இடுகைகள்

சைதன்யா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கனவை நிறைவேற்ற உதவியவர்களை தேடிச்சென்று நன்றி சொன்னால்... தேங்க்யூ - விக்ரம்குமார்

படம்
  தேங்க்யூ சைதன்யா அக்கினேனி, மாளவிகா நாயர், ராஷி கண்ணா தனது குறிக்கோளில் சமரசமே இல்லாமல் முன்னேறுபவன், அதற்காக உறவுகளை உதறித்தள்ளினால் என்னாகும் என்பதே தேங்க்யூ. படம் மனிதர்களைப் பற்றிய நல்லுணர்வுகளை ஏற்படுத்த முயல்கிறது. அந்த வகையில் பாராட்டத்தக்கது. அபிராம் வைத்யா என்ற ஆப் ஒன்றை உருவாக்குகிறார். அவர் அமெரிக்காவில் வேலையில் சேரவே வருகிறார். ஆனால் அங்கு வந்து ஸ்டார்ட்அப்பாக வைத்யா நிறுவனத்தைத் தொடங்கி வெற்றி பெறுகிறார். இதற்கான முதலீட்டை அவரது   அபியின் காதலியும் எதிர்கால மனைவியுமான பிரியா கொடுக்கிறார். நாட்கள் செல்ல செல்ல நான்தான் அனைத்தையும் செய்தேன். இதில் பிறருக்கு எந்த பங்கும் இல்லை என்ற ஈகோ அபியிடம் தலைதூக்குகிறது. இதனால் நிறுவனத்தை தொடக்க காலத்தில் உருவாக்கிய   தன் நண்பர்களை வேலையில் இருந்து தூக்குகிறான். நாம் சாதித்தோம் என்பதை தான் சாதித்தேன் என மீட்டிங் ஹாலில் உள்ள போர்டில் மாற்றி எழுதும் அளவுக்கு தலைகனம் உச்சத்திற்கு செல்கிறது. இதனால் பிரியா அபியை விட்டு விலகுகிறாள்.   ஒன்றாக சேர்ந்து வாழ்வதால், உறவிலிருந்து விலகும்போது பிரியா கர்ப்பமாக இருக்கிறாள். அதைக்கூட அபியிட

மாமா மாப்பிள்ளை பாச கிளிஷே காவியம் - வெங்கி மாமா!

படம்
வெங்கி மாமா - தெலுங்கு இயக்கம் - கே.எஸ். ரவீந்திரா கதை - ஜனார்த்தன் மகரிஷி ஒளிப்பதிவு - பிரசாத் முரல்லா இசை - தமன் எஸ்எஸ் ஆஹா... வெங்கடேஷ்தான் பளபளக்கிறார். படத்தின் முதல் காட்சி தொடங்கி கண்ணீர் மல்க தான் வளர்த்த மாப்பிள்ளை மீதே புகார் சொல்வதை பார்ப்பது என மனதில் நிற்பது இவர்தான். நாக சைதன்யா கேரக்டர் கூட மனதில் நிற்கவில்லை. குடும்பமாக இருக்கும் ஆட்கள். பாசம், மாமா, மாப்பிள்ளை என பேசுவது இதுதான் படத்திற்கான ஈர்ப்பாக உள்ளது. மற்றபடி கதையில் உறுதியான எந்த விஷயமும் இல்லை. தமனின் இசையில் ரெட்ரோ பாடல்கள் ஈர்க்கின்றன. ஐயய்யோ கதை, திரைக்கதை எல்லாமும்தான். ராசி கண்னா ட்ராக் பொறுமையை சோதிப்பது போல உள்ளது. படத்தில் ஜாதகம்தான் சிக்கல் என்றால் அதனையே முதன்மையாக வைத்து இருக்கலாம். ஜாதகம் அறிமுகமாவதற்கு முன்னாடியே ராவ் ரமேஷ் வில்லனாக புரமோஷன் வாங்கிவிடுகிறார். அப்புறம் ஜாதகம் என்ன செய்யப்போகிறது? பயிற்சி பெற்ற வீர ர்களை சாதிக்க முடியாததை, மாப்பிள்ளை மீது பாசம் கொண்ட வெங்கடேஷ் எப்படி சாதிக்கிறார்? இதெல்லாம் கேட்டால் அங்கு பனிமலை முகடுகளில் ... என பேசுவார்கள். பாச