காலநிலை மாற்றத்திற்கேற்ப பழக்கவழக்கங்கள் மாறும் விலங்குகள்!

 








காலநிலை மாற்றத்திற்கேற்ப மாறும் விலங்குகள்!

உலகமெங்கும் வெப்பநிலை அதிகரிப்பது,வறட்சி, மழைப்பொழிவு கூடி வெள்ள பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கேற்ப விலங்குகளும் தம்மை மாற்றிக்கொண்டு வருகின்றன. அப்படி மாறிய சில விலங்குகளைப் பார்ப்போம். 

சில்லென்ற பாறைக்குகை

முயல் போன்ற தோற்றத்தில் பழுப்புநிறம் கொண்ட விலங்கு, பிகா (Pika). அமெரிக்காவின் பசிபிக் கடல்பகுதியின் மேற்குப்புறத்தில் உள்ள பாறைகளில் வாழ்கிறது. பிகா வசிக்கும் பாறைத்திட்டிற்கு டாலுசஸ் (Taluses)என்று பெயர். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சற்று உயரமான பாறைப்பகுதிக்கு சென்றுவிட்டது என ஆராய்ச்சியாளர்கள் அறிந்துள்ளனர். இவை,  தனது வாழிடத்திலிருந்து வெளிவருவது உணவிற்கான புற்களையும், காட்டுப் பூக்களையும் சேகரிக்க மட்டுமே. பிகா, தனக்குத் தேவையான உணவுகளை முன்பே சேகரித்து குவித்து வைத்துக்கொள்கிறது. இதை சூழலியலாளர்கள் வைக்கோல் (Haystakes) என அழைக்கிறார்கள். வெளியில் உள்ளதை விட பிகாவின் குகை 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் கூடுதலாக உள்ளது. வாழுமிடத்தில்,  உணவு எளிதாக கிடைப்பதால் இதனையும் சமாளித்து வாழ்கிறது இச்சிறுவிலங்கு.  

புயலைச் சமாளிக்கும் கரீபிய பல்லி

பிரிட்டிஷாருக்கு சொந்தமானது துர்க்ஸ், கைகோஸ் தீவு. இங்கு 2017ஆம் ஆண்டு இர்மா, மரியா என இரண்டு புயல்கள் தாக்கின. இதன் விளைவாக இங்கு வாழ்ந்த அனோல்ஸ் பல்லிகள் (Anoles lizard) அழிந்திருக்குமா என ஆராய்ச்சியாளர்கள் தேடத் தொடங்கினர். இதில், அனோல்ஸ் பல்லிகள் இரு புயல்களையும் சமாளித்து உயிர்வாழ்ந்ததைக் கண்டுபிடித்தனர். மரங்களை, கிளைகளை இறுக கால்களால் பற்றிப்பிடித்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. கரீபிய பல்லி முன்கால் பெரியது. பின்கால்கள் குட்டையானவை. இத்தீவில் அடிக்கடி புயல் ஏற்படுவதால் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதை அனோல் பல்லி கற்றுக்கொண்டிருக்கிறது. 

பழம் தின்னும் பழுப்புக்கரடி

அமெரிக்காவில் உள்ளது, அலாஸ்காவின் கோடியாக் தீவு (Kodiak Island). இங்கு வாழும் பழுப்பு கரடிகளின் முக்கியமான உணவு சால்மன் மீன். 700 கிலோ வரையில் பெரிதாக இருக்கும் கரடி தீவிலுள்ள ஏராளமான ஆறுகளில் நின்று சால்மன் மீன்களை வேட்டையாடி வந்தது. ஆனால் மீன்கள் ஆறுகளில் வரும் காலத்தில் பழுப்புக்கரடிகள் அவற்றை வேட்டையாட வரவில்லை. எங்கே போனது என ஆராய்ச்சியாளர்கள் தேடினால், ரெட் எல்டர்பெர்ரி (Red elderberry) பழங்களை சாப்பிடுகிறது என கண்டறிந்தனர். இப்பழத்தில் புரதமும், மாவுச்சத்தும் நிரம்ப உண்டு. வசந்தகாலம், கோடைக்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் கரடியை மீன்களை விட பெர்ரிகளே முக்கியம் என யோசிக்க தூண்டியிருக்கலாம் என சூழலியலாளர்கள் கூறுகின்றனர். 


BBC wildlife june 2022

https://www.kodiakwilderness.com/hunting-adventures/kodiak-brown-bear/


கருத்துகள்