இடுகைகள்

பட்டினி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பட்டினி கிடப்பவருக்கு உணவு கொடுத்தால் அன்பாகாதா? ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்  வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள் என்ன? வாழ்க்கைதான். நீங்கள் வாழ்க்கையை எப்படியாக உருவாக்கிக் கொள்ளவேண்டுமென நினைக்கிறீர்களோ அதுவேதான். ஒருவரின் வாழ்க்கையில் லட்சியம், குறிக்கோள் என்பது என்ன? அதாவது தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கையில் உள்ள லட்சியத்தைப் பற்றி பேசவில்லை. பொதுவாக அனைவரின் வாழ்க்கையில் உள்ள லட்சியத்தைப் பற்றி கேட்கிறேன். லட்சியத்தை எப்படி கண்டுபிடிப்பீர்கள். யார் அதை உங்களுக்கு காட்டுவார்கள்? வாசிப்பதன் மூலம் அறிந்துவிடமுடியும் என நினைக்கிறீர்களா?   ஒரு எழுத்தாளர் லட்சியம் என்பதை தான் புரிந்துகொண்ட முறையில் எழுதுவார். இன்னொரு எழுத்தாளர் இன்னொரு முறையை பின்பற்றுவார். கஷ்டத்தில் உள்ள மனிதனைச் சென்று லட்சியம் என்னவென்று கேட்டால் மகிழ்ச்சியாக வாழ்வது என்பான். பசியில் இருப்பவனைக் கேட்டால், வயிறு நிறைந்திருப்பது என்பான், பெண்ணைக் கேட்டால், குழந்தை பெற்றுக்கொள்வது என்பாள், அரசியல்வாதியைக் கேட்டால், முக்கியமான அரசியல் தலைவராக ஆக வேண்டும் என்பார். சன்னியாசியைக் கேட்டால் அவருக்கு கடவுளைக் காண்பது அடைவது லட்சியம் என்பார். லட்சியம்,

மரபணுமாற்ற உணவுகள்!

படம்
  மரபணு மாற்ற உணவுகள் உலக நாடுகளில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப உணவுப்பயிர்களை விளைவிப்பது கடினம். எனவே, விளையும் பயிர்களிலுள்ள மரபணுக்களை மாற்றியமைத்து அதனை ஊட்டச்சத்து கொண்டதாக மாற்றுவதை அறிவியலாளர்கள் முன்வைக்கிறார்கள். இதைத்தான் மரபணுமாற்ற பயிர்கள் (GM Foods) என்கிறார்கள். மரபணு மாற்ற பயிர்களில் பூச்சித்தாக்குதல் குறைவு, சத்துகள் அதிகம், குறைந்த நீரே போதுமானது என நிறைய சாதகமான அம்சங்கள் உண்டு. இவை பல்வேறு தரப்பரிசோதனைகளைச் சந்தித்து சந்தைக்கு வருகின்றன. ஆனால் சூழலியலாளர்கள் மற்றும் இயற்கை விவசாயிகளில் சிலர், நீண்டகால நோக்கில் உடல்நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என கூறிவருகின்றனர்.  தொண்ணூறுகளில் ஹவாய் தீவில் பப்பாளித் தோட்டங்களை ரிங்ஸ்பாட் என்ற வைரஸ் தாக்கியது. இதன் விளைவாக, அங்கு பப்பாளி தோட்டங்கள் வேகமாக அழியத் தொடங்கின. இதைத் தடுக்க அறிவியலாளர்கள் ரெயின்போ (Rainbow Papaya) என்ற பெயரில்  பப்பாளியை உருவாக்கினர். இது வைரஸ் தாக்கமுடியாதபடி மரபணுக்களை அமைத்து உருவாக்கியிருந்தனர். இதனால் அங்கு மீண்டும் பப்பாளித் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.   

ஒன்றிய அரசின் பசிபட்டினி பற்றிய ஆவேசமும் உண்மையும்!

