வீட்டுக்கு எளிதாக கடன் கிடைக்கிறது. ஆனால் கல்விக்கடனை வாங்குவது சுலபமல்ல! - ஆசிஷ் பரத்வாஜ்

 










நேர்காணல்

ஆசிஷ் பரத்வாஜ்

சூழல் அறிவியலாளர்

சூழல் அறிவியலாளராக ஆக எப்படி முடிவு செய்தீர்கள்?

நான் தொடக்கத்தில் வேலை செய்த நிறுவன உரிமையாளர்கள், இத்துறையைத் தேர்ந்தெடுக்க உதவினர். 2015ஆம் ஆண்டு நான் வேலைக்கு போகலாம் அல்லது மேற்படிப்பு படிக்கலாம் என இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கவேண்டியிருந்தது. குடும்பத்தினரின் ஆதரவு கிடைத்ததால் படிப்பை தேர்ந்தெடுத்தேன். அதுதான் என் வாழ்க்கையில் எடுத்த முக்கியமான முடிவு. 

படிக்கும்போது என்னென்ன சவால்களை சந்தித்தீர்கள்?

கார் அல்லது வீடு வாங்க கடன் பெறுவதை விட கல்விக்கடன் பெறுவது கடினம். கல்வி உதவித்தொகை கிடைத்ததோடு, குடும்பத்தினரின் ஆதரவும் எனக்கு கிடைத்தது.  ஐரோப்பாவில் வேலை கிடைப்பது கடினம். அங்கு வேலை கிடைக்க திறமையோடு, மொழியைப் பேசவும் தெரிந்திருக்க வேண்டும். இதனால் இன்டர்ன்ஷிப் செய்து திறனோடு மொழியை பேசவும் கற்றேன். 

தற்போது செய்துகொண்டிருக்கும் பணி, அதில் எதிர்கொண்ட  சிக்கல்களையும் கூறுங்கள்.

புதுப்பிக்கும் ஆற்றல் (நீர், ஹைட்ரஜன் செல், சூரிய ஆற்றல், காற்று ) தொடர்பாக பணியாற்றி வருகிறேன். எனது குழுவிற்கு தகவல், ஆய்வு பற்றிய தகவல்களை சேகரித்து கொடுக்கிறேன். இன்று உலகம் முழுவதும் தூய ஆற்றல் ஆதாரங்களை பயன்படுத்த முயன்று வருகின்றனர். கூடவே கார்பன் வெளியீட்டையும் கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். 

உங்களின் பணி சமூகத்தில் எப்படி பிரதிபலிக்கும் என நினைக்கிறீர்கள்?

காலநிலை மாற்ற பாதிப்புகளை சமாளிப்பது, மக்களின் வாழ்க்கையை எளிமையாக்குவது தொடர்பாக நான் பணியாற்றி வருகிறேன். குடிநீர், புதுப்பிக்கும் ஆற்றல் பற்றித்தான் முக்கியத்துவம் கொடுத்து ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறேன். இதுதான் சமூகத்திற்கான எனது பங்களிப்பாக நினைக்கிறேன். 





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்