு சென்றாலே எனக்கு வியர்வையால் குளித்தது போல ஆகிவிடுகிறது . குங்குமம் தோழியில் வேலை பார்த்த அன்னம் அரசு இப்போது ஜூனியர் விகடன் இதழுக்கு ப் போய்விட்டார் . இந்த தகவலை நான் தாமதமாகவே தெரிந்துகொண்டேன் . நான் இந்த வாரமும் குங்குமம் இதழை வாங்கவில்லை . முன்பு போல அதன் கட்டுரைகள் சிறப்பாக இல்லை . உள்ளடக்க விஷயங்களில் தடுமாறுவது போல தோன்றியது . எங்கள் நாளிதழ் வேலைகளை ஓரளவுக்கு நிறைவு செய்துவிட்டேன் . ஜூலை மாதம் வரை எழுதிவைத்தாயிற்று . ஆகஸ்ட் மாத கட்டுரைகளை இனிமேல்தான் எழுதி தயாரித்து வைக்க வேண்டும் . இன்ஃபோகிராபி வேலைதான் அதிக நாட்களை இழுத்துக்கொள்ளும் என நினைக்கிறேன் . அதையும் அவ்வப்போது தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும் . வனவாசி - விபூதிபூஷன் பந்தோபாத்யாய நாவலைப் படித்தேன் . கோவையிலுள்ள விடியல் பதிப்பக வெளியீடு . கல்கத்

தனியே தன்னந்தனியே.... கடிதங்கள் - கதிரவன்

படம்
  28.2.2022 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?  எப்படி இருக்கிறீர்கள்? நான் புத்தகத் திருவிழாவில் வாங்கிய நூல்களை இன்னும் படிக்கவில்லை. இப்போதுதான் சுப்ரதோ பக்ஷியை முடிக்கும் தருவாயில் இருக்கிறேன். எங்கள் நாளிதழ் அலுவலகத்தில் இருந்து ஒன்றிய அரசு விருது பெற்ற எழுத்தாளர் பாலபாரதி வெளியேறிவிட்டார். அதாவது, வேறு உயர்ந்த சம்பளம் கொண்ட வேலைக்குப் போகிறார். நான் அவருடன் சில மாதங்களாக பேசுவதில்லை. இறுதியாக இன்று வாழ்த்துச் செய்தி மட்டுமே அனுப்பினேன். நான் ஆபீசில் கஷ்டப்பட்ட காலத்தில் எனக்கு உதவியவர் அவர். அவர் கவனித்த பக்கங்களை பார்த்துக்கொள்ள புதிய உதவி ஆசிரியர் வருவார். அல்லது இப்போதுள்ள உதவி ஆசிரியர்களே பகிர்ந்துகொள்ளவேண்டும்.  நேற்று குரூப் மலையாளப் படத்தை பார்க்கத் தொடங்கினேன். படத்தை நன்றாகவே எடுத்திருக்கிறார்கள். இன்னும் முழுதாக பார்க்கவில்லை.  வீட்டில் அம்மாவுக்கு தைராய்டு பிரச்னை தொடங்கிவிட்டது. அதற்கான மருந்தை அவள் சாப்பிடவேண்டும். சாப்பிட்டு வருகிறாள். ஊரில் இருந்து ஈரோடு டவுனில் தனியாக வீடு எடுத்து தங்குவாள் என நினைக்கிறேன். இனி அப்பா கிராமத்தில் சௌகரியமாக இருப்பா

நூலகத்திற்கு செலுத்தும் நன்றிக்கடன்! - த.சீனிவாசனுக்கு எழுதிய கடிதங்கள்

படம்
pixabay நூலகத்திற்கு செலுத்தும் நன்றிக்கடன்!  5.4.2021   அன்பு நண்பர் சீனிவாசனுக்கு, வணக்கம். நலமா? நான் தற்போது ஈரோட்டுக்கு வந்துவிட்டேன். ஜூன் இறுதியில் நாளிதழ் வேலைகள் தொடங்கும் என நினைக்கிறேன். அதுவரையில் நான் ஊரில் இருக்க திட்டமிட்டுள்ளேன். நீங்கள் கொடுத்த அடோமிக் ஹேபிட்ஸ் என்ற நூலை இங்கே படிக்க எடுத்து வந்துவிட்டேன். அதில் பதிமூன்று பக்கங்கள்தான் படித்துள்ளேன். சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு வரும் பேருந்து பயணம் பெரும் களைப்பை உடலில் ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து சேலம், சேலத்திலிருந்து ஈரோடு, ஈரோட்டிலிருந்து கரூர் என மூன்று பேருந்துகளில் ஏறி எட்டு மணிநேரத்திற்கும் அதிகமான நேரம் பயணிக்க வேண்டும்.  இப்படி பாடுபட்டு முக்கி முனகி வீட்டுக்கு வந்தால் இரவில் மின்சாரம் இல்லை. அதுவும் எந்த நேரத்தில் தெரியுமா? தட்டில் சோற்றைப் போட்டு சாப்பிடும் நேரத்தில்....  நூல்களை நூலகத்திற்கு தரும் உங்களது பழக்கத்தைப் பின்பற்றி, எங்கள் ஊர் நூலகத்திற்கு தர ஒன்பது நூல்களை எடுத்து வைத்துள்ளேன். இவை அனைத்துமே புத்தக திருவிழாவில் வாங்கியவைதான்.  தேர்தல் முடிந்தபிறகு நூல்களை கொண்டு சென்று கொடுப்பேன். நூல