படம்
  பசிபட்டினி தொகுப்பு பட்டியல் 2021 யாருக்கும் தான் செய்துகொண்டிருக்கும் விஷயத்தைப் பற்றிய மதிப்பீடுகளைக் கொடுத்தால் உடனே கோபம் வந்துவிடும். காரியம் நடந்துகொண்டிருக்கும்போதே முடிவை சொல்கிறாயே என்று ஒன்றிய அரசும் கூட பட்டினிதொகுப்பு பட்டியல் முடிவை அறிவியல் ஆதாரமே இல்லை என்று எளிமையாக கூறிவிட்டது.  மொத்தம் 116 நாடுகள் உள்ள பட்டியலில் இந்தியா இப்போது 101 இடத்தைப் பிடித்துள்ளது. இந்த இடத்தைப் பிடித்த தற்கே எல்லாம் எங்கள் கட்சி பிரதமரின் உழைப்பால் வந்தது என கட்சி தொண்டர்கள், ஐடி விங்குகள், சமூகவலைத்தள விளக்குகள் கொண்டாடிக்கொண்டு உள்ளனர். ஒன்றிய அரசைப் பொறுத்தவரை இப்படி சமாளிப்பு பதில் சொல்வது இத்தோடு நிற்காது. எளிதாக வணிகம் செய்வதற்கான பட்டியலிலும் தடுமாற்றம், பத்திரிகை ஜனநாயக பட்டியலிலும் பின்னடைவு, எகனாமிஸ்ட் பத்திரிகை கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா குறைத்தே கணக்கு காட்டுகிறது எனசெய்தி வெளியிட்டுள்ளது. இப்படி பல்வேறு ஆய்வுகளையும் தவறு என சுட்டிக்காட்டவேண்டிய தேவையும் அவசியமும் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.  பட்டினிப் பட்டியலை எடுக்க முக்கியமான அம்சங்கள் சில உள்ளன.

உணவு பாதுகாப்புக்கு ஆபத்தாகும் எத்தனால் உற்பத்தி!

படம்
  உணவுப்பயிர்கள் எரிபொருளாகிறது... இந்திய அரசு எரிபொருளில், எத்தனால் கலக்கும் திட்டத்தை வைத்துள்ளது. தற்போது 8 சதவீதம் கலக்கப்படும் எத்தனாலின் அளவை விரைவில் இருபது சதவீதமாக்க அரசு யோசித்து வருகிறது. அரிசி, சோளம், கரும்பு ஆகியவற்றிலிருந்து எத்தனால் தயாரிக்கப்பட்டு வருகிறது. எத்தனாலை இப்பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யத் தொடங்கினால் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.  எத்தனால் கடந்த ஜூன் மாதம், ஒன்றிய அரசு எத்தனால் உற்பத்தியை ஐந்தே ஆண்டுகளில் இருமடங்காக்க திட்டங்களை வகுத்துள்ளது. 2025ஆம் ஆண்டில் எரிபொருளில் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்டிருக்கும். இதற்காக எத்தனாலை உற்பத்தி செய்ய ஏதுவான பயிர்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு நிதியுதவிகளை வழங்கவும், சூழல் தொடர்பான அனுமதியை கொடுக்கவும் தயாராக  இருக்கிறது அரசு. இதன் காரணமாக அரசிடம் உள்ள தானியங்கள் நிறுவனங்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. இதனால் இத்தானியங்கள் தேவைப்படும் மக்கள் சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது.  அரசுக்கு புதிய எத்தனால் திட்டம் மூலம் ஆண்டுக்கு 4 பில்

கொலைகாரக்கருவிகளும் கண்டறியப்பட்டவைதான்!

படம்
                புதிய சாதனங்கள் வாழ்க்கையை நடத்த உதவுகின்றன . அதற்கான கண்டுபிடிப்புகள் நடந்த அதேசமயம் . மதத்திற்கு எதிராக நடைபெறும் அறிவியல் புரட்சிகளை ஒடுக்க பல்வேறு கொடூரமான கருவிகளை மதவாதிகள் கண்டுபிடித்தனர் . இதனால் பல்வேறு கொடூரமான கருவிகள் உருவாயின . அரசுக்கு எதிரானவர்கள் , மதத்திற்கு ஊறு விளைவிப்பவர்கள் , கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் என அனைவரையும் பயத்தின் பிடியில் வைக்க ஏராளமான கொலைக்கருவிகள் , சித்திரவதை சாதனங்கள் உருவாக்கப்பட்டன . அவற்றில் சிலவற்றை பார்ப்போம் . காளைக்குள் கொதிகலன் குற்றவாளியை உலோகத்தில் உருவான காளையின் வயிற்றுக்குள் இறக்கிவிடுவார்கள் . அதன் வயிற்றின் கீழே நெருப்பை மூட்டினால் என்னாகும் ? உள்ளே இருப்பவர் உயிரோடு ரோஸ்ட் ஆவார் . மரணம் உறுதி . ஆனால் அதனை ரசிக்கும் விதமாக செய்யவேண்டுமே ? மரண பயத்தில் அலறுபவரின் குரல் வெளியே டிடிஎஸ் ஒலியில் கேட்கும்படி செய்வதற்கான ஒலி அமைப்பு காளையில் கழுத்து பக்கம் அமைக்கப்பட்டிருந்தது . இந்த ஒலி விலங்கின் உறுமலாக கேட்கும் . இதனை பெரிலஸ் என்று க்ரீஸ் நாட்டு கண்டுபிடிப்பாளர் உருவாக்கினார் . இதில் வதைபடுபவர்கள

இந்திய அரசு தொடங்கியுள்ள ஊட்டச்சத்து திட்டம் ஏழை குழந்தைகளுக்கு உதவுகிறது! போஷான் ஊட்டச்சத்து திட்டத்தின் நிலை!

