காரம் கொஞ்சம் தூக்கலாக இருக்கோணுங்க.....
காரம் கொஞ்சம் தூக்கலாக இருக்கோணுங்க..... மிளகாயின் காரம், உடலில் வெப்பத்தையும் வலியையும் ஏற்படுத்தக்கூடியது. ஆனால் அப்படி இருந்தாலும் கூட மக்கள் அதை உணவில் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அதிக காரம் கொண்ட சிவப்பு மிளகாய், சீனி மிளகாய் என எந்த ரகம் வந்தாலும் அதில் தூள் வாங்கி அல்லது நேரடியாகவே வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஏன் இந்த காரசார மோகம்? அண்மையில், டென்மார்க் நாட்டின் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தென்கொரிய நாட்டின் மூன்று வகை நூடுல்ஸ் வகைகளை விஷத்தன்மை கொண்டதாக அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு காரணம், அந்த மூன்று வகை நூடுல்ஸ்களுமே அதீத காரச்சுவையைக் கொண்டவை. குழந்தைகளுக்கு இந்த நூடுல்ஸ் வகைகளை உண்ணக்கொடுப்பது ஆபத்து. இதில் காப்சைசின் என்ற வேதிப்பொருள் அதிக அளவில் உள்ளது. இதுவே காரத்தன்மையை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளனர். தெற்கு, மத்திய அமெரிக்காவிலிருந்து மிளகாய் செடியை உலகிற்கு அறிமுகம் செய்தவர், கிறிஸ்டோபர் கொலம்பஸ். இவர் மூலமே காப்சிகம் என்ற அறிவியல் பெயர் கொண்ட மிளகாய், சந்தையில் இருக்கிறது. நம் உணவிலும் காரச...