இடுகைகள்

தேனீ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிட்ஸ் - தேனீக்கள்

படம்
  பூமியில் 20 ஆயிரம் தேனீ இனங்கள் உள்ளன. அன்டார்டிகாவைத் தவிர்த்து அனைத்து கண்டங்களிலும் தேனீக்கள் வாழ்கின்றன. 2 மி.மீ. நீளத்திற்கும் குறைவான தேனீக்களும் உண்டு. இதில் பெரியது, 4 செ.மீ. நீளம் கொண்ட வாலஸ் ஜெயன்ட் பீ.  தேனீக்களில் சில இனங்களைத் தவிர பிற தேனீ இனங்கள் (Honey bees, bumble bees, stingless bees) காலனியாக ஒன்றாக இணைந்து வாழ்கின்றன.  5 கி.மீ. தூரத்திற்கும் அதிக தொலைவுக்கு பயணித்துச் சென்று தேனைச் சேகரித்து கூடு திரும்புகின்றன.  அனைத்து தேனீக்களும் தேனை சேகரித்து வைப்பதில்லை. 7 தேனீ இனங்களே தேனை சேகரித்து வைக்கின்றன.  9 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் தேனீக்களிடமிருந்து தேனைப் பெற்று வருகின்றனர். உலகில் நடைபெறும் 75 சதவீத மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்களே முக்கியக் காரணம்.  National geographic kids Mar.2022

தேனீக்களை குணமாக்கும் தேன்!

படம்
  தேனீக்களை  காப்பாற்றும் வேதிப்பொருள்!  தேனீக்களை பூச்சிக்கொல்லி, பருவநிலை மாறுபாடு என பல்வேறு விஷயங்கள் பாதிக்கின்றன. கூடுதலாக வாரோவா எனும் ஒட்டுண்ணி(Varroa destructor) தேனீக்களை கடுமையாக தாக்குகிறது. இது, தேனீக்கூட்டிலுள்ள புழுக்களை உணவாக உண்பதோடு, உடலிலுள்ள  வைரஸ்களை தேனீக்களின் காலனிக்கும் தொற்ற வைக்கிறது. இதில் ஏற்படும் தாக்குதலால் தேனீக்களின் இறகு கடுமையாக பாதிக்கப்படுகிறது. வளரும் நிலையில் உள்ள பூச்சிகளுக்கு இறகு வளர்ச்சியில்லாமல் போய்விடுகிறது.  வைரஸ் தேனீக்களின் நினைவுகளையும் பாதிக்கிறது. இதனால் கூட்டை விட்டு தேனை தேட கிளம்பிய வேலைக்கார தேனீ, வீட்டுக்கு திரும்ப முடியாது. எப்படி வருவது என்பதை மறந்துவிடுவதுதான் காரணம். உணவு கிடைக்காததால், தேனீக்களின் கூட்டமே நிலைகுலைந்து அழியும் நிலை உருவாகும்.  தேனீக்களை தாக்கும் வைரஸ்களை அழிக்கும் வேதிப்பொருளை தேசிய தைவான் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. சோடியம் பூடைரேட் (Sodium butyrate) எனும் வேதிப்பொருளை தினசரி தேனீக்களுக்கு கொடுக்கும்போது அவை வலிமையாகின்றன. மனிதர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் போலவே இந்த வேதிப்பொருள் செயல்படுகிறது. இதன்

