கலாப்பகோஸ் தீவு ஆச்சரியகரமானது! - வில்லியம் ஹெச் துர்ஹாம்!

 








நேர்காணல்
வில்லியம் ஹெச் துர்ஹாம் 

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பரிணாம மானுடவியல் மற்றும் உயிரியல் துறை பேராசிரியராக உள்ளார். கலாப்பகோஸ் தீவில் உள்ள உயிரினங்கள் பற்றிய ஆய்வு செய்து வருகிறார். 

கலாப்பகோஸ் தீவு மனித வாழ்க்கையோடு எந்த விதத்தில் இசைவாக உள்ளது?

கலாப்பகோஸ் தீவு, மனித வாழ்க்கை எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதை விளக்கும் தனித்துவமான இடம். மனிதர்களின் பலம், திறன்கள், பாதுகாப்பு ஆகியவற்றை பிற உயிரினங்களிடமும் காணலாம். நாம் பெரும் உயிரினங்களின் இனக்குழுவில் ஒரு அங்கம். தாவரங்கள், மரங்கள், பூச்சிகள், விலங்குகள் ஆகியவையும் நமக்கு உறவினர் போலத்தான். இதை உணர்ந்தாலே இயற்கை சூழலை கையாளும் முறைகள் மாற வாய்ப்புள்ளது. 

காலநிலை மாற்றத்தால் கலாப்பகோஸ் தீவு பாதிக்கப்பட்டுள்ளதா?

தீவில் உள்ள உடும்பு (Marine iguana), நீளமானது. காலநிலை மாற்றத்தால் அதன் நீளம் தற்போது குறைந்து வருகிறது. இம்மாற்றம் 1905 தொடங்கி 2000 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடைபெற்றுள்ளது. எல் நினோ பருவநிலை மாற்றம், வெப்பம் தொடர்ந்து அதிகரிப்பது கடலிலுள்ள பாசிகளை அழிக்கிறது. கடல் பாசிகளை உடும்புகளின் முக்கிய உணவாகும்.  உடும்புகளின் உடல் நீளம் குறைந்து வருவதற்கு, உணவுப் பற்றாக்குறையும் முக்கியக் காரணமாக உள்ளது. 

தீவில் உங்களை ஆச்சரியப்படுத்திய உயிரினம் உள்ளதா?

கலாப்பகோஸ் டெய்சிஸ் எனும் இனத்தில் நிறைய தாவர வகைகள் உள்ளன. அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஸ்கேலெசியா (Scalesia) எனும் தாவர வகையில் 14 பிரிவுகள் உள்ளன. அமெரிக்காவின் ஓஹியோவில் சிறுவனாக இருந்தபோது,  நான் டெய்சி செடிகளை நட்டு வளர்த்து வந்தேன். வீட்டில் இரண்டு அடியாக வளர்ந்த செடி, கலாப்பகோஸ் தீவில் 60 அடி உயரத்திற்கு வளர்கிறது. சார்லஸ் டார்வினின் இயற்கைத் தேர்வு கோட்பாட்டின்படி ஒளி, நீர் தேவைக்காகவே டெய்சி செடி போட்டியிட்டு உயரமாக வளர்கிறது. 

Galapagos species are exuberent and unique their evolution mirrors the kinship of life


TOI 25.6.2022

https://anthropology.stanford.edu/people/william-h-durham

https://woods.stanford.edu/people/william-durham

கருத்துகள்