காலச்சுவடு 200ஆவது இதழில் உள்ள சிறுகதைகள் பற்றி...! கடிதங்கள்

படம்
  இனிய தோழர் முருகுவிற்கு, நலமா? காலச்சுவடு 200 ஆவது இதழ் வாசித்தேன். அரவிந்தன் அனுபவங்களைப் படித்தேன். ஸ்ரீராமின் கால வியூகம் குரு சிஷ்ய கதையில்  இது மற்றொரு கதை. எழுத்தாளர் மனம் செல்கிற பாதையைக் காட்டுவதாகவே உள்ளது. ஆசை, அகங்காரம் என பல விஷயங்களையும் , உறவு தந்திரங்களையும் வகுக்கிற வியூகம் இது.  போக்கிடம் - கே.என். செந்தில் எழுதியது.  சசி, மதி, லட்சுமணன், ஆறுமுகம் உள்ளிட்டோரின் வாழ்க்கை பந்தாடப்படும் சூழ்நிலை  மற்றும் சிக்கல்கள் பற்றிய கதை இது.  எங்கு கெட்டவார்த்தை பேசப்படவேண்டுமோ அங்கு கடும் வெறுப்புடன் வார்த்தைகளை பாத்திரங்கள் பேசுகிறார்கள். ஜே.பி. சாணக்யாவின் பெருமைக்குரிய கடிகாரம் நெடுங்கதையாக அமைந்திருக்கிறது. ஏமாற்றுகிறவன் புத்திசாலியா, ஏமாறுகிறவன் புத்திசாலியா என்பதை பேசி, நேசிக்கிற விஷயங்களாலேயே ஒருவன் வேட்டையாடப்பட்டால் எப்படியிருக்கும் என்பதை அங்குலம் அங்குலமாக விவரித்திருக்கிறது கதை.  போலியாக இருந்தாலும் அதனை கலாபூர்வமாக பிலிப்ஸ் உருவாக்குவது ஆச்சரியமாக உள்ளது. கதையை படிக்கிற வாசகனே அதில் பங்கேற்பது போன்ற தன்மை நெடுங்கதையை படிக்கும்போது உருவாகிறது. இருநூறாவது இதழ் பற்றி மு

வாய்தா கிடைக்காத வட்டார வழக்கு! -

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ் வாய்தா கிடைக்காத வட்டார வழக்கு இந்திய ஒன்றியத்தில் நிறைய வாய்க்கால் வரப்பு தகராறுகள் உண்டு. இவை மதம், இனம், மொழி  என பலதரப்பட்டது. இதில் முக்கியமானதாக தேசியக்கட்சிகள் மதத்தை நினைக்கின்றன. அதை முக்கியப்படுத்தி மக்களைப் பிரித்து மண்டலமாக்கினால் தேர்தலில் ஜெயித்து விடலாம் என நினைக்கின்றனர். ஆனால் அதுவும் கூட கடினம்தான். தமிழ் பேசுபவர்களில்  நிறைய வேறுபாடுகள் உண்டு.  அதுதான் மண்டல ரீதியான வட்டார வழக்கு. கோவையிலும், ஈரோட்டிலும், திருவண்ணாமலையிலும் பேசுவது தமிழாக இருந்தாலும் அதில் என்ன பேசுகிறார்கள், எதைக் குறிப்பிடுகிறார்கள் என்று புரிந்துகொள்வது கடினம். குறிப்பிட்ட பொருளை என்ன வார்த்தை கொண்டு சொல்ல வருகிறார்கள் என்பதில்தான் அனைத்தும் மாட்டிக்கொள்கிறது. நான் சென்னைக்கு வந்த புதிதில் பேசும்போது, என்னுடைய ஊரில் இருப்பதாக நினைத்துக்கொண்டே பேசுவேன். இதெல்லாம் அறையில் இருந்த எனது ஊர்க்கார அண்ணன்களுக்கு சரிதான். அவர்கள் புரிந்துகொண்டார்கள். எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அதுவே வெளியில் போய் பேசும்போது நிறைய பிரச்னைகள் கிளம்பின.  மயிலாப்பூரில் லக்கி என்ற ஸ்டேசனரி கடை உண்டு. அங

புவிசார் குறியீடு வென்ற ஈரோடு

படம்
the hindu ஈரோட்டு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு இந்தியாவில் மகாராஷ்டிரம், தெலங்கானா, ஈரோடு ஆகிய மாநிலங்களில் பெருமளவு மஞ்சள் சாகுபடி ஆகிறது. ஈரோட்டில் தாளவாடி, கொடுமுடி, சிவகிரி, கோபிசெட்டி பாளையம், அந்தியூர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகள் ஈரோட்டில் மஞ்சள் விளைச்சலுக்கு புகழ்பெற்றவை. மாநில அரசு ஹெக்டேருக்கு 12 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்குகிறது. ஏறத்தாழ 25 ஆயிரம் விவசாயிகள் மஞ்சள் விவசாயம் செய்து வந்தனர். தற்போது சரியான விலை கிடைக்காததால் அந்த எண்ணிக்கை 12 ஆயிரமாக குறைந்துள்ளது. ஈரோட்டில் ஒரு ஹெக்டேருக்கு விவசாயி செலவிடும் தோராயத் தொகை 1.72 லட்சம். ஆனால் கிடைப்பது அதற்கும் குறைவு என்றால் எப்படி விவசாயம் செழிக்கும்? தெலங்கான, மகாராஷ்டிரத்தை விட உற்பத்திச் செலவு ஈரோட்டில் அதிகம். நன்றி: TOI