உயிரி தொழில்நுட்பத்துறைக்கு அடித்தளமிட்டவர்களில் முக்கியமானவர்! - ஸ்டான்லி என் கோஹென்

 









ஸ்டான்லி என் கோஹென் (Stanley N cohen

1935)



அமெரிக்காவின் நியூஜெர்சியில் யூதப்பெற்றோருக்கு(பெர்னார்ட், இடா) பிறந்தேன்.  எலக்ட்ரீசியனான பெற்றோருக்கு பல்வேறு வேலைகளில் உதவி வந்தேன். பிறகு, பென்சில்வேனியாவில்  மருத்துவம் படித்தேன். பாக்டீரியாவின் டிஎன்ஏ வளையமான பிளாஸ்மிட்ஸ் (Plasmids) பற்றி ஆய்வு செய்தேன். 

பாஞ்சோ, உகுலேலே இசைக்கருவிகளை  இசைப்பது பிடித்தமானது.

1964-65 காலகட்டத்தில், ஜெர்ரி ஹர்விட்ஸ் ஆய்வகத்தில் பணியாற்றியபோது பாக்டீரிய மரபணுக்கள் மீது ஆர்வம் பிறந்தது. 1972ஆம் ஆண்டு ஹெர்பர்ட் போயர் என்ற ஆராய்ச்சியாளரைச் சந்தித்து ஒன்றாக ஆய்வு செய்யத் தொடங்கினர். 1973ஆம் ஆண்டு,  மறுசீரமைப்பு டிஎன்ஏ நுட்பத்தைக் கண்டறிந்து வெளியிட்டனர்.  

1988ஆம் ஆண்டு கோஹெனுக்கு அமெரிக்க தேசிய  அறிவியல் பதக்கம் வழங்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு போயருக்கு இப்பரிசு, வழங்கப்பட்டது. உயிரி தொழில்நுட்பத்துறைக்கு அடித்தளமிட்டவர்களில் ஸ்டான்லி என் கோஹேனுக்கு முக்கியப் பங்குண்டு. 

https://www.whatisbiotechnology.org/index.php/people/summary/Cohen 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்