இடுகைகள்

முத்தாரம் பிட்ஸ்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாப்கார்ன் பெருமை இதுதான்!

படம்
பிட்ஸ்! மைக்ரோவேவ் ஒவனில் முதல்முறையாக சமைக்கப்பட்ட உணவுப்பொருள், பாப்கார்ன். நள்ளிரவு முதல் காலை 6 மணிவரை பதினாறு வயதுக்குட்பட்டோர் வீடியோகேம் விளையாடுவதை தென்கொரியா தடைசெய்துள்ளது. இச்சட்டத்திற்கு Shutdown Law என்றுபெயர். குரங்கு முகம்  கொண்ட பூக்களுக்கு(orchid) Dracula Simia என்று பெயர். இங்கிலாந்தில் 1600 ஆம் ஆண்டில் Whipping Tom என்ற மர்ம மனிதர் பீதியூட்டிவந்தார். தெருவில் தனியாக நடந்து செல்லும் பெண்களை பின்புறத்தில் இரும்புக்கம்பியால் அடித்து வீழ்த்திவிட்டு, ஸ்பாங்கோ என கூறியபடி தப்பி ஓடுவது அவரின் பாணி. கான்டாக்ட் லென்சிற்கான ஐடியாவை 1508 ஆம் ஆண்டு ஓவியரும் கண்டுபிடிப்பாளருமான லியானார்டோ டாவின்சி உலகிற்கு அறிமுகப்படுத்தினார். 1814-1830 காலகட்டத்தில் பிரான்சின் கொடி பளிச் வெள்ளையாக இருந்தது.

வீக்எண்ட் பிட்ஸ்!

பிட்ஸ் ! ஹ்ஹா (Huh?) என்பது அனைத்து மொழிகளிலும் புரியும் மக்கள் புரிந்துகொள்ளும் வார்த்தைகளில் ஒன்று . இங்கிலாந்தில் கால்சென்டர் ஆட்களை எப்படி உச்சரிப்பது இவரின் பெயரை ? என கதிகலங்க வைத்த வாடிக்கையாளர் ஒருவரின் பெயர் Tim Pppppppppprice. பாலூட்டிகளில் உயர் ரத்த அழுத்தம் கொண்டது ஒட்டகச்சிவிங்கி . இதயத்துடிப்பு என்பது மனிதர்களைப் போலவே இருக்கும் . ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் , முயலை வளர்க்க சட்டப்பூர்வ தடையுண்டு . 4 என்ற எண் மட்டுமே தன் பொருளுக்கேற்ப எண்ணிக்கையிலான எழுத்துக்களை கொண்டுள்ளது . மாமியார் மீது ஏற்படும் மனரீதியான எரிச்சல் பிளஸ் பயத்துக்கு Pentheraphobia என்று பெயர் .