மரபணுமாற்ற உணவுகள்!

 













மரபணு மாற்ற உணவுகள்

உலக நாடுகளில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப உணவுப்பயிர்களை விளைவிப்பது கடினம். எனவே, விளையும் பயிர்களிலுள்ள மரபணுக்களை மாற்றியமைத்து அதனை ஊட்டச்சத்து கொண்டதாக மாற்றுவதை அறிவியலாளர்கள் முன்வைக்கிறார்கள். இதைத்தான் மரபணுமாற்ற பயிர்கள் (GM Foods) என்கிறார்கள்.

மரபணு மாற்ற பயிர்களில் பூச்சித்தாக்குதல் குறைவு, சத்துகள் அதிகம், குறைந்த நீரே போதுமானது என நிறைய சாதகமான அம்சங்கள் உண்டு. இவை பல்வேறு தரப்பரிசோதனைகளைச் சந்தித்து சந்தைக்கு வருகின்றன. ஆனால் சூழலியலாளர்கள் மற்றும் இயற்கை விவசாயிகளில் சிலர், நீண்டகால நோக்கில் உடல்நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என கூறிவருகின்றனர். 

தொண்ணூறுகளில் ஹவாய் தீவில் பப்பாளித் தோட்டங்களை ரிங்ஸ்பாட் என்ற வைரஸ் தாக்கியது. இதன் விளைவாக, அங்கு பப்பாளி தோட்டங்கள் வேகமாக அழியத் தொடங்கின. இதைத் தடுக்க அறிவியலாளர்கள் ரெயின்போ (Rainbow Papaya) என்ற பெயரில்  பப்பாளியை உருவாக்கினர். இது வைரஸ் தாக்கமுடியாதபடி மரபணுக்களை அமைத்து உருவாக்கியிருந்தனர். இதனால் அங்கு மீண்டும் பப்பாளித் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. 


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்