இடுகைகள்

திருவிழா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜாலி திருவிழாக்கள்! - கால்களால் போட்டியாளரின் காலைத் தோற்கடித்தால் வின்னர்!

படம்
  வீடு, ஆபீஸ் என உழைத்தாலும் கிடைக்கும் நேரத்தில் வாழ்க்கையை அனுபவிக்க கற்றுத்தருபவை திருவிழாக்கள்தான். உறவுகள்,நட்புகள் ஒன்றுசேர்வதோடு, ஆடியும் பாடியும் மகிழ்ந்து விடுமுறையைக் கொண்டாடுவது உடலுக்கும் மனதையும் உற்சாக டானிக்.  அப்படிப்பட்ட சில வினோத விழாக்களில் சில.   லா டொமாட்டினோ (ஸ்பெயின்) ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் தக்காளித் திருவிழாவை உலகமே இன்று கவனிக்கத் தொடங்கிவிட்டது. வாலென்சியா அருகிலுள்ள புனோல் கிராமத்தில் தக்காளி கொண்டு வந்து குவிக்கப்படுகிறது. உடனே பாய்ந்து தக்காளியைக் கையில் எடுக்கும் மக்கள், ஒருவருக்கொருவர் வீசி எறிந்து விளையாடுவார்கள். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதற்காகவே ஸ்பெயினில் குவிகிறார்கள். ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கடைசி புதன் கிழமை தொடங்கும் இவ்விழா பெரும் புகழ்பெற்றது.  பர்னிங் மேன் (அமெரிக்கா) அமெரிக்காவின் ரெனோ நகருக்கு அருகிலுள்ள பாலைவனத்தில் பர்னிங் மேன் திருவிழா நடைபெறுகிறது. இருவாரங்கள் நடைபெறும் திருவிழாவுக்கு உலக நாடுகளிலிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள்  குவிகின்றனர்.  இதில் பல்வேறு கலைஞர்கள், புதுமையான கலைப் படைப்புகளை உருவாக்கி காட்சிக்கு வைக்கின்

இந்த வாரத்தில் நடைபெறும் விழாக்கள்!

படம்
இந்த வார விழாக்கள்! தாஜ் மகோத்சவ் பிப்.18 – -27 உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழா. இந்தியக் கலாசாரம், கைவினைப் பொருட்கள், உணவுத் திருவிழா, ஒட்டகச் சவாரி என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வெளிநாட்டினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். மாசாட்டு மாமங்கம் பிப்.20 கேரளத்தின் திரிச்சூர் மாவட்டத்தில் திருவானைக்காவு கோவிலில் நடைபெறும் விழா. ஐந்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், குதிரகோலம் எனும் குதிரை பொம்மைகளை உருவாக்கி பிரமிக்க வைக்கிறார்கள். மாலையில் இங்கு பாரம்பரிய யானைகளின் அணிவகுப்பு  முக்கிய அம்சமாகும். கஜூராகோ நடனத் திருவிழா  பிப்.20 – -26  1975ஆம் ஆண்டிலிருந்து கஜூராகோவிலுள்ள கோவில்களின்  பின்னணியில் நடைபெறும் நடனத் திருவிழா. மத்தியப் பிரதேசத்திலுள்ள கஜூராகோவின் விஸ்வநாத, சித்ரகுப்தா கோவில்களில் நடனங்கள் நடத்தப்படுகின்றன. அனுமதி இலவசம். மகா சிவராத்திரி பிப்.21 இந்தியாவிலுள்ள சிவபக்தர்கள் கொண்டாடும் விழா. சூரிய உதயத்தில் எழுந்து, விரதமிருந்து கங்கை ஆற்றில் குளித்துவிட்டு சிவனின் கோவில்களுக்குச் செல்வார்கள்.