படம்
            ஆரோக்கியமான இந்தியா ! மத்திய அரசு தொடங்கியுள்ள போஷான் ஊட்டச்சத்து திட்டம் , ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் வயதிற்கேற்ற உயரம் , எடையில் இருப்பதை உறுதி செய்கிறது . பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இணைந்து கடந்த செப்டம்பர் மாதம் போஷன் மா எனும் திட்டத்தை தொடங்கி வைத்தனர் . இதில் பல்வேறு ஊட்டச்சத்தான உணவுகள் பற்றி ரெசிபிகளை பகிர்வது , தாய்மார்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவை நாடெங்கும் தொடங்கின . உண்மையில் இந்த திட்டம் மூலம் குழந்தைகளுக்கு ஏற்பட்டு ஊட்டச்சத்து பாதிப்பு குறையுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது . இந்திய அரசின் திட்டம் , ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பட்டினியைப் போக்கி அவர்களை வலிமையுள்ளவர்களாக மாற்றுவதுதான் . உலகம் முழுவதும் 67.3 கோடி மக்கள் ஊட்டச்சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் . இதில் இந்தியாவின் பங்கு 28 சதவீதம் . அதாவது 18 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக 2017-19 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை (UNICEF,WHO)) கூறுகிறது . இந்த அறிக்கையில் வயதுக்கேற்ற உயரம் , எடை இல்லாத ஐந்து வயதிற்குட்பட்ட க

உலக அமைதிக்கான நோபல் பரிசு! - வேர்ல்ட் புட் புரோகிராம் எனும் ஐ.நாவின் திட்ட அமைப்புக்கு கிடைத்துள்ளது

படம்
        உலக அமைதிக்கான நோபல் பரிசை 28 ஆவது அமைப்பாக வேர்ல்ட் புட் புரோகிராம் எனும் ஐ.நாவின் திட்டம் வென்றுள்ளது. பசியைத் தீர்ப்பதற்காக போராடி, போர் மற்றும் முரண்பாடுகள் சிக்கல்களை நிலவும் பகுதியை அமைதி நிலவச் செய்த பணிக்காக நோபல் அமைதிப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. 1961ஆம்ஆ ண்டு அமெரிக்க அதிபர் வைட் ஐசன்ஹோவர், வேர்ல்ட் புட் புரோகிராம் திட்டத்தை தொடங்குவதற்கான ஆலோசனையை தெரிவித்தார். இந்த அமைப்பு தொடங்கியபிறகு ஈரானின் போயின் ஜாஹ்ரா நகரில் நடைபெற்ற நிலநடுக்க பாதிப்பில் 12 ஆயிரம் மக்கள் பலியாயினர். மேற்சொன்ன அமைப்பு அங்கு கோதுமை, சர்க்கரை, தேயிலை ஆகிய பொருட்களை டன் கணக்கில் அனுப்பி உதவியது. பின்னர், தாய்லாந்து, அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்கும் நிறைய உதவிகளை ஆபத்துகாலத்தில் செய்தது. 1963ஆம்ஆண்டு சூடானின் நியூபியன்ஸில் முதல் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கியது. பின்னர், பள்ளிக்கான உணவு திட்டத்தை டோகோவில் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஐ.நாவின் முக்கியமான திட்டமாக வேர்ல்ட் புட் புரோகிராம் மாறியது. இத்தாலியின் ரோமில் இந்த திட்ட அமைப்பு செயல்படுகிறது. இதில் 36 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் இய

மக்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற கூலிப்படைத்தலைவனிடம் மோதும் முன்னாள் குற்றவாளி! - அன்னோன்