தேனீக்களுக்கான சரணாலயம்- கலக்கும் மோர்கன் ஃப்ரீமன்

படம்
  சூழல் சார்ந்த அக்கறைகளை பிரபலங்கள் செய்யும்போது அவர்களை அவர்களின் ரசிகர்களும் பின்பற்றுகிறார்கள். இந்த வகையில் ஆங்கிலப் பட நடிகரான மோர்கன் ஃப்ரீமன், தனது 124 ஏக்கர் பண்ணை நிலத்தை தேனீக்களுக்கான சரணாலயமாக மாற்றியுள்ளார். இவர் ஏற்கெனவே பல்வேறு சூழல் சார்ந்த ஆவணப்படங்களுக்கு உதவி வருகிறார்.  2004ஆம் ஆண்டு இவான் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கிரேனாடா என்ற பெயரில் நிதித்திட்டம் ஒன்றை உருவாக்கி உதவினார். தற்போது மிசிசிபியில் உள்ள தனது பண்ணையை அழிந்துவரும் தேனீக்களை பாதுகாக்க சரணாலயமாக மாற்றியுள்ளார். இதனை அவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்தார்.  2006ஆம் ஆண்டு உலகமெங்கும் தேனீக்கள் காலனி கொலாப்ஸ் டிஸ்ஆர்டர் என்ற பிரச்னையால் அழிந்து வருவதைக் கேள்விப்பட்டவுடன், தனது செயல்பாடுகளை தொடங்கிவிட்டார். தேனீக்களை அவற்றின் வீட்டிலிருந்து பிரித்து கொண்டு வந்து தனது பண்ணையில் வளர்க்க முயன்றார். இதற்காக லாவண்டர், மெக்னோலியா, குளோவர் ஆகிய தேனீக்களைக் கவரும் மரக்கன்றுகளை நட்டார். வாட்ஸ் பாசிபிள் என்ற ஆவணப்படத்தை தயாரித்து ஐ.நா அமைப்பில் திரையிட உதவினார். அமெரிக்காவிலுள்ள விவசாயத்துறை ச

இந்திய நிறுவனங்கள் சுகர் சிரப்பை தேனில் கலந்து விற்கும் கொடுமை! - கலப்பட வணிகத்தில் கொடி கட்டும் இந்திய நிறுவனங்கள்

படம்
                    கலப்படத் தேன் ! அ்ண்மையில் நாளிதழ்களில் டாபர் , மாரிகோ ஆகிய நிறுவனங்கள் தங்களின் தேன் தாயின் பாலைப் போல பரிசுத்தமானது என விளம்பரப்படுத்துவதை பார்த்திருப்பீர்கள் . அண்மையில் ஜெர்மனி நிறுவனம் செய்த என்எம்ஆர் சோதனையில் டாபர் தேன் தோற்றுப்போயுள்ளது . இந்த சோதனையில் சபோலாதேன் வென்றுள்ளது . ஆனால் இந்தியளவில் நடைபெறும் என்ஆம் ஆர் சோதனையில் டாபர் வென்றுள்ளது . எப்படி ? அதுதான் இந்தியன் மேஜிக் .   கலப்படம் செய்து சோதனையில் தோற்ற தேன் நிறுவனங்கள்! தேனில் நுணுக்கமாக கலக்கப்படும் சுகர் சிரப் சீனாவிலிருந்து தருவிக்கப்படுகிறது . இந்த நிறுவனங்கள் இதனை பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது . இந்தியாவின் உணவுத்தர அனுமதி ஆணையம் இதுதொடர்பான விதிகளை இயற்றினாலும் , சோதனைகள் லஞ்சங்களைப் பெற்றுக்கொண்டு நடத்தப்பட்டுள்ளன . இதனால்தான் 13 நிறுவனங்கள் பங்கேற்ற என்எம்ஆரில் சில நிறுவனங்கள் மட்டுமே பாஸாகி உள்ளன . இதனால் டாபர் நிறுவனம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . அதன் விளம்பரங்களில் உள்நாட்டில் சோதனைகளில் வென்ற நிறுவனம் என விளம்பரம் செய்யப்படுகிறது . தேனில்

தேனீக்களைக் காப்பது எப்படி?

படம்
ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி தேனீக்களின் பெருக்கத்திற்கு நாம் எப்படி உதவுவது? பொதுவாக நாம் சூப்பர் மார்க்கெட்டுகளில்  வாங்கும் தேன் அனைத்தும் இறக்குமதி ரகத்தைச் சேர்ந்தவை. இதனால் உள்ளூர் மார்க்கெட்டுகளுக்கு காசு தவிர வேறெந்த லாபமுமில்லை. குறிப்பாக, சீனாவிலிருந்து பெருமளவில் தேன் இறக்குமதியாகி வருகிறது. தேனை அறுவடை செய்வதால் தேனீக்களுக்கு பிரச்னையில்லை. நீங்கள் தேனீக்களுக்கு உதவுவது என்றால், பூச்சிமருந்து தெளிப்பதை தவிர்க்க வலியுறுத்தலாம். அதுவே தேனீக்களைக் காக்கும். தேனை கடையில் வாங்கும்போது உள்ளூரைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்க எந்த கலப்படமில்லாத, சுவையூட்டி சேர்க்கப்படாத தேனை வாங்கலாம். நன்றி: பிபிசி image:  exchange.prx.org