படம்
        அன்னோன் 2011     அன்னோன் 2011 Director: Jaume Collet-Serra Writers: Oliver Butcher (screenplay), Stephen Cornwell (screenplay) டாக்டர் மார்ட்டின் ஹாரிஸ் விபத்தில் அடிபட்டு கோமாவில் கிடக்கிறார் நான்கு நாட்கள் கழித்து விழிக்கிறார். ஹோட்டலுக்கு வந்து பார்த்தால் மனைவியுடன் வேறொருவர் அவர் பெயரில் சரச சல்லாபம் செய்கிறார். இவரை இவரது மனைவி கண்டுகொள்ளவில்லை. தன் அடையாளத்தைச் தேடி ஹூ ஆம் ஐ என நாயகன் அலைவதுதான் படத்தின் கதை. படம், அதன் இறுக்கமான அழுத்தம் தரும் கதை முடிச்சுகளால் சுவாரசியப்படுத்துகிறது. பாஸ்போர்ட் உள்ள பெட்டியை ஏர்போர்டில் விட்டுவிடும் டாக்டர் மார்ட்டின் அதைப் தேடிப்போய் விபத்தில் சிக்கி கோமாவுக்கு போகிறார். அதிலிருந்து மீண்டு தன் அடையாளத்தை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் முக்கியமான பகுதி. மரபணு மாற்ற சோளம் பற்றிய ஆராய்ச்சி,  பசியைப் போக்குவது என சமூக அக்கறையை இம்மியூண்டு எடுத்துக்கொண்டு கூலிக்கொலைகார ர்கள் பற்றி விரிவாக பேசியிருக்கிறார். லியாம் நீசன், ஜினாவாக வரும் டயானா, லிஷ்ஷாக வரும் ஜூன் ஜோனாஸ் ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள். பட

ஊட்டச்சத்துக்குறைவை இந்தியா தீர்க்குமா?

படம்
qrius 2022க்குள் இந்தியா ஊட்டச்சத்துக்குறைவு பாதிப்பை நீக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. தற்போது இந்திய அரசு போஷன் அபியான் எனும் திட்டத்தை ஊட்டச்சத்துக்குறைவைப் போக்க தேசிய அளவில் அமல்படுத்தி வருகிறது. ஆனால் இத்திட்டம் சிறப்பாக செயல்படவில்லை என்பதே யதார்த்த நிலைமை. இதுபற்றிய தகவல்களைப் பார்ப்போம். ஐ.நா அமைப்பின் சூழலியல் நோக்கங்கள் எனும் திட்ட அடிப்படையில்  குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பாதிப்பு பற்றிய அறிக்கை கடந்த 9ஆம் தேதி ராஜஸ்தானில் வெளியிடப்பட்டது. இதனை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டார். 1975ஆம் ஆண்டு ஐசிடிஎஸ் எனும் திட்டத்தை இந்தியா அமல்படுத்தியது. பின்னர், தொண்ணூறுகளில் இத்திட்டத்திற்கான நிதி அதிகரிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் பத்து லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் இறந்தனர். இதில் 62 சதவீதம் பேர் ஊட்டச்சத்துக் குறைவால் இறந்தனர். உலகளவில் பசியால் அவதிப்படுவோரின் பட்டியலில் இந்தியா 102 வது இடத்தில் உள்ளது. அதாவது, 21.9 சதவீத முன்னேற்றம் மட்டுமே பெற்றுள்ளது. இந்தியாவை விட பிரேசில், நேபாளம், பாகிஸ்தான் ஆகியவை சிறப்பான முன்னேற்றத்தை க

அறிவியல் பிட்ஸ்!

பிட்ஸ் 2030 ஆம் ஆண்டுக்குள் ஐ.நாவின் வறுமை ஒழிப்பைச் சாதிக்க தனிநபருக்கு தலா 140 ரூபாய் தினசரி அரசு வழங்கவேண்டும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. பிற ஆசிய நாடுகளுக்கு இத்தொகை ஒரு டாலர் மதிப்பில் உள்ளது. 42 நாடுகளைச் சேர்ந்த 143 மில்லியன் மக்கள் பசி, பட்டினியில் கிடந்து உழல்கின்றனர். ஆஃப்கானிஸ்தான், சூடான், காங்கோ, நைஜீரியா, சிரியா, ஏமன் ஆகிய நாடுகள் உணவு பிரச்னையில் பாதிக்கப்பட்டுள்ளன. 26 நாடுகள் சூழல் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பால் 10 மில்லியன் மக்களும், உணவு பாதுகாப்பு பிரச்னையில் 23 மில்லியன் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூ ஹாம்ஸையர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அங்கு வாழ்ந்த 14 காட்டு தேனீக்கள் இனம் அழிந்துவிட்டது என கண்டறிந்துள்ளனர். கட்டடங்களில்  பசுமை தாவரங்களை வளர்த்தால் ஆக்சிஜன் அளவு அதிகரிப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த போர்லாண்ட் பல்கலைக்கழகம் அறிக்கை அளித்துள்ளது.